அனிச்சமலரானேன்
முகர்ந்தரலே மூச்சுக் காற்றில்
முகம் வஈடும் அனிச்ச மலரொத்தேன்
மனத்திடமற்று பிறர் அரட்டலுக்கு
மென்மையான தொட்டாற் சிணுங்கியானேன்.
ஆன்மீகத்தைத் தொட்டாலும் மனம்
அலைபாய்ந்து துவண்டு நிற்கின்றது .
கவனம் சிதறுகிறது பாரதி கூற்றுபடிக்
கவலை என்னைத் தின்னத்தகாது.
அன்போடு ஆதரிக்கும் அன்பர்களை
மனத்தால் அரவணைக்கும் மாந்தர்களை
எட்ட நின்று அழகை ரசிக்கும்
எளிய மனம் கொண்டோரை
கண்டு மனம் மகிழ்ந்து
களிக்கின்ற மலராம்.
சுடும் சொற்கள். தாங்காமல்
நெருங்கி வந்து தொடுமுன்னே
நெருப்பாகி எண்ணி வாடிவிடும்
அனிச்ச மலரானேன்.
ஆலோசனைகள் பல வந்ததுவே!
அவையேதும் அணு அளவும்
அணுகவில்லை என்னை
ஆண்டவனை வேண்டி
அனுதினமும் என்மனம்
அலைகின்றது ,ஆழ் மனத்தில்
அமைதி வேண்டுகிறது எனினும்
சூடு தாங்கா அனிச்ச மலரானேன்!
சாந்தா வெங்கட்