தாய் மொழி மறவோம் நாமே

நம் தாய் மொழி அமுத மொழியாம்
தொன் தமிழை இன்று நம் இளைய
தலைமுறையாம் வாரிசுகள் பேணி
வளர்க்க மறந்து தாய் மொழியில்
பேசவும் தயங்குவதேனோ தெரியலையே
இன்று பள்ளிக்கூடம் , கல்லூரி
மற்றும் பல்கலைக்கழகங்கள் வாசலில்
சற்று நேரம் நின்று பாருங்கள்…..அங்கு
நம் தாய் மொழியில் பேசுவதை பெரும் இழுக்கென்று
ஏன், பெரும் தவறு என்று கூட எண்ணி
தப்பும் தவருமாய் ஆங்கிலத்திலேயே
பேசி செல்லும் மாணவர்குழாம் மற்றும்
இவர்களை இப்படி பேசவைக்கும் பெற்றோர்கள்
நம் பார்வையில் காணாமல் போவதில்லையே …

உயர்கல்வி தொடரவும் பணிநிமித்தம்
பல வெளிநாடுகள் சென்று அங்கேயே தங்கிவிடும்
நம் தமிழ் மக்கள் தமிழை தாய்மொழியை மறந்து
விடுவதும் தம் பிள்ளைகளையும் அதே பாதையில்
நடத்தி செல்வதும் ஏனோ நானறியேன் இவர்கள்
தங்கள் தாய்மொழியையும், கலாச்சாரம் மற்றும்
பழக்கவழக்கங்களையும் உயிரினும் மேலாய்ப்
போற்றிகாக்கும், ஜப்பானியர், ஜெர்மானியர் ,சீனர்
போன்ற இவர்களிடமிருந்து கற்காமலிருப்பதேனோ
தெரியலையே அங்கேயே இருந்தும் -வெட்கக்கேடு !

அன்பர்களே நம் தாய் மொழியையும் நம் பண்பு
கலாச்சாரம் இவைகளை நாம் நம் தாயை, தந்தையைப்போல்
கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தல் வேண்டும்
இது நம் கடமை ,,,,,,, இன்றைய அவசரமான உலகத்தில்
பெற்றோரைப் பேணிக்காக்க தவறிவிடும்
மக்களைப்போல் தாய்மொழியையும் பேணாதவரும்
தாயையே பேணாது போவாற்கு சமம்

இன்று ;தாய் மொழி தினம்
நம் தமிழை நம் பெற்றவர்க்குமேல் பேணி வர்த்திடுவோம்
என்று பொதுமக்கள் முன்னே ilagyar நாம்மீ
சபதமெடுப்போம் செயலிலும் இறங்குவோம் நாம்
வாழ்க தமிழ்மொழி

எழுதியவர் : வாசவன்-tamil (21-Feb-19, 3:31 pm)
பார்வை : 415

மேலே