முதுமொழிக் காஞ்சி 74
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது. 4
- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன் மறையச் செய்ததொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது.
கருத்து கோட்சொல்லும் இயல்புடையோர் பிறருடைய இரகசியங்களை எளிதில் வெளியிடுவர்.
குறளை - புறங்கூறுதல். மறை - மறைவானது, இரகசியம்.
விரி - (விரித்தல்) முதனிலைத்தொழிற்பெயர்: பரப்புதல் : பலர் அறியச்செய்தல்.