என் கனவுகளைக் கொடு

சாலையோரக் கடையில் தேநீர் வாங்குவதற்குள்
பருகிவிட்டுச் செல்கிறாய் விழியால் உயிரை.
சோலையோர நடையில் இளைப்பாற நினைப்பதற்குள்
இளைப்பாறி விடுகிறாய் தெளிவாய் மனதில்
=
உன்னைப் புரிந்து கொள்ள முடியாமல்
புலம்பித் திரிகிறேன் பித்தனைப் போலே
என்னைப் புரிந்து கொள்ளக் கூடாதென
புரிந்து இருக்கிறாய் எத்தனை அழகாய்.
==
உணவு உண்டபின் ஒரு ஆட்டைப்போல்
அசைபோட்டுப் பார்க்கிறேன் உன் நினைவுகளை
உறங்கச் சென்றதும் பெரும் மூட்டைப்பூச்சென
கடித்து வைக்கிறாய் என் கனவுகளை.
==
என்னுடைய உறக்கத்தையும் வாங்கி நிம்மதியாய்
உறங்குகிறாய். போகட்டும் விட்டு விடுகிறேன்
என்னுடைய கனவுகளையேனும் என்னிடம் கொடு
அதிலேனும் தாலி கட்டி விடுகிறேன்.
==
கஸல் துளிகள் – மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Feb-19, 2:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 267

மேலே