தபால்பெட்டி

பால்யங்களின் கனவுகள் கொடுமையானவை
இரும்புக் கதவுகளில் தபால்பெட்டிப் பொருத்தித்
தினமும் தபால் வரவேண்டுமெனக்
கனாக் கண்டேன்
ஆனால் மாதம் ஒன்றுதான் வரும்
பெட்டியைப் பொருத்தவேயில்லை

பின்னொரு நாள் தொலைபேசி பார்த்து
வியந்து அதைப் பொருத்த வேண்டும்
அனைவரிடமும் பேசித் தீர்க்க வேண்டுமெனக்
கனாக் கண்டேன்
நெருங்கியவர்களும் கனா மட்டுமே கண்டதால்
இன்றுவரைத் தொலைபேசியைப் பொருத்தவில்லை

காலம் சுழன்று கைப்பேசிகள் வந்தன
விதவிதமாய் அத்தனைக்கும் ஆசைப்பட்டால்
அப்பா வாங்கினார் நாலாயிரம் ரூபாய்க்கு
நோக்கியா போனை
மின்சாரத்தோடு இணைத்தால்
காசுலாம் போட வேணாமாம்
அப்படியே வாங்குவோம்
தந்தைக்கே பாடம் எடுத்தேன்
இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்
தான் வருகிறது
வாங்கிய போனில் அனைவரிடமும்
பேசிக் களித்தோம்
உன் நம்பர் என்ன
என் நம்பர் இது தான்
பகிர்ந்து கொண்டோம்

காலம் மேலும் உருண்டு
கைப்பேசியில்லாக் கைகள் இல்லை
என்றாகி விட்டேன்

என் சம்பளத்தில் இதுவரை
எட்டு ஆண்டுகளில்
நான்கு கைப்பேசிகள் வந்துவிட்டன
அப்பா இன்னும் அதே நோக்கியாவைக்
கொண்டு தான் அழைக்கிறார் அனைவரையும்

தபால்பெட்டியும் அப்படித் தானிருக்கின்றன
இன்றும் சில வீடுகளில்

எழுதியவர் : Mariselvam (18-Feb-19, 11:56 am)
சேர்த்தது : Mariselvam
பார்வை : 31

மேலே