பாலைவனத்தில் முளைத்த ஒற்றைச்செடி
கனவோடு வாழ்ந்தே
கறைந்த்துப் போகிறேன் ,
கரை இல்லா ஆற்றில் சிக்கி
தத்தளித்து மூழ்கிறேன் …!!
சிந்தும் கண்ணீரில்
ஆனந்தம் காண்கிறேன்,
சிந்து பாடியும்
முகாரியில் முடிக்கிறேன்..!!
ஆகாயம் எங்கும் மேகம் இருந்தும்
நீர் காணா பயிராய் வாடுகிறேன் ,
ஆசையாக பேசிப்பிரிந்த
உறவுகளை எண்ணி வருந்துகிறேன் ..!!
பாசம் காட்டி தூக்கி எரிந்த
பொம்மையாய் வீழ்கிறேன்,
பாலைவனத்தில் முளைத்த
ஒற்றைச்செடியாய் வாழ்கிறேன் .!!
அடங்கி மடிந்து போகி
இந்த மண்ணுக்கு உரமாகும்
நாளுக்காக ஏங்குகிறேன் ..
என்றும் ...என்றென்றும் …
ஜீவன்