ஆசை, ஆசை
அழகிய வானம் அளந்துவரஆசை
நீல வண்ண நிறத்தை அள்ளிவரை ஆசை
நீந்துகின்ற மின்மினிகள் சேர்த்து வைக்க ஆசை
வண்ண நிலவை தொட்டுவிட ஆசை
அலைந்து திரியும் மேகங்களை நிறுத்திவைக்க ஆசை
சூரியனின் வெப்பநிலை குறைத்துக் கொள்ள ஆசை
கூடிவரும் கருமேகங்களை பிழிந்துகொள்ள ஆசை
மழைநீரை என்கணக்கில் வைத்துக் கொள்ள ஆசை
பெருங்காற்று புயல் சுனாமி தடுத்துவிட ஆசை
வாசமுள்ள பூங்காற்று பூமியிலே வீசிநிற்க ஆசை
வண்ண வண்ண பூக்களெல்லாம் வான் முகம் பார்த்துநிற்க ஆசை
பஞ்சமில்லா மனித வாழ்வு செழித்து நிற்க ஆசை
அண்ணார்ந்து பார்க்கின்ற எந்தனுக்கோ ஆசை
என் கணக்கில் இத்தனையும் வைத்துக் கொள்ள ஆசை