அடங்கித்தான் போகிறார்கள்

தன்னால்
இயலாதென்ற
எண்ணத்தை
ஊட்டி வளர்த்து
பயிற்சி கொடுத்து
பழக்கும் யானை
சிறு கயிறுக்குக்
கட்டுபடுவதுபோல்
அரசியலார் தரும்
இலவசத்தாலும்
பணம் கொடுத்து
பழக்கும்
வாக்காளர்கள்
அடங்கித்தான்
போகிறார்கள்

எழுதியவர் : கோ. கணபதி. (3-Feb-19, 7:12 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 62

மேலே