கருவறையா கல்லறையா

கல்லறையில் ஓர் நெற்கதிர்
மண்ணறைக்குள் வாழ்வது ஓர்
பெண் சிசு....
அம்மா' என் பிஞ்சு விறல் பதிய
இம்மண்ணுலகில் இடமில்லையோ jQuery171047296866857488495_1549536810177?
இறைவன் பெண்ணுக்கு
இவ்வுலகை படைத்திடவில்லையோ ???
குடிசையில் பிறந்ததாலே என்னை
நெற்பயிரில் நெறுக்கினாயோ ???
கோட்டைக்குள்ளும் கால் பதிக்கும்
காலம் இப்போ வந்ததம்மா .....
பெண்ணாக பிறந்ததாலே
என்னை கண்ணீரில் கரைத்து விட்டாயோ ??

எழுதியவர் : நிஷு (7-Feb-19, 4:58 pm)
சேர்த்தது : Nishu
பார்வை : 60

மேலே