உங்க என்ற ஒரு வார்த்தை
![](https://eluthu.com/images/loading.gif)
காலப் போக்கிலென்
காதல் உனைக்
கடந்து போனாலும்...
நீ சொன்னது போல்
விதியின் சதியால்
வீழ்ந்து விட்டாலும்...
ஒரு வார்த்தை மட்டும்
பசுமரத்தாணி போல்
பதிந்து விட்டதென்
மனதில்...
எத்தனையோ வார்த்தை
எனக்கு பிடித்தாலும்
" உங்க " என்ற
ஒரு வார்த்தை மட்டும்
உண்மையில் என்னால்
மறக்க முடியவில்லை..
ஏனென்றால் நீ எழுதின
மடலிலெல்லாம்
மங்கையுன் பெயரை
இந்த வார்த்தைக்கு பின்
கண்டு தானே
நான் காதலானேன்...!!!