சட்டமும் காவலும்

எட்டுத்திக்கையும் கட்டி ஆள
வெள்ளையன் கண்ட வேற்று வழி
சட்டமும் காவலும் கலந்த தேசியம்
கட்டுப்பட்டோரிடம் துட்டை பெற்றான்
எதிர்த்து நின்றோரை சுட்டி வீழ்த்தினான்
காலங்களுக்கிடையில் கலகம் பிறக்க
கருப்பு அங்கி கொடுத்து நீதி கடையை திறந்தான்
குறுஞ்சண்டைக்கும் கும்மி விளையாட்டிற்கும்
கொடூர தண்டனையும் குல அடிமையையும் வைத்தான்
இப்படி உருவான சட்டத்தில் - இன்று
70 ஆண்டு தாண்டியும் எவ்வித மாற்றமின்றிருந்தால்
குடியானவர்களிடம் கோளாறா? - அல்லது
கோவேந்தர்களிடம் கோளாறா?
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Feb-19, 8:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே