மாதவிப் பொன் மயிலாள் - கரகரபிரியா

இரு மலர்கள் (1967) என்ற திரைப்படத்தில் தமிழ்க் கல்லூரி நாடக விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் கதாநாயகன் சிவாஜி கணேசன் பாட, நாட்டியப் பேரொளி பத்மினி நாட்டியம் ஆடுகிறார். முதலில் மயில் பீலியை அணிந்து விரித்தும், பின்பு நாட்டிய உடையிலும் ஆடும் நாட்டியம் மிகவும் அருமை. பத்மினி சற்று அதிகமாகவே எடை போட்டிருக்கிறார். நடிகர் திலகத்தின் நடிப்பு சொல்லவும் வேண்டுமா! அருமை!

கவிஞர் வாலி இப்பாடலை எழுத, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன் கரகரபிரியா ராகத்தில் பாடலை அருமையாகப் பாடியிருக்கிறார். யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் (மாதவிப்பொன்)

காதல் மழை பொழியும் கார் முகிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலாய் - இவள்
காதலன் நான் இருக்க பேரெழிலாய்

காதல் மழை பொழியும் கார் முகிலாய்
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய் - இங்கே
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள் (வானில் விழும்)

கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட (கூனல் பிறை)

கலை மானின் இனம் கொடுத்த விழியாட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட

நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

(ஸ்வரம்)
மாதவிப்பொன் மயிலாள்

(ஸ்வரம்)
மாதவிப்பொன் மயிலாள்

(ஸ்வரம்)
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

(ஜதி).....
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-19, 1:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 517

சிறந்த கட்டுரைகள்

மேலே