பக்திப் பரவசத்துடன் பாடிட தெய்வீக கீர்த்தனைகள் மெட்டுப் பாடல்கள்

வர்ணம் (நின்னுக்கோரி – மெட்டு)
1. இராகம் மோகனம் தாளம்: ஆதி
பல்லவி
அம்மா நின் அருளைத் தந்திடு
அடைக்கலம் நின் மலர் பாத கமலங்கள்
அனுதினம் உனைத் தொழுதிட மனம் இனித்திடும்
அருள் கமழ் உந்தன் புகழ்மொழி தன்னைப் பாடினேன்
அனுபல்லவி
தித்திக்கும் உன் திரு நாமம்
தினம் தினம் இசைத்திட சுகம் பெருகிடுமே
திருவடி மலர் தினம் தொழுதிட அருள்வ்வாய்
தீந்தமிழ் ஸ்வரத்தால் உனை நான் தொழுவேன்
;
முக்தாயி ஸ்வரம்
காரிக ரிஸரி ஸரி ஸ்கரிக ஸரிஸத
ஸரிகரி கப கப தாபா
கபதப தஸரிக ரீக ஸாரி தாஸ பாத ஸரிகஸா தபா கரிஸரி
சரணம்
மாறா அன்புடை தெய்வம் நீயே
மகிமை மிகும் மலர்விழி திறந்தருள் புரி
சிட்டை ஸவரங்கள்
1. கா ரிஸரீ தாரீதஸா ரீகாரி (மாறா அன்புடை)
2. காகரி கரிஸரி காகப ததஸரி
காகக தபகரி காகஸ தபகரி (மாறா அன்புடை)
3. பாதத பாகரி ஸாரிக ரீஸத
ஸாரிக பாதா ஸஸா தபாகரி(மாறா அன்புடை)
4. ஸாரிக ரிஸரிஸ தஸதப கரிஸரி ஸா
ஸாஸஸ ரிரிகக பபதத
ஸரிகரிகரி தஸரிஸரிஸ பதஸதஸத
கபதபதப ரிஸதப கரிஸரி (மாறா அன்புடை)

கீர்த்தனைகள்
1. (கலைகள் எல்லாம் அள்ளித் தருபவளே மெட்டு)
பல்லவி
கலைகள் எல்லம் அள்ளித் தருபவளே -இளம் கன்னித் தமிழாய் திகழ்பவளே நல்ல (கலைகள்)
அநு பல்லவி
புலமை பல தந்தே பாடவைத்தாய் - பணின்தே பூவை உந்தனைப் போற்றவத்தாய் (கலைகள்)
சரணம்
வீணையின் ஸவரமாய் நீயிருந்தே - பல
வியக்கும் ராகங்களை இசைக்க வைத்தாய்
வா வா அமுதத் தேனே -எனக்கு
வற்றா கல்வி செல்வம் தருவாய் (கலைகள்)
-----------------------
2. சரஸ்வதி நமோஸ்துதே (மெட்டு)
இராகம் சரஸ்வதி தாளம்: ரூபகம்
பல்லவி
பதமலர் நம்பி வந்தேன்
பண்புடனே போற்றி உன் இரு (பதமலர்)
அநு பல்லவி

கவின்மிகு பாமாலை சூட்டி என்றும்
கலை எழில் குணவதி என்றும் உன் (பதமலர்)
சிட்டை ஸவரம்
ஸாரிம பதாப மபதஸ
பதஸா நிதபம ரிஸநித
ஸரிமப தஸரிமா ரிஸரி
தபமா ரிஸரி ஸஸநித (பதமலர்)
சரணம்
வரமதை தர கரமாமலர்
சிரமதில் வைத்தே காத்தருள்வாய்
புறமகம் எங்கும் உனைப் போற்றினேன்(2)
வரவேண்சடும் என் அன்னை நீயே (பதமலர்)
(மீண்டும் சிட்டை ஸவரம் பாடி முடிக்கவும்)
---------------------------------
3 விநாயகனே வினை தீர்ப்பவனே (மெட்டு)
ஸ்லோகம்
புகழ்பாடி உந்தனையே நாள்தோறும் போற்றிடுவேன் ;
பாமாலை தனை சூட்டி பூமாறி பொழிந்திடுவேன்
மஹாஜனநீ மகிழ்ந்ததனைக் கேட்டருள்வாய் தாயே;
மனதாறப் பணிந்தேன் அதை ஏற்றருள்வாய் நீயே
பாடல்
பல்லவி
மஹாஜனநீ உன் மகிமையை இசைப்பேன்
மாதா உந்தனின் புகழினைப் போற்றி நான் (மஹாஜனநீ)
அநு பல்லவி
பதாம் புஜத்தைப் பணிந்தேன் நானே..... ஆ.... ஆ.... (2)
பாடல் இசைத்தே பண்புடன் நாளும் (மஹாஜனநீ)
சரணம்
சதா உந்தன் நினைவே தாயே
ஜய ஜக ஜனநீ ஜயமே தந்திடும் (சதா)
ஜகன் நாயகியே நீயே அம்மா...ஆ......
ஜய போற்றி உன் மலர்த்தாள் போற்றி (மஹாஜனநீ)
-------------------
4 கணநாயகனே கருணாகரனே மெட்டு
ஸ்லோகம்
சங்கடம் போக்குவாய் சக்தி ஸ்வரூபிணியே
சஞ்சலம் தீர்த்தே சந்ததம் காத்திடும்
மங்கள வடிவே -உன்;
மலரடி பணின்தேன்
பாடல்
பல்லவி
நலம் யாவையுமே தினமே நல்கும்
கலைமேவிடும் என் எழில் தாய் நீயே (நலம்)
அநு பல்லவி
மணியும் நீயே... ஒளியும் நீயே...
மலரும் நீயே... மணமும் நீயே.. (நலம்)
சரணம்;
அகில உலகும் போற்றிடும் தெய்வமே
அடிமலர் பணிந்தே நாளுமே ஏத்தினேன்
அனுதினம் காத்தே அரவணைதிடுவாய்
என் அன்னை நீயே.. அருளுடன் நாளும்.. ((நலம்))
-------------------
5. சோபில்லு சப்தஸ்வர (மெட்டு)
பல்லவி
வாராயோ... வந்தருள்தர... (வாராயோ)
அநு பல்லவி
நாடி தினம் போற்றிடுவேன்
நலம் யாவும் பெற்றுயர (வாராயோ);
சரணம்
தாயே தயை செய்தருள்வாய்
தளரா மனம் தந்தருள்வாய்
தருணம் எனைக் காத்திடவே;
தாள் மலரடிப் போற்றி நின்றேன் (வாராயோ)
-------------------------------
6. சிவ ராம கிருஷ்ணா - (ராக மாலிகை)
ஆலாபனை வரிகள்
நமோ..... மாத......சரணம்
வருவாய்... வந்தருள்வாய்.... அம்மா....
நீயே......
நமோ...... ஜய ஜய நமோ.....
பாதாரம் பணிந்தேத்தி பூமாலை தினம் சாற்றி........
தொழுவேன் எந்தன்... அன்னை உன்னை நானே.....
பாடல்
சரணாகதம் போற்றும்
எனைக் கண் பாராய் நீயே.....
சரணம் அம்மா... தாயே விரைந்தருள் (சரணாகதம்)
பைந்தமிழ் பாவாலே பாமாலை தினம் சூட்டி
பதமலர் போற்றியே நான் மகிழ்ந்திடுவேன்
பாமகள், பூமகள், நாமகள் நீயே....
மரகத வடிவமே என் தாயே சரணம் (சரணாகதம்)
காரண காரியம் யாவுமாய் திகழும்
பூரண ஜோதியே பொன்னடி போற்றி
புவிமீதிலே புகழோடு நான்
தினம் வாழ அருள் செய்யும் தாய் நீயம்மா
சரன் நாடினேன் கதிநீயென்றே
காத்தருள் செய்திடும் அருளன்னையே (சரணாகதம்)
கண்கண்ட தெய்வமே காத்தருள் புரிவாய்
காருண்ய வடிவே காலமும் பனிவேன்
குறைகளைப் போக்கியே நல்லருள் புரிவாய்
திருவடி சரணம் திவ்ய ஸவரூபியே (சரணாகதம்)
மத்யம காலம்
பத்ம பாதமே பணிவுடன் ஏத்துவேன்
பாமலர்ய் சூட்டியே பூமழைப் பொழிவேன்;.
பவவினைப் போக்கியே பரிவுடன் காப்பாய் (சரணாகதம்)
------------------------
7/ இராகம் ஹம்சத்வனி தாளம் ஆதி
பல்லவி
கைத்தொழவே எதுவும் கைகூடும் அன்னையை அன்புடன்
பேணிடும் தாயவளை (கைத்)
அநு பல்லவி
செய்தொழில் சிறப்புற சிந்தை தெளிவுபெற
செய்திடுக் தாயவளின் திருமலர்டி நினைத்து (கைத்தொழ)
சரணம்
அன்னைய நினைத்து ஆரம்பமாகும்
அத்தனைக் காரியம் அநுகூலமாகும்
ஐயமில்லை வெற்றி நம்வசமாகும்
ஆயிரம் ஆயிரம் நன்மை உண்டாகும் (கைத்தொழவே)

8/ இராகம்: ஸ்ரீ ரஞ்சனி தாளம்: ஆதி
(ராக மாலிகை)
பல்லவி
முத்தமிழ் வித்தகி எந்தன் தாயே
சித்தம் இரங்காயோ அம்மா... அம்மா... அம்மா... (முத்தமிழ்)
அநு பல்லவி
நித்ய கல்யாணியே நிர்மல ரூபியே சத்ய ஸ்வரூபிணியே....
மெத்தவே உன்னைப் போற்றினேன் மேன்மை அருள்வாய்
மகிமைமிகும் என் அன்னையே.. அம்மா(முத்தமிழ்)
சரணங்கள்
(மத்தியம காலம்)
பாதம் பணிந்திடும் அன்பரைக் காத்தருள்

எந்தன் அன்னையே சரணம் சரணம்
பணிவுடன் போற்றினேன் பாடலைக் கேட்டருள்
பைங்கொடி பதமலர் சரணம் சரணம்

சத்துவ குணங்கள் யாவும் கொண்ட
சாந்த ஸ்வரூபியே சரணம் சரணம்
சங்கடம் போக்கியே எங்களைக் காத்தருள்
எங்கள் அன்னையே சரணம் சரணம் (முத்தமிழ்)

வருவாய் நீயே.. காத்தருள் வாய்
மலர்ப்பாதம் போற்றி பணிந்திடுவோம்
சரணார விந்தங்கள் பணிந்தோம் அம்மா
சஞ்சலம் போக்கியே காக்கும் தாயே
ராக தாளம் இட்டு பாடினோம் உன்னைப் போற்றினோம்
ப்ரஸீதப் ப்ரஸீதப்
ப்ரஸீதப் ப்ரஸீதப்
ப்ரிய தெய்வமே மாதேஸ்வரி
மனமாற உனைப் பாடி மகிழ்வேன் தாயே
ஆனந்தம் கொண்டே வந்தருள்வாய்
அடைக்கலம் உன் மலர் பாதம் என்றும்
அம்மா நீயே வந்தருள்வாய்
எமைக்காத்து அருள் செய்ய விரைந்தே இங்கு(முத்தமிழ்)


09/ இராக மாலிகை
குறையொன்றும் இல்லை என் அன்புத் தாயே... குறையொன்றும் இல்லை அம்மா.....
குறையொன்றும் இல்லை என் அன்புத் தாயே

கண்ணினில் நிறைந்திருக்கும் தாயே -என்றும்
கனிவோடு எனைக் காக்க நீயிருக்கும் வரையில் குறையொன்றும் இல்லை என் அன்புத் தாயே

வேண்டியதைத் தந்திட எந்தன் அன்னை நீயிருக்க வேண்டியது வேறில்லை - என் அன்புத் தாயே.(2)
வருவாயே.. அருள்வாயே.. காப்பாயே..

தினந்தோறும் உனைப் பாடி மகிழ்வேன் அம்மா
தினந்தோறும் உனைப் பாடி மகிழ்வேன் -உன் திருவடி மலர் தன்னை நாள்தோறும் போற்றி பணிகின்ற எனக்கென்றும் குறையில்லை தாயே...
இன்னிசை ஸ்வரமெடுத்து இசைப்பாடி மகிழ்வேண்(2)
குறையொன்றும் எனக்கில்லை என் அன்புத் தாயே
வருவாயே.. அருள்வாயே.. காப்பாயே..

கனிவோடு எம்மை தினம் காக்கும் தாயே(2)
மனத்தலே பாடித் தொழும் எம்மைக் காப்பாய்
குறையொன்றும் இல்லை என் அன்புத் தாயே
யாரும் மறுக்காத ஒரு தெய்வம்.....(2)
நீ என்றும் ஈடு இணையில்லாக் கருணைக் கடலன்னை
என்றும் அருளிட ஏது குறை எனக்கு(2)
ஒன்றும் குறை இல்லை என் அன்புத் தாயே
வருவாயே.. அருள்வாயே.. காப்பாயே..
காப்பாயே .. காப்பாயே... காப்பாயே... காப்பாயே.....


10 ராக மாலிகை
கற்பக வல்லி நின் (மெட்டு)
அன்னையே உந்தந் மலரடி பணிந்தேன்
அருள்புரிந்திடுவாய் அம்மா - தாயே..(அன்னையே)
அனுதினம் பாடினேன் அருள்தனை நாடினேன்
அடைக்கலம் உந்தன் பாதகலங்கள் (அன்னையே)
நீயிந்த வேளை தன்னில் சேயாம் எனை மறந்தால் நானிந்த பூவுலகில் செல்வது எவ்விடமோ
ஏனிந்த மௌனம்மம்மா -ஏழை எனைக் காக்க ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (அன்னையே)
எல்லோர்க்கும் இன்பங்கள் நிறைந்திட அருள்புரிவாய்
நல்லவர் நாவினிலே குடியிருப்பாய்
கல்யாணியில் நான் உன்புகழ் தனைப் பாடுவேன்
வல்லவளே நலம் பெருகிட அருள்வாய் (அன்னையே)
நாளும் உனைப் பாட நல்லருள் புரிந்திடுவாய்
தேடும் மனம் தனிலே திருவே குடியிருப்பாய்....
பாடும் அடியார் வினை.......(2)
தீர்த்தருள் புரிந்திடுவாய்...
வாடும் உள்ளத்திற்கு நல்மருந்தாகிடுவாய் (அன்னையே

எங்களைக் காத்தருள் எழில் நிறை தெய்வமே
பொங்கும் மங்களம் புரிந்தருள் செய்வாய்
தங்கிடும் இன்பமே தாய் உன் அருளாலே
எங்ஙனம் நிறைந்திருக்கும் எழிலே காத்தருள்வாய் (அன்னையே)
///////////////////////////
12/ (வெங்கடாசல நிலையம் - மெட்டு
அன்னையே உன்பத மலர்தனைப் போற்றினேன்
அன்புடன் உந்தனை அனுதினம் பாடியே அங்கம் குளிர்ந்து அமககிழ்ந்தே நான் (அன்னையே)

பைந்தமிழ்ப் பாவினில் நான் பதமலர் போற்றவே
பாங்குடன் கேட்டருள் பரிவுடன் நீயே (அன்னையே)
//////////////////////////////////////

13/ நானொரு விளையாட்டு பொம்மையா
அன்னையான தாயே உந்தனுக்கு (நானொரு)

பூவுலகில் தினம் பல சிக்கலில் உழன்றே
வருந்துவது போதாதா -உந்தனுக்கு (நானொரு)

திருவருள் தனை வேண்டி அம்மா அம்மா என்று
தினம் உனை அழைப்பதனைக் கேட்டிலையோ
கருணை மழைபொழிந்தே காத்தருள் புரிந்திட
இன்னமும் மனம் இல்லையோ - அம்மா (நானொரு_
//////////////////////////////////////
14/ (ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண - மெட்டு)
பல்லவி
ஆடிப்பாடி தினம் வேண்டி உந்தன் மலர்
பாதம் பணிவேனே - அம்மா (ஆடி)

அநு பல்லவி
பாடிப் பணிந்திடும் எங்களைக் காத்திட
அன்னை உள்ளம் தன்னில் மகிழ்ந்தே அருள்வாய் (ஆடி)
சரணம்
மத்தியம காலம்
ஆர்வம் மேவிட பாடல் புனைந்தே
அன்னை உன்னிரு தாள் மலர் பணிந்தேன்
சீர்மிகும் உந்தன் திருப்புகழ் தன்னை
தினம் இசைத்தினிதே பாடிநின்றேன்
பேரருள் பெற்றிட பெற்றவளே - உன்
பெரும் புகழ் தன்னை வாழ்த்தி நின்றேன்
காலம் முழுதும் காத்தருள் தாயே
காருண்ய வடிவே நீயே...(ஆடி)
///////////////////////////////////


15/ லாலி பாடல் (ஊஞ்சல் பாடல்)
அன்பு அன்னை உந்தன் புகழ் பாடி மகிழ்வேன் நான்.......
இன்னருளைத் தந்து அருள் பொன்மணியே நீயே....... வருவாய்
வண்ணமலர் கொண்டு உந்தன் பாத மலர் பணிந்தேன்......- என்
எண்ணமதில் நீயிருந்தே என்றும் அருள் புரிவாய்...... தாயே.......


வசந்த மலர்ப் பந்தலிலே பொன்னூஞ்சல் பூட்டி.......
இசைதமிழில் ஈடு இல்லா......
உந்தன் புகழ் இசைப்பேன்..... நானே........

பைந்தமிழ்ச் சரம் எடுத்து பரிவுடனே சூட்டி........
பாதமலர் பாற்றி என்றும் -உன்
பாதமலர் பாற்றி என்றும் பாமாலை இசப்பேன்.... அம்மா.......
குமுத விழி திறந்தருள்வாய்....
குழந்தை எனைக் காக்க.....
அமுத மொழி கூறி என்றும் அரவணைப்பாய் தாயே..... நீயே..........
/////////////////////////////////

16/ (சரஸிஜ நாப சோதரி - மெட்டு)
இராகம் : நாக காந்தாரி தாளம்: ஆதி
பல்லவி
மலர் முகம் கொண்ட என் அன்னை
உன்னை நான் பாடினேன் (மலர்)
அநு பல்லவி
மனத்தல் உன்னை தினம் போற்றினேன்
மகிமை பல செய்திடும் மாதேவரி (மலர்)
சரணம்
மதி மயங்கி நான் செய்திடும் பிழைப் போக்கிடு என் தெய்வமே....
மலர்விழி திறந்தருள்வாய்.....(2)
மாதா நீயே அருள் புரி ஆதரி......
மஹா மாயையே.... மங்களே
மன இருள் தவிர்த்திடுவாய் தினம் அருள்வாய்
மறவேன் உன்னை அனுதினம் எந்தன் தாயே... மங்கள வரப்பிரதாயினி (மலர்)
-------------------------


17/ (துளசி தள முலசே சந்தோஷ முகா... தியாகராஜ ஸ்வாமி கீர்த்தனை மெட்டு)
இராகம்: மாயா மாளவ கௌளை தாளம்: ஆதி
பல்லவி
அம்மா உன் மலர்ப் பாதம் தன்னை நம்பிவந்தேன் அடக்கலமாய்....
அநு பல்லவி
தினம் பாடி உனை வேண்டினேன்.....(3)
வருவாய் நீயே காத்தருள் தர (அம்மா)
சரணம்
சரணாகதி வேண்டி என்றும்
சந்ததம் உனைப் பாடி நின்றேன்..
வருவாய் நீ.. வந்தெம்மை தினம் காத்தருள இங்கு
தருணம் எனைக் காத்திடவே விரைந்தருள் புரிந்திடுவாய்(3)
என் தாய் நீயே மாதே
-------------------------------
18/ (வாசுதேவயனி - மெட்டு)
இராகம்: கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி
பாரில் மிக உயர்ந்த உயர் ஒன்பொருள் அன்பு பெற்றோரே எழில் மிகு (பாரில்)
அநு பல்லவி
பாசம் மிகுந்த அவர்கள் உள்ளத்திற்கு...(2)
ஈடு இணை உலகில் வேறு எதுவும் இல்லை
சரணம்
வாஞ்சையுடனே தினம் பேணி நம்மைக் காப்பார்
வற்றா அன்பைத் தந்து மொழிவார்கள்
நாளும் வாழ நலம் காத்து தினம்..(2)
நன்மை பல புரிந்து
நெஞ்சம் குளிர்வார்கள் (பாரில்)
------------------------


19/ (சலமேலரா..... மெட்டு)
இராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
பல்லவி
மறவேன் உன்னை... என் அன்புத் தாயே- நான் (மறவேன்) (2)
அநு பல்லவி
தினம் தோறும் நான் உனைப் பாடி மகிழ்வேன்....... (2)
திருவே உன் பெருமை தன்னைப் போற்றியே...(மறவேன்)
சரணம்
கதிவேறிலை உந்தன் பாதம் அன்றி
கனிவோடென்னை தினம் காத்தருள்
எந்தன் அன்னையே உன்னை வேண்டினேன் நான்.....
என்றும் இன்னருள் இனிதே நல்கும் தாயே (மறவேன்)
---------------------------------
20/ சாமஜ வரகமனா- மெட்டு)
இராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
பல்லவி
தாயே நீ அருள்புரிவாய் தயாபரி
பாடல் பாடி உன்னை வேண்டினேன் அனுதினமும் (தாயே)
அநு பல்லவி
மாய இவ்வுலகில் பல....(2)
போராடும் இன்னல்கள் போக்கிடும்
ஈடு வேறு இல்லா அன்புத் (தாயே)
சரணம்
பாசம் மிகவும் கொண்டே பரிவுடன் எனைக் காத்தாய்
பண்புடன் அனுதினம் பேணியே....
பாதமே துணை எனக்கு....(2) -என்றும்
பைந்தமிழ் சரம் எடுத்து பணிவோடணிவிப்பேன் (தாயே)
-------------------------------

21/ இராகம்: ஆனந்த பைரவி தாளம்: ஆதி
பல்லவி
உனையன்றித் துணை காணேன் என் அன்னையே
எனை நீ காத்தருள்வாய் என் தாய் நீயே (உனை)

அநு பல்லவி
ஈரேழ் உலகமும் உன் புகழ் போற்றுமே
இயல் இசை நாடக முத்தமிழ் தெய்வமே ( உனை)
சரணம்
சித்தமதில் நீயிருந்தே செயல்பட அருள்புரி -என்
சித்தமதில் நீயிருந்தே நான் செயல்பட அருள்புரிவாய்
நித்திலமே நிம்மதியை நாளும் அருள்வாய்
இத்தரையில் வாழும் அன்பர் குறைதனைப் போக்கியே..
எத்தனை எத்தனை நன்மை என்றென்றும் செய்திடுவாய்(உனை)
------------------------------


22/ (எப்படிப் பாடினரோ - மெட்டு)
பல்லவி
என்றுமே பாடிடுவேன் அம்மா - உன்
புகழ்மொழி போற்றியே நான் உன்னை (என்றுமே)
அநு பல்லவி
அன்புடன் எந்தனை அனுதினம் காத்தனை
அடைக்கலம் உன்மலர் இணையடி எனக்கு (என்றுமே)
சரணம்
குமுத விழி திறந்தருள்வாய் குறைதன்னைப் போக்கிடுவாய்
கருணை மிக்கக் கொண்ட காருண்ய செல்வமே
தருணம் எனக் காக்க தயை புரிவாய் அம்மா(2)
தாமதம் இன்றி விரைந்தருள் புரிவாய் (என்றுமே)






23/ ராகம் உதய ரவிச்சந்திரிக்கா

தாளம் ஆதி

பல்லவி

இன்ப எழில் உருவே............(இரண்டு முறை)

உன் ..............இணையடி போற்றி தொழுவேனே.......... (இன்ப)

அனு பல்லவி

அன்பர்கள் இதயத்தில் வாழ்கின்ற தாயே........
ஆதாரம் உன்மலர் இணையடி எனக்கு.............

சிட்டை ஸ்வரம்

ஸா; நிஸநிநி பபமம ககஸா
ஸகம பாம கமபநி

ஸாக்ஸ கஸநிப நீஸநி ஸநிபம
பாநிப நிபபம கமபநி ஸா ;

ஸகமக மகஸா நிஸக்ஸ க்ஸநீ
பநிஸநி ஸநிபம கமபநி ஸா;

ஸகமக மக ஸக ஸநிபம கமபநி
ஸகஸநி ஸா; பநிபம பா;
ஸகாம பநி (இன்ப)..............

சரணம்
இதய மலர்தனில் உந்தனைப் போற்றினேன்..............
என்றும் உன் அருள் பெற்றிடவே........

நிதம் உன்னைப் பாடிட நிம்மதி பெருகும்....
நீங்காப் பேரின்ப நலமே விளங்கும்
ஸா; நிஸநிநி பபமம ககஸா
ஸகம பாம கமபநி

ஸாக்ஸ கஸநிப நீஸநி ஸநிபம
பாநிப நிபபம கமபநி ஸா ;

ஸகமக மகஸா நிஸக்ஸ க்ஸநீ
பநிஸநி ஸநிபம கமபநி ஸா;

ஸகமக மக ஸக ஸநிபம கமபநி
ஸகஸநி ஸா; பநிபம பா;
ஸகாம பநி (இன்ப)
......
24. இராகம்: சிந்துபைரவி தாளம்: ஆதி
பல்லவி
ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி
அநுபல்லவி
சுகஸ்வரூபிணி மதுரவாணி
சுந்தரத் தமிழால் உனைதினம் பாடினேன்(ஜக)
சரணம்
பைந்தமிழ்ப் பாவினில் நானுன்னைப் பாடியே பணிந்திடுவேன்
அன்னையே கேட்டருள் அன்புடன் தாயே
பதமலர் பணிந்தேன் பரிவுடன் ஏற்றருள்(ஜக)
-----------------------------
25. கற்பனை என்றாலும் மெட்டு
கனவிலும் நீயேதான் என்
நினைவிலும் நீயேதான்
அன்னையே உனைமறவேன்
அற்புதமாகிய அருள்பெரும் இறையே
அன்புடன் காத்திடும் கருணையின் உருவே
நிற்பதும் நடப்பதும் நின்செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின்செயலாலே
கற்பதெல்லாம் உன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே(கற்)

===============
26 கருணை தெய்வமே கற்பகமே மெட்டு
பல்லவி
கருணை தெய்வமே எந்தன் அன்னையே
காணவேண்டும் தினம் நான் உன்னையே(கரு)
அநுபல்லவி
உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறு யாரோ என் தாய்(கரு)
சரணம்
ஆனந்த வாழ்வு தந்திட வேண்டும்
அன்னையே என்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்
நாலமுடன் வாழ அருளல் வேண்டும்(கரு)

================
27. எனக்கொரு வரம் தருவாய்
என் அன்னையே
எனக்கொரு வரம் தருவாய்
உனக்கொரு குறையில்லை
ஒருவரம் தருவதால்
உலகில் கண்கண்ட தெய்வம்
உனையன்றி வேறுண்டோ(என்)
வந்தவர் வாழ்தினும்
வசைமொழி கூறினும்
மாநிலமே பெரும் வருமை வந்தூறினும்
சிந்தை கலங்காது முந்தை நாளிலே
செய்தபிழை பொறுத்து நல்வழி பெற்றிட (என)
-------------------------------
29. கணபதியே வருவாய் – மெட்டு
முதற்பொருளே வருவாய் அருள்வாய்
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை எந்தன் நாவினில் உதிக்க
ஏழு ஸ்வரங்களில் இன்னிசைப் பாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக்கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட(மு)
தூக்கிய கரங்கள் வாழ்த்துக்கள் கூற
தாயே உன்னருள் தரணியோர் பெற்றிட
வையகம் முழுவதும் வளமுடன் வாழ
வரமது நல்கும் கருணையின் உருவே
------------------------------

30. முதல் வணக்கம் என் தாய் உனக்கே
முன்னின்று காக்கும் அன்னை நீயே
புகழ் மணக்கும் உன் பெயர் சொன்னால்
பூச்சொரிந்தே மனம் பாடிவரும்(முதல்)
கருணாகரி நீயே காத்திடுவாய்
கனிவோடு நலம் யாவும் தந்திடுவாய்
சரணார விந்தங்கள் பணிந்தோம் அம்மா
சந்தோஷம் கொண்டேன் நான் உனைப் பாடவே (முதல்)

நீங்காத பேரின்ப நலம் யாவுமே
நாளும் உன் புகழ் பாட கூடிடுமே
நிறைவான நலம் நல்கும் தாய் நீயன்றோ
நிர்மல ரூபியே சரணம் அம்மா(முதல்)

31. ஸ்ரீகணேசா சரணம் – மெட்டு
தயைபுரிய வருவாய் அருள்வாய்
தேடி சரணடைந்தேன் அன்னையே..(த)
நாடினேன் உன்பத மலர்தனை நாளும்
நாவல் புகழ்பாடினேன் பாமாலையால்
நாளும் நாளும் பல நன்மைகள் செய்பவளே
நலமே கருதிடும் நாயகி நீயே
தாயே சரணம் திருவடி சரணம்

;
தன்னருள் தந்தே இன்னல்கள் போக்கிட

32. சிங்கார வேலனே தேவா- மெட்டு)
சிங்கார ரூபியே தாயே –எழில்
சீர்மேவும் கோலவிழி நீயே.....(சி)
செந்துரத் திலகமிட்ட என்னை
தினம் சீராட்டி சிறப்பூட்டி வளர்த்தாயே
செந்தமிழ்ப் பாவினில் உந்தன்
சேர்மேவும் புகழ்தன்னை இசைப்பேன் நான் அதி (சி)
--------------------
33. எங்கெல்லாம் தேடுவதோ- அம்மா
எழில்மேவும் தாயே உன்
அருள்வேண்டி தினமும் நான்(எங்)
அங்கு இங்கு என்று அலைந்து திரிந்தபின்னும்
அம்மா உன்னைக் காணும்
ஆவலினால் இன்னும்(எ)
ஆயிரம் பண் இசைத்து அனுதினம் போற்றிடுவேன்
அருந்தமிழ்ப் பாச்சரத்தால்
அம்மா உன் புகழை
ஈடு இணையில்லா கருணையே வந்தருள்வாய்
என்றும் எப்பொழுதும் இனிதே காத்திடுவாய்(எ)
அம்மா........... அம்மா...... அம்மா......
------------------
34. மாணிக்க வீணை தன்னில் மாதா உன் புகழ் பாட
இன்னிசை ஸ்வரம் எடுத்துப் பாட வந்தேன் அம்மா (பாட) (2)
அருள்வாய் நீ... இசை தரவா நீ...
இங்கு வருவாய் நீ...
ஜெயம் தருவாய் நீ...(அம்மா..(ம)
நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்(ம)
வெள்ளைத் தாமரை மலர் எடுத்து உன்
பொன்னடிப் போற்றிப் பரவி நின்றேன்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அருளைத்தரும் அன்னையும் நீயே
பாமலர் சூடியே பந்தமிழ்ப்பாவால்
நானுன்னைப் பாடியே வேண்ட்வந்தேன்
பண்புடன் பதமலர் அனுதினம் போற்றியே
அன்னையே உந்தன் அருள்தனைப் பெற்றிட
நாளும் நாளும் வேண்டி வந்தேன்
தாயே நீயே திருவருள் செய்வாய்
திருவடி சரணம் சரணம் அம்மா(அருள்)
35. சரணம் அம்மா என்று (3 முறை)
சரணம் அம்மா என்று போற்றிடுவேன்.
நொந்து தளக் கிழமாகி தளர்ந்தபின்
நோயில் அடங்கிடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது(3 முறை)
அன்றுனைக் கூவிட இன்றனே கேட்கிறேன்
ஆண்டருள்வாய் என் அன்னை நீயே ஓம் (சரணம்)
ஐம்பொறியும் சரணங்களும் உபாய ஆவியில் அடங்கிடும் போது (மனம்...3) (சரணம்)
வந்தெமதூரர் வளைத்துப் பிடித்தென்னை
வாவென்று அழைத்திடும்போது
சிவ நாடி ஒடிங்கிடும் போது,
எந்தன் நெஞ்சை அடைத்திடும் போது,
உயிர் ஓசை அடங்கிடும் போது
(மனம் 3 ...) சரணம்.
அந்த அந்திம காலத்தில் நீவரவேண்டுமே...
அற்புதமே என் தாய் நீயே...(சரணம்)
--------------------
36. காலையிலே என்றும் கணபதி உனைப் பணிந்தேந் மெட்டு
ஹம்மிங்.....
மங்கள வாழ்வு தரும் மாதேஸ்வரி......
உன் மலரடிப் பணிந்தேன்
உன் மலரடிப் பணிந்தேன் தயாபரி...
பாடல்:
காலையிலே என்றும் அன்னையே உனைப் பணிந்தேன்
கருதும் செயல் புரிய வரமருள்வாயே

ஆலயம் போன்றே என்னுள் இருந்தே
அனுதினம் காத்தருள் என்றென்றும் நீயே
மகாஜனனீ மாதேஸ்வரியே
வருவாய் நியே.... வந்தருள் தருவாய் நீயே....(காலை)

ஞலம் புகழும் என் தாய் நீயே....
நம்பித் தொழும் அடியார் நெஞ்சினில் நிறைந்திருப்பாய்
நாடும் செயல் அனைத்தும் நலம் பெறச் செய்திடுவாய்
ஞானமுடன் செல்வமும் என்றென்றும் அருளிடுவாய்
மகா ஜனனீ......
----------------------

37. நாத லோலனே... (மெட்டு)
நாத ரூபியே.... நலம் சேர்க்கும் தெய்வமே...அம்மா..
வேத ஸ்வரூபியே... ரிக், யஜுர், சாம, அதர்வண (வேத)
உன் பாதார விந்தங்கள் பணிந்தேன் அம்மா(நாத)
கீத வினோதியே... சங்கீத....
வீணா, வேணு, மிருதங்க
ஸ்ருதி ஜதி லய பாவத் தாள
ஸப்தத் தாள சங்கீத வினோதியே....
உன் பாதார விந்தங்கள் பணிந்தேன் அம்மா(நாத)
---------------------
38. கஜவதனா – மெட்டு
சரணடைந்தேன் தஞ்சம் உன் பாதம் –அன்னையே
சஞ்சலம் தீர்த்தே அனுதினம் காப்பாய்(சர)

அனுதினம் உந்தன் மலரடிப் போற்றினேன்
அன்னையே காப்பாய் நாளும் எம்மை (சர)

நீயே மூவுலகிற்காதாரம்...
நீயே வேதாகம மந்திர சாரம்
நீயே வாழ்வின் ஜீவாதாரம்
நீயருள்வாய்....அம்மா…. நலம்பெற(சர)
-------------------------
39. ஸ்வாகதம் கிருஷ்ணா – மெட்டு
ஸ்வாகதம் அம்மா சரணாகதம் அம்மா
கருணை உரு எழிலே உன்
மலர்ப்பாதம் தனைப் போற்றினேன்- திவ்ய...(ஸ்)

போக வாழ்வு தவிர்த்தே புவியில் எம்மைக் காக்கும்
கஸ்துரி திலக ரூபி......
எந்தன் மாதா...
தினம் பாடி மகிழ்வேன்(ஸ்)
அன்பு மய ஜோதிவடிவ தெய்வம் நீயம்மா...
அன்புடனே அரவணைத்துக் காத்தனை நீயே....
ஆதாரம் உன் மலர்ப் பாதாரம் எனக்கு
அருள் வடிவே நாள்தோறும்
உனைப்போற்றித் துதிசெய்வேன்....(ஸ்)

நம்பியவர் கனம் தனிலே நாளும் இருந்தே
நலன்கள் பல செய்தருளும் நாதரூபமே
நாடி உன்னைச் சரணடைந்தேன்
நாளும் நாளும் காத்தருள்
நான்மறை ஜோதியே.. நலமுடனே காப்பாய் (ஸ்)
-----------------
40. கலைநிறை கணபதி –மெட்டு
ஸ்லோகம்
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்
தாயவளின் தயை பெற்றால்
மேன்மை பல நல்கும் மாதா அவள்
மலர்ப்பாதம் தனை நாடி நாள்தோறுமே.....
தப்பாமல் சார்வார் தமக்கு....(2)
ஆ....... ஆ...... ஆ.......

மணமிகு மலரடி சரணம் சரணம்
மாண்புடை அன்னையே சரணம் சரணம்
குணமிகு குலக்கொடி சரணம் சரணம்
குவலயம் போற்றிடும் அன்னையே சரணம்

திருநிறைச் செல்வியே சரணம் சரணம்
தீமையைப் போக்கிடும் அன்னையே சரணம்
நலம் பல நல்கிடும் நாயகி சரணம்
நாளுமே போற்றுவேன் சரணம் சரணம்(2)
41. இராகம் : ரேவதி தாளம் : ஆதி
அம்மா.... அம்மா.. அம்மா...
எனக்கபயம் அருள்வாய் என் தாயே நீயே...(அ)

இன்னல்கள் தீர்த்திடும் இதய தெய்வமே...(2)
எங்களை என்றென்றும் காத்தருள் தாயே (அ)

மங்கள நாயகியே மாதேஸ்வரியே
மலரடிப் பணியும் எங்களைக் காப்பாய்
நம்பினோர் தனை நிதம் நாடியருள்வாய்
நல்லருள் சேர்க்கும் வல்லமையோளே(அம்மா)
-----------------

42. ரகுநாயகா- மெட்டு
புவி மீதிலே... புகழ்மேவி நின்று
பல நன்மை புரியும் எழில் தாயே வருவாய்(பு)

பலநூறு பாவால் பணிந்தேத்துவேன்....
பதமலர்ப் போற்றியே உனை வாழ்த்துவேன்...(பு)

வளமான வாழ்வு தினம் மேவிடும்
வசந்தங்கள் பல வந்து வாழ்வில் கூடும்
வரம் நல்கும் தாயே...... உன்னருளால்
வாழ்வில் வெற்றி தேடி உயர்ந்தோங்குமே(பு)
---------------------

43/ ராகம்: ரேவதி தாளம்: ஆதி போ சம்போ - மெட்டு
ஹம்மிங்
நமோ............ மகாஜனனி....................
மாதேஸ்வரி....................

மலர்த்தாள் பணிந்தேன்.........................
மனம் கனிந்தருள்வாய்........................

சரணார.........................விந்தம்................
...நாளும்.................போற்றி..
பாமாலை................. சூட்டி........
.உனைப் போற்றிவந்தேன் அம்மா.......................
ஜய ஜக ஜனனி .....................

பாவயாமி.......................பாவயாமி.....................
பாவயாமி................பாவயாமி ............................

பாடல்

அம்மா அபயம் அபயம் உன் பாதம்
(நன்கு முறை கமாக மாகப் பாடவும் )

வா வா விரைந்திங்கு வந்தருள்வாய்
வளம் மிகு நல்வாழ்வு பெற்றுயர
(அம்மா அபயம் அபயம் உன் பாதம்)

நிர்குண பரப்ரம்ம ஸ்வரூபி................
நிரந்தர எழில் தீப ஜோதி
நிதம் உன்னைப் போற்றிடும்
அன்பரைக் காத்தே ..................
நிரந்தர சுகம் அதை நாளுமே சேர்ப்பாய்

(அம்மா அபயம் அபயம் உன் பாதம்)

திமித திமித திமி
திமிகிட கிடதோம்
தோம் தோம் தரிகிட தரிகிட கிடதோம்

மங்கள நாயகி மனம் கனிந்தருள்வாய்........................
மகிமைகள் பலபெற்ற மாதேஸ்வறியே.................

(அம்மா அபயம் அபயம் உன் பாதம்)
/////////////////////////////
44/ ஓம்கார நாதனு ....மெட்டு
ஓம்.....ஓம்.....

ஓம் மாதா உன்னையே..
துதிப்பாட வந்தேனே....நான்.........
பாமலர் தன்னிலே.....(2)

சந்ததம் உனைப் பாடியே......
வந்தனைக் கூறிடுவேன்.....
சிந்தையில்.... நீயிருந்தே.... காத்தருள்.... செய்திடு ..
அன்னையே...... அனுதினமும்....(2)

(ஓம்)....

நாரத கானம்.........ஆ.........ஆ.........ஆ..........
நாரத...கானம்....மீட்டியே.....நாளும்.....
நாயகி உன்புகழ் போற்றி நிற்ப்பேன்.....

நான்மறை... பொருள்கள்...யாவுமாய்....திகழும்....
நலமிகும் தெய்வமே...உன்னை நான்......

எழில்மிகும் என் அன்னையே.....
எளியோர்கள் துணை நீயம்மா......
என்றுமே....உன்னருள்....தன்னையே....நாடினேன்.....
என்றென்றும்....அருள் செய்யம்மா.....(2)
(ஓம்)

அன்பான அன்னையே... அறம்பல....செய்திடும்.....
அருள்மிகும் ஜோதி நீயே......(2)
அங்கு இங்கு என.....
எங்கும் பிரகாசிக்கும்.....
எழில்மேவும்.... தெய்வம் நீயே........

தியாக தீப....மய ஜோதியே......
நாங்கள் வாழ..... நலம் பேணினாய்....
என்றும்...எங்கள்...இதயமலரில் இருந்து....
காவல் தெய்வமாய் விளங்கும்.....
அன்னையே....வந்தருள்....(2)
(ஓம்)

45. புரோச்சே... வாரெவருரா---மெட்டு
நான் உந்தன் புகழ் பாடி மகிழ்வேன்...
அன்னையே... என்றுமே.....
உன் மலர்த் தாள் பணிந்து நின்றே....
தினம் போற்றி.... துதிசெய்வேன்....மனம் தனில்(நா)
பாமலரால்....... பதாம்புயத்தினை
பண்ணிசைத்தே பாத்தொடுப்பேன் – நீ
பரிவுடன் கேட்டு. மனம் மகிழ்ந்து..
வந்தருள்புரி அன்னையே...
சிட்டை ஸ்வரம்
ஸா... ஸாநிதபதநி ஸநிநி ததபம பாதமா
க.. மா. பா.. தா. நீ...
ஸாநி தபம நீதாபம கமபக மகரிஸ
ஸமா... கமபதமா.. கமபதநி.....
ஸ்ஸ்ரிநி நிநிஸ்தா ததநிபாத மபதநி
ஸ்நிதப மக மநிதநி பதமா பதநி
ஸ்மா...கரிஸ.... ரி...ஸாநிதப ஸா.... நீ....தபம
கமபதநி... (நான்)

தாயே உந்தன், தயையை, நீ, தினம் தந்தருள்
எனக்கே......
வா வா என் தாயே, வருவாய், நீ
விரைந்தருள் புரிந்திட
வாழ்த்தினேன் உனை தினம் பற்பல பண்ணினில்
பூமழைப் பொழிந்தே போற்றி தினம்(2)
பாமாலை கேட்டு மனம் கனிந்து என்றும் அருள்புரி
உன் அன்பு மகள் எனை தினம் காத்து
(சிட்டை ஸ்வரம்...) (நான்)
--------------------
46. விஸ்வாதிபதே – மெட்டு
அம்மா உந்தன் மலர்ப்பதம் பற்றி
அனுதினம் போற்றிடும் எங்களைக் காப்பாய்
என்றும் உன்புகழ் பாடித் துதித்திடும்
எங்களைக் காப்பாய் என்றென்றும் அருள்வாய்

சிட்டை ஸ்வரம்
கா பநிஸ்ரிஸ் பா ஸாநி பகரிஸா
நிஸா கரீ பகா ரிபா நிரீ கஸா
நிஸரிஸ பா பநிஸரிநீ ககரிஸபா
ககமம பப கக நிநிபநி ரிகபநி(அம்மா)


அஷ்ட சித்தி வரப்பிரியாய அன்பு கொண்ட
அன்னை நீயே...
அனந்த குண கல்யாண ரூபிணி
உந்தனைப் பாடிடும் அன்பரைக் காத்தருள் (கா....
சிட்டை ஸ்வரம்)
-----------------------------
47. (சங்கரா பரணம் என்ற படத்தில் அமைந்த

ராகம் தாளம் பல்லவி என்ற, S . B .
பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய மெட்டில் பாடவும்)


ராகம் பிலகரி தாளம் ஆதி

வா வா வருவாய் அன்னையே........ நீ.
வா வா வருவாய் அன்னையே......
நீ கனிவோடு என்னைக்காக்க
விரைந்தோடி வந்தருள் (வா)

கானம் பாடியே உன்னைப் போற்றுவேன்............
காலம் முழுதும் உன் அருள் பெற........(வா)

தாயே உன் மலர்ப்பாதம் சார்ந்தேனே நாள்தோறும்
தஞ்சம் என்றே உன்னைப் பணியோடு வேண்டியே

சங்கடம் தீர்த்தேன்றும் காத்தருள் புரிந்திடும்
சகல நலமும் வழங்கும் சாந்த ஸ்வரூபினியே

சீலம் மேவும் பல புகழ்தனைப் பெற்றவளே.......
ஆ...............(சீலம்)
சிந்தையில் நின்றே நல்லருள் புரிந்திட (வா)



ஸ்ருதிலயத்தோடுந்தன் புகழ் தன்னைப் பாடி.......
பாதார விந்தங்கள் பணிந்தேனே நாளும்.........(2 )

அன்னையே நீ என்னை அன்புடன் காத்தருள்
அனுதினம் அரவணைத்து அருளோடு பார்த்தருள்

வளமான நல்வாழ்வு.....................
ஆஅ..................
வளமான நல்வாழ்வு தரும் தாயே வருக
வந்தனை கூறியே உன்னை வாழ்த்திப் பாடிடும்
எங்களைக் காத்தருள் அன்னையே...........

48. பன்னிரு விழிகளிலே..... (மெட்டு)
உன்னிரு மலர்விழியால் ஒருமுறை என்னை நீ
கனிவுடன் பார்த்தருள்வாய் தாயே
பார்த்தால் இடரேது வாராது எப்போதும் அம்மா(உ)

பைந்தமிழ்ச் சொல் எடுத்து
பண்புடன் பாட்டிசைத்து
அன்னையே உன்னை தினம்
வாழ்த்திப் பாடிப் போற்றிடுவேன் (உன்)

வையகம் முழுவதும் உந்தனைப் போற்றிடுமே...
வாழிய அன்னையென்று நாளும் வாழ்த்தியே
வெள்ளை உள்ளம் கொண்டவளே
வேதனைத் தீர்த்திடுவாய்....
பொன்மய ஜோதி உன்னைப்
போற்றியே வாழ்த்திடுவேன் (உன்)
------------------------------
49/ சபா பதிக்கு - மெட்டு
மகா ஜனனி உந்தனுக்கு
சமானமாகுமா
உலகில் எதுவும் (மகா)

அனுபல்லவி

கிருபாகரி.................

கிருபாகரி............உன்னைப்போல...............(இரண்டு முறை)

கிடைக்குமோ இந்த தாரணி உள்................
அன்பு மகா ஜனனி.........உந்தனுக்கு.............
சமானமா.....................ஆ...................

சரணம்

ஒரு தரம் அன்பு அன்னையவள் மலர்
பாதம் பணிந்தால் போதுமே.............
பரகதிக்கு வேறு புண்யம் பண்ணவேண்டுமா?

அரிய உலகில் மூவர் தொழும்
அன்பு தெய்வம் அவளே...............

அறிந்து சொல்லப்போமோ...........தினம்
அவள் பெருமை தனை நாளும் நாளும்
(மகாஜனனி................)
==============
52/ (கலியுக வரதன் - மெட்டு)
கலியுக தெய்வமாய் கண்முன் அனுதினம்
காட்சி அளித்திடும் தாய் நீயே வா........(இரண்டு முறை)

அனு பல்லவி

மன இருள் மாயத்தே மகிமைகள் புரியும்
மனதினில் நிறைத்திருக்கும்
மாண்புடை தெய்வமே (கலி)

சரணம்

சஞ்சலம் போக்கியே சந்ததம் காத்தே
சர்வ மங்களம் நல்கிடும் தாய் நீயே வருக
சாந்த தயாபரி சரணம் அடைந்தேன்
சகலநலம் தந்தே காத்தருள் புரிவாய்

கலியுக தெய்வமாய் கண்முன் அனுதினம்
காட்சி அளித்திடும் தாய் நீயே வா

தாய் நீயே..................வா......................
தாய் நீயே.......................வா....................
-------------------------
53. குல தெய்வமே உன்னைக் கொண்டாடுவேன் – என்
குறைதீர்க்கும் என் அன்னையே நலம் தரும்(குல)

அழகாய் என் மனவீட்டில் எழில் மேவ வீற்றிருக்கும்
என் தாய் நீயே... என்றும் எனைக் காக்கும் அன்னையே (குல)

பைந்தமிழ்ப் பாக்கொண்டு பற்பல பனுவலிலே
பாங்குடன் உன் புகழை பணிவுடன் போற்றி நின்றேன்
பரிவுடன் ஏற்றரும் பங்கொடி நீயே.. உன்
பதமலர் போற்றி நிற்கும் எந்தனைக் காத்தருள் (கு)
-------------------------



54. மகா கணபதீம் - மெட்டு
இராகம்: நாட்டை தாளம்: ஆதி
பல்லவி

மகா ஜனனி உன் மலர் தாள் பணிந்தேன் (கமகமாக ஐந்து முறைகள் பாடவும்)

மதித்து நாள்தோறும் உந்தனை வாழ்த்தியே.........(மகா)

அனு பல்லவி

மகா மகிமை மிகும் மாதேஸ்வரியே ( ஐந்து முறை)
மகிதலம் எங்கும் உன் அருள் மழைப் பொழிவாய்(மகா)

சரணம்

ஈரேழ் உலகமும் உந்தனைப் போற்றி............
இன்பம் கொண்டே.......அனுதினம் வாழ்த்துமே ........
ஈடு இணையற்ற............இன்னமுதம் நீயே...........
இன்னருள் தந்தே என்றுமே காத்தருள் (மகா.....)
-------------------------------
55. ஜெங்கார ஸ்ருதி செய்குவாய்....
ஜீவ வீணையில்
சங்கீதாம்ருதி செய்குவாய் என் அன்னையே..(ஜெ)

பைந்தமிழ்ப் பாவினில் நான் உனைப் பாடிட
பரவசம் அடைந்தே மனம் கனிந்தருள்வாய் (ஜெ)

பல பல என்னும் காலை பாடும் புள்ளோசைப் போலும்
பாற்கடல் உள்ளம் வீம் ஆர்க்கும் கர்ஜனைப் போலும்
மலர்க்கணை பொங்கிவரும் மந்தமாருதம் போலும்
மது உண்ட வண்டினம் வளர்க்கும் ரீங்காரம் போலும்(ஜெ)
---------------------------------
56. சிந்தனை செய் மனமே---
செய்தால் தீவினை அகன்றிடுமே
திருவாக உருவான அன்னையைப் பணிவாக(சி)
செந்தமிழ்ப் பாமாலை சூடி தினம்....
ஆ……… ஆ.........
செம்மை மிகுந்திடும் மலரடி தனை நீயே(சி)

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே அருமறை பரவிடும்
எழில் மிகு அன்னையின் மலரடியை (சி)
--------------------------
57. அம்மா கருணை புரிவாய் – எந்தன்
அம்மா கருணை புரிவாய்

கனிவோடு காத்தே கருத்துடன் வளர்த்திட்ட
கருணாமய ரூபி சரணாகதம் பணிந்தேன்

தீராத கவலையும் நோய்வாதையும் தணிய
தேவி உந்தன் பாதம் பாடி மகிழ்ந்திடுவேன்
நாயகியே நலம் தாராய் தயாபரி – உன்னை
நம்பும் அன்பர்களுக்கு என்றும் அருள்புரியும்(அம்)
---------------------

58. இன்பமெல்லாம் தரும் அன்பு தெய்வம் தாயே
எந்நாளும் மறவேனம்மா
என் வாழ்வில் எந்நாளும் மறவேனம்மா

துன்ப வினைத் தீர்ப்பாய் தீய குணம் மாய்ப்பாய்
எந்நாளும் மறவேனம்மா
என் வாழ்வில் எந்நாளும் மறவேனம்மா
------------------------
59/ (அலைப்பாயுதே கண்ணா மெட்டில் பாடவும் )
இராகம்: கானடா தாளம்: ஆதி
மாதேஸ்வரி அம்மா உன் மலரடிப் போற்றிநின்றேன் (2 )

உன் அருள்தனைப் பெற்றிட ஆனந்தம் எய்திட
(மாதேஸ்வரி)

நிறைவருள் தந்தே ஆஅ..................
நிறைவருள் தந்தே நீங்காமல் காப்பாய்
நெஞ்சினில் நிறைந்திருக்கும்
நிர்மல ரூபியே (மாதேஸ்வரி)

பெருமை மிகுந்திடும் உன்
புகழினைப் போற்றிடுவேன்
பேரின்பம் பெறவே பைந்தமிழ்ப் பாவால்

கனிவுடன் கேட்ப்பாய் ஆஅ...........
கனிவுடன் கேட்ப்பாய் காவலாய் நீயருப்பாய் (2 )
காருண்ய எழிலே கருணையின் உருவே (மாதேஸ்வரி)

அமுதத் தமிழால் ஆனந்த இசையில்
அனுதினம் உன்புகழ் இசைத்திடுவேன்
எந்தன் அன்பு அன்னை உன்னை நானே
அடைகலமாகப் பற்றிடுவேன்

அகமகிந்திடுவேன் அன்புடன் துதித்தே
அன்னை உன் அடிமலர் போற்றிடுவேன்

கருணைமனம் கொண்டு காத்திடம்மா

குறைகள் போக்கியே குணமாய் வாழ்ந்திட
குலதெய்வம் நீயே அருளிடம்மா (மாதேஸ்வரி)

அம்மா............ அம்மா...........................
-----------------------

60. இராகம்: பந்துவராளி தாளம்: ஆதி
நின்னருள் இயம்பலாகுமோ...
இன்னல் கூட்டி இன்பம் காட்டி
இந்த்ர ஜால விந்தைக் காட்டி
உன்னை நம்பும் அன்பர் தம்மை
நீங்கா இன்பம் தன்னில் ஆழ்த்தும்(நி)

வண்ண வண்ண மலர்கள் தன்னை
எண்ணம் போல தூவி இசைத்து
திண்ணமாக நம்பும் அன்பர்
கண்களாகத் திகழும் தாயே(நி)

சொந்த பந்த துன்பம் நீக்கி
வந்த இந்த பிறவிப் போக்கி
அந்தம் ஆதியாகி அருளும்
எந்தன் தாயே உந்தன் புகழை(நி)
--------------------------------
61. எங்கும் உன் ஆடலடி தாயே.....
அம்மா பொங்கும் கடல் மூன்றும் உந்தன்
பொற்பதங்கள் தழுவுதம்மா(என்)

தங்கிடுதே சாந்தி இன்பம்
தாயே உன்னைச் சரணடைந்தால்
தஞ்சம் எனப் போற்றி நின்றேன்
நெஞ்சம் குளிர்ந்து அருளிடம்மா

குழலும் யாழும் கேட்டால்
குதிதோடி நீ வருவாய்
அழ நான் துவங்கி விட்டால்
அம்மா ஓடி வந்திடுவாய்
அழகெல்லாம் அழகெனவே
அமைந்திடும் பேரழகே(எங்கும்)
----------------------
பக்தி கமழ் கீர்த்தனைகள் தொடரும்

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி (23-Feb-19, 11:22 am)
பார்வை : 1003

மேலே