பெப்ரவரி பதினாலு

பெப்ரவரி பதினாலு
====================================ருத்ரா

அதோ
பட்டாம்பூச்சிகளின் வானம்.
வண்ணப் பிரளயத்தில்
எங்கும் எதிலும்
இதயத்துடிப்புகள்.
சூரியனே
எழுந்திருக்க முடியவில்லை!
அவன் கனவுக்குமிழிகளே
அண்டம் நிறைத்தது.
பூமியில் அவனால்
காதலிக்கப்பட்ட மலர்கள் எல்லாம்
எச்சில் பட்டன என்று
வண்டுகள்
புறக்கணித்த பூங்காக்களில்
இந்தக்காதலர்களும்
உலா வரவில்லை.
இமைகளின் உவமைகளுக்கு
வண்டுகளின் சிறகுகள் இல்லாததால்
காதலிகளின் கண் சிமிட்டல்கள் இல்லை.
வெறிச்செனக்கிடக்கிறது!
காதலின் பொன்னுலகம்.

================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (6-Feb-19, 3:25 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 364

மேலே