காதலர் தினம்

வளமான இந்நாட்டின் பாரம்பரியம்
மகோன்னதமானது-இங்கு
ஓர் தகுதியான ஆணும் பெண்ணும்
மணமேடை ஏறி மணம்முடித்தப்பின்
கணவன்-மனைவி என்ற ரத்தமும் தராத
புதிய உறவை உருவாக்கிக்கொண்டு
வாழ்க்கைப் பாதையில் காதல் பயணம்
துடங்கிடுவார் , இருவரும் சேர
பிள்ளைகள் பெற்றேடுத்து ரத்த பாசங்கள்
வந்து சேரும் குடும்பத்தை கட்டி அணைக்க
எத்தனையோ சிறு சிறு சண்டை, பூசல்கள்
ஊடல்கள் என்று சிறு முட்கள் வந்து தைத்தாலும்
கணவன்-மனைவி காதல் உறவு ஒரு போதும்
உடைவதில்லை .......இங்கு ஒவ்வோர் நாளும்
இவர்கள் நடத்தும் வாழ்வு காதலர் தினமே
இங்கு காதல் என்பது இருவரைப் பிணைக்கும்
மேலான அன்பு, காமமோ, மோகமோ அல்ல
அன்பின் அடிப்படையில் வளரும் காதல்
அழிவில்லாக காதலாய் வளரும் இவர்கள்
கணவன்-மனைவியாய் வாழ்ந்த நாட்கள் வரை
அவர்கள் இயற்கை எய்திடினும் அதன் பின்னே
அவர்கள் விட்டுவிட்ட சென்ற சொத்தாய்
அன்பு தலைமுறை தலை முறையாய் தொடர

நம் நாட்டில் தினம் தினமும் காதலர் தினமே
அன்பில் பிணைந்த ஆணும் பெண்ணிற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-19, 10:37 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 1113

மேலே