உன் முகம் பார்க்க துடிக்குதடி என் இதயம் 555

என்னுயிரே...தினம் ஒருமுறையேனும்
உன்
முகம் பார்க்கும் ஆசையில்...


நீ குடிஇருக்கும் வீதி
வழியே
உலா வருகிறேன்...


ஜன்னல் திறந்திருந்தால்

சிகையாக நிற்கிறேன்...


உன் எதிர் வீட்டு

ஜன்னலை போல...


நீ கல்லூரி
செல்லும்
போதெல்லாம்...


அதோ அந்த மரத்தடியில்தான்

கால் வலிக்க நிற்கிறேன்...


உன் தோழிகள்

உன்னை சூழ்ந்துகொள்ள...


பலநாட்கள் உன் முழுமுகம்

பார்க்காமலே நான்...


தினம் தினம் நூறுமுறை

உன் முகம் காட்டுகிறாய்...


உன் வீட்டு

கண்ணாடிக்கு மட்டும்...


உன்னை பார்க்க விருப்பமா

இல்லையா என்று தெரியாமலே...


உன்னை மட்டும் பார்க்க

துடிக்கும் எனக்கு மட்டும்...


முகம் காட்டாமலே

ஏனடி கண்ணே கொள்கிறாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Feb-19, 4:36 pm)
பார்வை : 644

மேலே