காதல் பேரகராதியே
மௌனத்தின் துணைகொண்டே
காதல் மொழியேற்றம் செய்கிறாய்...!
கண்ணாடி மனதுக்கு
நிழல் நேசம் தகுமா...
நிறை காதலுக்கு
மறைமுகம் மாண்பாகுமா...
என் மிகைநெகிழ்வு
மெய்யூக்கம் கேட்கிறது
உன் பொய் மௌனம்
பேரன்பை நகைக்கிறது...
நீ மட்டும் நினைவென்றானதும்
சுத்த மத்திம ராகங்கள்
சுக சூத்திரங்கள் வாசிக்கிறது...
கீரவாணி பவதாரணிகளும்
கீர்த்தனைகளில் காதல் பேசுகிறது...
இசையளவீடுகளும்
மொழியளவீடுகளும்
உன்னை மட்டும்
சுட்டிச் சுகமேற்றுகிறது...
உன்னழகு விழிகளில்
அதட்டி அகவு
மௌனமும் மௌனிக்கும்
உன் அவன் இவனென்று
என்னையே மொழிந்துரைக்கும்...
புத்தனிடம் பொய்க்கூட்டு போதும்
புனிதன் நானென்று
அவன் காதிலும் ஓது...
யாசக சாதகம்
எனக்கும் புளிக்கும்
இனிக்க ஒரு வாசகம் சொல் போதும்...
என்னிடம்....!!!!!!