பகவத்கீதா வெண்பா கர்மயோகம் 14 சுலோகம் 40 41 42 43

40 .
இந்தஆ சைஇருப்ப தோமனம் புத்திமற்றும்
இந்திரியங் கள்தனில் ஞானத்தை மூடி
மனிதனைமோ கத்தில்தள் ளும் !
41 .
முதலில் புலன்களை நீயும் அடக்கு
அதன்பின்நீ நூல்அனுப வத்தறிவை சாய்த்திடும்
பாவவடி வாசை ஒழி !
42 .
புலன்கள் பெரிதாம் உடலினும் என்பர்
புலனினும் இம்மனம் புத்தி மனத்தினும்
புத்தியினும்ஆத் மாஉயர் வாம் !
43 .
ஆத்மா அறிவினும் மேலா னதுபார்த்தா
ஆத்மா அடக்கிநீ வெல்ல முடியாஅக்
காம எதிரியழிப் பாய் !
-----கீதன் கவின் சாரலன்
பகவத் கீதையின் மூன்றாவது அத்தியாயம் கர்ம யோகம்
இத்துடன் முற்றும் .
-----------கண்ணனே வழிகாட்டும் ஆசான்--------------