மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மகிழ்ந்திருத்தல்
என்பது
வரம்.

மனது
நிறைகிறபோது
நிறைகிறது
மகிழ்ச்சியும்.

எல்லைக்கோடுகளை
விதித்துக் கொள்பவர்களை
நெருங்குவதே இல்லை
மகிழ்ச்சி.

தாயின்
பேரன்பினால்
கிடைத்த
மகிழ்ச்சியை
மிஞ்சியது
எதுவும் இல்லை
உலகில்.

கற்றைகளில்
கிடைக்கும்
சுகம்
நொடிப்பொழுதில்
கரைந்துவிடுகிறது.

காதல்
பின்
இல்லறம்
மழலையர்
என்பவை
மகிழ்ச்சிக்கான
சங்கிலிகள்...
அணைத்துக்கொள்வதும்
பிணைத்துக்கொள்வதும்
பிரித்துக்கொள்வதும்
அவரவர் பொருட்டு
நிகழ்பவை.

இறைவர்களை
கண்டவர்
எவருமில்லை.
ஏழைகளின்
சிரிப்பிலும்
இறைவரைக்
காணாவிட்டாலும்
பொழியும்
மகிழ்ச்சி
மழை.

மழலையர்
பருவத்தில்
கிடைக்கும்
மலையளவு
மகிழ்ச்சி
முதிர் பருவத்தில்
முடியளவு
உதிர்ந்து விடுகிறது.

இடைவெளிகளில்
நிகழ்ந்தவை
நிகழ்த்தப்பட்டவையே
அன்றி
நிகழ்ந்தவை
அல்ல.

வாக்கையும்
வாக்கையும்
நாணயத்தால்
வாங்குபவர்களும்
விற்பவர்களும்
இழப்பது
நாணயத்தை மட்டும்...
மதிப்பிழந்து
போனபிறகு
எத்தனைமுறை
தேய்த்தாலும்
நிறம் மாறும்
பித்தளை.

இழப்புகளால்
மட்டும்
துயரங்கள்
துவள்தில்லை
சிறுசிறு
காயங்களாலும்
காயங்களாலும்
துவண்டுவிடுகின்றன.

மனிதர்கள்
அள்ளிஅள்ளி
வாழ்ந்திட
இயற்கை
இருகரம் கூப்பி
அழைத்துக்
கொண்டே
இருக்கிறது.

மனிதன் தான்
தனது
கரங்களை
வெட்டிக்கொண்டும்
மரத்தின் கிளைகளை
வெட்டிக்கொண்டும்
உதிர்ந்துவிடுகிறான்.

கீழே விழும்
சிறு ரொட்டித் துண்டுக்காக
மகிழும்
மழலையின்
மகிழ்ச்சி
சிலருக்கு
வெள்ளிக்கிண்ணம்
என்றாலும்
எதிரொளிக்காது.

ஈகையில்
கிடைக்கும்
நிறைவு
மகிழ்ச்சிக்கான
விதைகள்.

விடுவது தான்
விடுதலை.
தாள்களையும்
தளைகளையும்
விடவிட தான்
விளையும்
மகிழ்ச்சியும்.

-சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (6-Feb-19, 12:05 pm)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : magizhchi
பார்வை : 168

மேலே