நான் யார்
நான் விஞ்ஞானி
உணர்வுகள் கண்டெடுப்பதால்!
நான் மருத்துவன்
மனந்திறந்து சிகிச்சை செய்வதால்!
நான் பொறியாளன்
கனவுகளை கட்டமைப்பதால்!
நான் கணிதன்
எண்ணங்களை எண்ணுவதால்!
நான் கவிஞன்
கற்பனைகள் சுமப்பதால்!
நான் அறிஞன்
அறியாமை அழிப்பதால்!
நான் உழவன்
உலகை உயிர்பிப்பதால்!
நான் நானாய்
இக்கவிதையை பகிர்வதால்!