நீ என் பூக்களை பறித்திருக்கலாம்

நீ
என் பூக்களை கொய்திருக்கலாம்...
நீ
என் இலைகளை பறித்திருக்கலாம்...
நீ
என் கிளைகளை வீழ்த்தியிருக்கலாம் ...
ஆனால் என் வேர்கள்
பத்திரமாக இருக்கின்றன....
சில கால இடைவேளையில்
நீ கவனிக்கையில்
நான் பூத்து குலுங்கும்
மரமாகியிருப்பேன்....