உன்னோடு என் ஆசை
உன்னோடு என் ஆசை❣
கைகள் கோர்த்து நிலவைப் பார்த்து கதை பேச வேண்டும்.
நிலவின் ஒளியில் நெடுந்தூரம் நடக்க வேண்டும்.
இரவின் அமைதிக்கு உன் கொலுசு சத்தம் இசையாக வேண்டும்.
உன் காதோரம் என் மூச்சுக்காற்று உரச வேண்டும்.
என் கதை முடிக்க உன் கதை தொடங்க இரவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
பயணம் தொடங்கியது எங்கே முடிந்தது எங்கே என்று தெரியாமல் இரவைக் கடக்க வேண்டும்.....