பறவையாய்
இருந்து விடலாமே பறவையாய்
உணவிற்கு மட்டுமே அலைவதாய் இருக்கும்
உற்ற துணையோடு உலாவலாம்
ஒரே பாலினத்தில் புணர்வது வேண்டாம்
எல்லைகள் என்று எதுவும் இல்லை
எல்லா கிளைகளும் ஏற்றமிகு வீடு
கிடைப்பது மிகுவின் விற்பது இல்லை
எம்முடல் அதுவே உணவாய் தெரியின்
எதிரி என்பது உருவாகக் கூடும்
நீரும் சேறும் நெடுநல் வயலும்
ஆறும் கடலும் அழகிய குளமும்
கால்வாய் கம்மாய் கழித்துவார வாய்க்கால் - என
காணும் இடந்தோறும் கபடமின்றி வாழ்வோம் - எமக்கு
ஆறறிவு வேண்டாம் அதனால் அழிவே .
- நன்னாடன்