ஆற்றல் உடையார்க்கும் ஆகாதளவின்றி ஏற்ற கருமஞ் செயல் – மூதுரை 11

நேரிசை வெண்பா

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல். 11 – மூதுரை

பொருளுரை:

உமி நீங்குதற்கு முன்னே முளைப்பது உமி நீக்கப் படாத அரிசியே ஆனாலும் உமியை நீக்கியபின் அந்த அரிசி முளைக்காது;

அதுபோல தாம் அடைந்த வல்லமை பெரிதாக உடையவர்க்கும், தகுந்த துணை வலிமை இல்லாமல் எடுத்துக் கொண்ட செயலை செய்து முடிப்பது எளிதில் இயலாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-19, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே