ரேனுஸ்ரீ-பகுதி 6
வாழ்த்து அட்டை வெண்ணிறத்தில் அழகிய மூன்று சிவப்பு நிற ரோஜாகளின் படத்தை கொண்டதாக இருந்தது.
பானு ஸ்ரீ அவரு நேத்து எந்த கலர் டிரஸ் போட்டு இருந்தாரு?என்று கேட்டேன்.
அவள் யோசித்த படி அது......என்று இழுத்து விட்டு ஹா blue colour shirt போட்டு இருந்தாரு என்று கூறினால்.
ஓ, அப்ப நேத்து நம்ப பார்த்த முகம் தெரியாத யாரோ ஒருத்தனுடைய பெரு ஸ்ரீ போல என்று நினைத்தேன்.
எதுக்காக கேக்குற?என்றால் பானு.
இல்ல நேத்து நம்ப கிளாஸ் கு ரெண்டு பேரு வந்துட்டு போறத பார்த்த,அதுல ஒருத்தர் blue shirt போட்டுட்டு இருந்தாரு,அதா அவரா இருக்குமோனு கேட்ட?
ஆமா,அது ஸ்ரீ அண்ணாதா,என்றால்.
நா அவருக்கு thanks சொன்னனு சொல்லிடு என்றேன்.
சரி,என்றால்.
அன்று வீட்டிற்க்கு சென்ற பிறகு ஸ்ரீ கொடுத்த வாழ்த்து அட்டையை பலமுறை எடுத்து எடுத்து பார்த்தேன்,பார்த்துக்கொண்டே இருந்தேன்.சொல்ல தெரியாத ஏதோ ஒரு புது உணர்வு,மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
அவன் கொடுத்ததை மட்டும் வாங்கிக்கொண்டோம்,நாமும் இதே போல திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
என் அம்மாவிடம் சென்று,அம்மா எனக்கு ஒரு கிரீட்டிங் கார்டு வேணு என்று கேட்டேன்.
எதுக்கு டி ,என்றார்
என்னோட friends christmas ,new year ,கு wish பண்ணி கிரீட்டிங் கார்டு குடுத்து இருக்காங்க நானு பதிலுக்கு குடுக்கனு என்றேன்.
சரி.இப்பதான சொல்லி இருக்க ஏற்பாடு பண்ற என்றார்.
அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்,மறுநாள் எழுந்தவுடன்
ஸ்ரீயின் நியாபகமும்,அவனுக்கு வாழ்த்து அட்டை கொடுக்க வேண்டும் என்ற நியாபகமும் வந்தது.
என் அம்மாவை தேடி சென்று கிரீட்டிங் கார்டு கேட்டேனே என்ன ஆச்சு?என்றேன்.
christmas ,new year கு,லா இன்னொ நாள் இருக்கு,ஸ்கூல்கு போய்ட்டு வா தர,இப்போ போய் பல்ல விலக்கு போ என்றார்.
அன்று பள்ளிக்குள் நுழையும் போது prayer bell அடித்து கொண்டிருந்தது,prayer bell எப்பொழுதும் 8 .55 க்கு அடிக்கும்,மணி அடித்த பிறகு அனைவரும் prayer க்கு நிற்க்க ஆரம்பித்து விடுவர்,ஒன்பது மணிக்கெல்லாம் prayer ஆரம்பித்துவிடும்.
வேகமாக வகுப்பறையை நோக்கி சென்று கொண்டிருந்தேன்,
அப்போது பானு யாரிடமோ வகுப்பறைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.
அவர்களை பார்காதது போல வகுப்பிற்குள் நுழைய இருந்தேன்.
ரேணு...,என்று அழைத்தால் பானு.
அவளை பார்த்து புன்னகித்தேன்.
good morning என்றால்.
good morning என்றேன்.
ஏ இன்னைக்கு லேட் என்று கேட்டால்.
எழுந்தது லேட்டு அதா..என்றேன்.
இதா ஸ்ரீ அண்ணா என்று கூறி அவள் முன்பாக நிர்ப்பவனை காட்டி அறிமுகபடுத்தினாள்.
என் மூச்சை இறுக்கி பிடித்து தலையை திருப்பி அவனை பார்த்தேன்.
அவன் முகம் தெளிந்த நிறை போன்று இருந்தது,உறுதி கொண்ட அன்பான பார்வையை காண்கையில் ஒரு ஞானியின் முன் நிர்ப்பது போல இருந்தது,கதிரவனின் கதிர்கள் அவன் மீது ஒளிறிக்கொண்டிருந்தது,அவனது கருங்கூந்தலுடன் தென்றல் விளையாடி கொண்டிருந்தது,மற்றும் வயதிற்க்கு ஏற்ற உயரம் கொண்டவனாக இருந்தான்.
அவனது முகம் எனது இரு கண்களை எங்கும் நகர விடாமல் செய்தது,அவனும் என்னையே பார்த்தபடி நின்றான்.
பள்ளி காவலாளி விசில் அடித்து அனைவரையும் prayer கு செல்லுமாறு கூறினார்.
ஏனோ என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை,
bag வெச்சுட்டு வர என்று பானுவை பார்த்து கூறிவிட்டு,ஸ்ரீ யை ஒரு பார்வை பார்த்துவிட்டு புன்னகைத்தபடி வகுப்பறைக்குள் சென்றேன்.
அன்று பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்றபிறகும் புன்னகித்தபடி இருந்தேன்.
அதிசயமா இருக்கு எப்பவோ மூஞ்ச உம்முனு எதையோ தொலச்சமாரி வெச்சு இருப்ப,ஆனா இன்னைக்கு சந்தோஷமா இருக்க என்ன விஷையோ?என்று கேட்டார் அம்மா.
ஆமா...,சிரிச்சா சிரிக்குறன்னு சொல்ற,சிரிக்கலனா சிரிக்க மாட்டேன்றணு சொல்ற,போமா என்று கூறினேன்.
சரி...கிரீட்டிங் கார்டு கேட்டியே இந்தா என்று இரெண்டு மூன்று வாழ்த்து அட்டையை கொடுத்தார் அம்மா.
thank you மா,என்று மகிழ்ச்சியாக கூறி வாழ்த்து அட்டையை வாங்கி பார்த்தேன்.
அம்மா....!எந்த காலத்து கிரீட்டிங் கார்டு மா இதெல்லா?என்று கேட்டேன்.
அதுவா நா ஸ்கூல் படிக்கும் போது வாங்குனது,இவ்வளவு வருஷமா பத்தரமா வெச்சு இருந்த என்று பெருமையோடு கூறினார்.
பாக்க போஸ்ட் கார்டு மாரி இருக்கு என்றேன்.
அதனால என்ன பாக்க நல்லாதான இருக்கு,எல்லா இது பொது போய் குடு,என்றார்.
எனக்கு வேண்டா நீயே வெச்சுக்கோ என்று கூறினேன்.
எதோ நீ கேட்டியேனு தேடி கொண்டு வந்த,வேண்டான போடி,
ஏதோ உங்க அம்மா "இதாவது செய்றா",இதே எங்க அம்மாவை இருந்தா "படிக்க அனுப்புனா நல்லா படுச்சு மார்க்ஸ் கார்டு கொண்டு வந்து காட்டாம கிரீட்டிங் கார்டா கேக்குறனு ஓதச்சு
இருப்பாங்க"என்று கூறினார் அம்மா.
பொது கிரீட்டிங் கார்டு ரொம்ப நல்லா இருக்கு,ரொம்ப சந்தோஷோ நீ போய்ட்டு டிவி பாரு போ என்று என் அம்மாவை பார்த்து கூறினேன்.
அதன் பிறகு வாழ்த்து அட்டைகளில் ஒன்றை தேர்தெடுத்தேன்,அதன் முன்பக்கம் பூ தோட்டத்தை படமாக கொண்டிருந்தது,மறுபக்கம் to என்று போட்டு மூன்று கோடுகள் இருந்தன.
அதில் அவன் பெயரை எழுதி,ஸ்ரீ கொடுத்த வாழ்த்து அட்டையில் எவ்வாறு எழுதி இருந்ததோ அவ்வாறே எழுதி இப்படிக்கு ரேணு என்று என் குறும்பெயரை எழுதினேன்.
இதை நாளை பானு இடம் கொடுத்து ஸ்ரீயிடம் கொடுக்க கூறவேண்டும் என்று நினைத்தேன்.
மறுநாள் காலை எழுந்தவுடன் ஸ்ரீ கொடுத்த வாழ்த்து அட்டைதான் கண்ணில் பட்டது,காரணம் நேற்று அதை தலையணையின் கீழ் வைத்து விட்டு தூங்கியதுதான்.
மணி என்னவென்று பார்த்தால் 7 .30 ,சென்று குளித்து தயாராகி வந்து மணியை பார்த்தேன் மணி 8 .20 ஆயிற்று.
வீட்டில் யாருடைய நடமாட்டமும் இல்லை,மற்றொரு படுக்கை அறையை சென்று பார்த்தேன் அப்பாவும்,அண்ணனும் உறங்கி கொண்டிருந்தனர்.
என்ன இது தினமும் சீக்கிரமாக எழுபவர்கள் இன்று எட்டு மணி மேல் ஆகியும் எழவில்லையே என்று யோசித்தபடி ஏன் அம்மாவை தேடி சென்றேன்.
அம்மா வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்தார்.
என்னமா...இன்னொ டிபன் பண்லையா?என்று பதட்டத்தோடு கேட்டேன்.
என்னை குழப்பத்தோடு பார்த்தபடி அது இருக்கட்டு சண்டே அதுவுமா காலைலியே எங்க கிளம்பிட்ட? என்றார்.
சண்டே வா.....! என மனதிற்குள் வினாவி கொண்டேன்.
என்னடி என்ன ஆச்சு?சண்டே ஆனா 10 மணிக்குதா ஏந்திரிப்ப,இன்னைக்கு காலைலியே எழுந்து ரெடி ஆகியிருக்க என்று கேட்டார்.
திடீரென மனம் சங்கடம் அடைந்தது,மனதில் ஏதோ ஒரு பாரம்.
நா கோவிலுக்கு போற என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்த்தேன்.
சாப்பிட்டு போய....என்று கூறினார்.
வந்து சாப்புற மா என்று கூறிவிட்டு கோவிலுக்கு சென்றேன்.
சிவனை தரிசித்து விட்டு,மூன்றுமுறை வளம் வந்து அமர்ந்தேன்,நாங்கள் விஷ்ணுவை வழிபடுபவர்கள் ஆனால் எனக்கும் என் தந்தைக்கும் சிவன் இஸ்ட தெய்வம் ஆவார் ஞாயிற்று கிழமை என்பதால் என்னை தவிர கோவிலில் யாரும் இல்லை,மிக அமைதியான சூழல்,விபூதி மற்றும் கற்பூரத்தின் வாசம் நல்ல ஒரு உணர்வை ஏற்படுத்தியது,எதை பற்றின சிந்தனையும்மின்றி மனம் அமைதியில் ஆழ்ந்திருந்தது,கண்களை மூடி தலையை தூணில் சாய்த்தபடி அமர்ந்திருந்தேன்.
சில நிமிடங்களுக்கு பிறகு ஸ்ரீயின் முகம் தெரிந்தது,பதறி கண்களை திறந்தேன்,அதன் பிறகு என் உள் நிறைய கேள்விகள்?
ஸ்ரீக்கும் நமக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை,அப்படி இருக்கையில் நான் ஏன் அவன் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறேன்?
அவனை பார்க்கும் போது மட்டும் ஏதோ சொல்ல தெரியாத புது உணர்வு, மீண்டும் மீண்டும் அவனை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது,அவனை பார்க்கையில் நிறைவாகவும்,மகிழ்ச்சியாகவும் உணர்கின்றேன் எதனால்?
சரி ஒருவரின் மீது அன்பு ஏற்படுவது தவறா என்ன?
ஒருவரை பிடிப்பதற்கு காரணம் இருக்க வேண்டுமா என்ன?
என எனக்குள் பல கேள்விகள்.
வினாக்களுக்கு விடை தெரியாமல் வீட்டிற்கு சென்றேன்.
தொடரும்....