காதல்

மோகமும் காமமும்
உடலைத்தாக்கும் , தீண்டும்
மிதமாய் இருப்பின்
இன்பமானவை, அளவுக்கு மீற
துன்பமானவை துன்பமே தருபவை
காதல் , இதற்கு மறுபெயர் அன்பு
உருவமில்லா உணர்வு இது
மனதில் உதித்து மனதிலே உறையும்
காலத்தையும் வென்றது
காதலர்கள் மறைந்தொழிந்தாலும்
அவர்கள் காதல்...... அதற்கேது மறைவு
தாயும் தந்தையும் மக்கள் மீது
செலுத்துவது காதல்
நண்பன்மீது நண்பனுக்கு காதல்
காதலன் காதலியோடு இணைவது காதல்
இறைவனோடு நாம் கொள்வது காதல்
இறைவன் நம் மீது பொழிவதும் காதலே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Feb-19, 1:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே