எனக்காய்

சில கணங்கள் எனக்காய் வேண்டும்...,
என்னை நானே ஒருமுறை பார்த்துக் கொள்ள..!
வெற்றுப் புன்னகையின் விரிசல்களில் பட்டுப் போன தென்றலாய் சில கணங்கள்..!
காற்றின் ஊமை மொழிகளில் கரைந்து போன மூங்கில்காட்டு உரசொலியாய் சில கணங்கள்..!
நினைவின் அலைகள்
நெருஞ்சிமுட்களாய் மோத..,
காலத்தின் கைதியாய்
தனிமைச் சிறையில் நான்..!

எழுதியவர் : சரண்யா (18-Feb-19, 6:14 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : enakkaai
பார்வை : 454

மேலே