முன் பின் தெரியாது என்னுள்ளே புகுந்தவளே

முன் பின் தெரியாது என்னுள்ளே புகுந்தவளே
**************************************************************************

அன்பிலோர் அன்னையாய் அழகினில் மங்கையாய்
பண்பினால் தமிழச்சி யாயறிவிலொரு தலைவியாய்
முன் பின் தெரியாது என்னுள்ளே புகுந்தவளே
இன்னிசை பாடல்கள் பாங்காக பலபுனைந்து
உன்னோடு பாடுதற்க்கு காதமாய்க் காத்திருக்கேன்
கன்னியேநீ வருவாய் செம்மொழித் திருமகளாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Feb-19, 9:32 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 160

மேலே