துள்ளிவரும் ஆசையில் அள்ளிவிடத் தோணுதடி
துள்ளிவரும் ஆசையில் அள்ளிவிடத் தோணுதடி
*******************************************************************************
வெள்ளி மணிக்கொலுசு அணிந்திட்ட கால்கள்
துள்ளிக் குதிக்கையில் ஒலித்திடும் " தத்தி திரி கிட " !
முல்லைப்பூச் சரம்போல கோர்த்திட்ட பல்வரிசை
பள்ளம்விழு கன்னங்கள் சேலத்துமாங் கனியினங்கள் !
கள்வடியும் இதழ்களிடை முத்துதிரும் புன்னகை
முளை தயிர் பிசைந்ததுபோல் காந்தள் மெல்விரல்கள்
சிலையொத்த தோள்களிடை களையான கனியகங்கள்
இலைவாழை நாபி குடக்கழுத்துச் சின்னஇடை
கேள்விக்குறி அதுபோல அழகான நற்செவிகள்
எள்ளுப்பூ நாசியொடு கெண்டைவிழி நயனங்கள்
வில்லொத்த புருவமிடை திலகமிட்ட நன்நுதல்
நூல்வார்த்த சேலையில் நடந்துநீ வருகையிலே
துள்ளிவரும் ஆசையில் அள்ளிவிடத் தோணுதடி !