மௌன மொழி

சாந்தப் பார்வையால்..
சந்தக் கவிதை படித்து..
சத்தமின்றி மௌன மொழி பேசியவள்..
உணர்வுகளை காட்டி..
உறவுகளை வளர்க்க ஏனோ மறுக்கின்றாள்..!

கண்களை ஏறெடுத்து கனவுகள் கொடுத்தவள்..
கண்கள் தேடும்போது காட்சி கொடுக்க மறுக்கின்றாள்.... -மௌனத்தில் முளைத்து..
மர்மத்தில் கரைகின்றது காலம்...
அவள் வரவை நோக்கி......

எழுதியவர் : சா.மனுவேந்தன் (21-Feb-19, 8:15 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : mouna mozhi
பார்வை : 116

மேலே