தேனினும் இனிய திரையிசை மெட்டுப்பாடல்கள் - அன்பு அன்னைக்கு

1. ராகம் பூபாளம் தாளம் ஆதி
(ஒரு பொன்மானை நான் பாட தகதிமிதோம் மெட்டில் பாடவும்)
ஆஆ..................
என் அன்னையே உனைப்பாட நான்வந்தேன்
உன் அருள்தன்னை தினம் வேண்டி நான் வந்தேன்
அன்னையே நீ எனக்கருள்வாய்
அன்புடன் தினம் என்னைக் காப்பாய்
உன் மலரடி பணிந்தேத்துவேன்
அதில் பூமலர் தினம் சாற்றுவேன் (என்)

தத்தத் தகதிமி தத்தத் தகதிமி
தத்தத் தகதிமி தோம்
தாம்கிட ததிகிட தாம்
தாம்கிட ததிகிட தை
தாம்கிட ததிகிட தாம்கிட ததிகிட
ததீம் தகிட ததீம் தகிட ததீம் தகிட தோம்

பைந்தமிழ் பாவினின் உன் புகழ் பாடிட
பற்பல பனுவல் எடுத்து வந்தேன்
பாமலர் பூமலர் நாளுமே சூட்டியே
பதமலர் போற்றிட நான் வந்தேன்

எந்தன் அன்னை உன்னை என்றும் துதிப்பாட
எழிலுடன் வருவாய் என் தெய்வமே
ஏற்றம் பல தந்தே பாரில் நான் உயர
வாழ்த்தியே அருள்வாய் என்றென்றுமே

கலைநிறை தெய்வம் நீயே
காருண்ய செல்வம் நீயே
என் அன்னையே உனைப்பாட
நாள்தோறும் உனைப்போற்ற
மதி தன்னில் கவிசேருது
என் மதி தன்னில் கவிசேருது

அன்னையே நீ எனக்கருள்வாய்
அன்புடன் தினம் என்னைக் காப்பாய்
உன் மலரடி பணிந்தேத்துவேன்
அதில் பூமலர் தினம் சாற்றுவேன் (என்)

நாதிந்தின்னா நாதிந்தின்னா
நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தா திகிதிமி தித்தா திகிதிமி
தித்தா திகிதிமி திக தானதா
திக தானதா திக தானதானதா l

சந்தன குங்கும அலங்காரம் செய்தே
சரணங்கள் பாடியே நான் மகிழ்வேன்
சரணமே சரணம் என்றுனைப் போற்றியே
சந்ததம் உந்தனை வாழ்த்திடுவேன்

வாழ்க வளமுடனே நாளும் மகளெனவே
வாழ்த்துக்கள் கூறியே நீவருவாய்
வையம் உள்ளளவும் வாழ்த்தித் துதிப்பாட
வரமது தந்திட நீஅருள்வாய்

வா வா என் அன்னையே தினம்
தா தா உன் தயையே
எந்தன் மாதாவே உனைப்பாட
நாள்தோறும் உனைப்போற்ற
மதி தன்னில் கவிசேருது
என் மதி தன்னில் கவிசேருது

அன்னையே நீ எனக்கருள்வாய்
அன்புடன் தினம் என்னைக் காப்பாய்
உன் மலரடி பணிந்தேத்துவேன்
அதில் பூமலர் தினம் சாற்றுவேன் (என்)
------------------
2. நீலக் கடலின் ஓரத்தில்- மெட்டு
அன்னை உன்னைப் பாட்டிவேன்
அருளே தந்தெம்மைக் காத்திடுவாய்
இன்னல் துடைத்தே அருளிடுவாய்
ஈடு இணையின்றி திகழ்ந்திடுவாய்

உலகம் யாவும் நீதானே
உயர்வு தந்தெமைக் காத்திடுவாய்
ஊனம் யாவும் போக்கிடுவாய்
உயிரின் உயிராய்த் திகழ்ந்திடுவாய்

எண்ணம் யாவிலும் நீயம்மா
ஏற்றம் தந்தெம்மை தினம் காப்பாய்
ஐயம் இன்றி உன் புகழ் பாடி
அருள் நலம் பெற்றேத் திகழ்திடுவேன்
வாழ்வெனக் கென்றும் நீதானே – உனை
வையம் உள்ளளவும் போற்றிடுவேன்
வாழிய மகள் என வாழ்த்திடவே
விரைந்திங்கு வந்தருள் புரிந்திடுவாய்
---------------------
3. இன்னிசைப் பாடிவரும் – மெட்டு
அன்னையே சரணம் அம்மா என அனுதினம் போற்றிடுவேன்
அன்புடன் வந்திடுவாய் – உந்தன் அருள் தானைத் தந்திடுவாய்
எந்தன் வாழ்வும் நீயன்றோ-
எந்தன் வழியும் நீயன்றோ
இந்த வையம் முழுவதும் எனக்கு யாவும் நீயன்றோ
உனைப் பாடவே மனம் மகிழுதே
உனை நாடவே நலமும் பெருகுதே
எந்தன் அன்னை தினமும் என்னைக் காத்தருள்வாய்(இ)
சரணங்கள் பலபாடி... மகிழ்வேனே நாள்தோறும்...
பாமாலை தனைச் சூட்டி ... உனைப் போற்றிப் பரவிடுவேன்...
அற்புத ஒளிவிளக்கே எந்தன் அடக்கலம் நீயல்லவா...
பொற்பதம் நாடிடுவோர் -துயர் தீர்த்தருள் புரிந்திடுவாய்;
அம்மா.. அம்மா... என அழைக்க ஆசைப் பொங்கிடுதே
ஆடிப் பாடி மகிழ்ந்து உள்ளில் வெள்ளம் பாய்கிறதே
உனைப் பாடப் பாட பாட மனம் மகிழ்கிறதே..(அன்)
பலநூறு கவிபாடி பணிவோடு உனைத்தேடி
புகழ்ந்தாலே பேரின்பம் நீங்காத நிறைசெல்வம்
நாளும் வாழிவிலே எனை நாடிக் கூடுதே..
கோடிக் கோடி நலம் தினம் தேடி வருகின்றதே..
அம்மா நீயே வந்திடுவாய் அணைத்தே காத்திடுவாய்
அன்பு கொண்டே தினம் காப்பாய் கருணை விழியாலே..
உனைப் போற்றிப் போற்றிப் பாடிட தினம் சுகமே..(அன்னையே...)

4. எதோ ஒரு பாட்டு - மெட்டு)
எந்தன் அன்னை உன்னை தினம் பாடி மகிழ்வேன்
நாளும் உனைப் போற்றிப் பல நன்மைகள் பெற்றிடுவேன்
என்றும் பார்புகழ் தெய்வம் நீயே.......
எந்தன் பாசம் மிகும் திருவே
தினம் பைந்தமிழ் சொல்லெடுத்து
பல பனுவல்கள் பாடிடுவேன்

அன்னை நீயே................. வந்திடுவாய்........
அன்புடனே தினம் காப்பாய்.............
உந்தன் பாதம் சரணடைந்தேன்............
உயர் நலன்கள் தந்திடுவாய்...................(என்)

சரணம் தினம் பாட................மனச் சஞ்சலம் அகன்றிடுமே...............
சகல நலம் யாவும்............ தினம் நாடிக் கூடிடுமே................

சத்துவ குணங்கள் யாவும் ஒருங்கே
தேடி வந்திடுமே................
சரணம் அன்னையே .......எந்தன் ..............அன்பு தெய்வமே...........
புகழ்ந்து பாடிடும்..................என்னை..............
நாளும் காத்தருள்...................(என்)

பூக்கள் பல தூவி ..............தினம் புகழ்ந்தே பாடிடுவேன்...............
பாக்கள் பல இயற்றி................உந்தன் பதமலர் பணிந்திடுவேன்...........
பக்கத் துணையாய் நீயிருந்தென்னை
நாளும் காத்திடுவாய்...........
பாடிப் பாடியே................உள்ளில் ................நாளும் மகிழ்வேன் நான்..................
தேடித் தேடியே.............. உந்தன்..............
திறனைப் பாடுவேன்.............
-----------------------
5. நாதஸ்வர ஓசையிலே – மெட்டு
அம்மா நீயே வந்தருள்வாய்
அணைத்தே என்னைக் காத்தருள்வாய்
பாசம் மிகுந்த என் தெய்வம்
பாரில் என்றும் நீயே அன்றோ (அன்னை)
சரண கமலம் பாடி நின்றே சரணடைந்தேன் அனுதினமும்
சஞ்சலங்கள் தீர்த்து என்றும் சாந்தம் அருள வந்திடுவாய்
சகல கலை பயின்றிடவே சர்வ ஞானம் தந்திடுவாய்
சந்ததம் உனைப் பாடிடவே
சிந்தை குளிர்ந்து அருளிடுவாய் (அம்மா)
பாடல் பாடி இசைத்திடுவேன் பாத கமலம் பணிந்திடுவேன்
பாலன் எனைக் காத்திடவே பரிவுடனே வந்திடுவாய்
பாரில் உள்ள மக்களையே பாங்குடனே காத்திடவே
பலவாறு வந்திடுவாய் பண்பு மிகும் தெய்வம் அம்மா
----------------------

6 கொடியிலே மல்லிகைப்பு - மெட்டில் பாடவும்)

அன்னை என்னை அனுதினம்
காத்தனைத் தாயே
அன்புடனே போற்றி என்றும்
அரவணைத் தாயே

அன்புமகள் நீயென்று கூறிமகிழ்ந்தாயே
அமுத மொழி கூறியே அணைத்து மகிழ்ந்தாயே
(அன்னை)

பலநாள் என்பொருட்டு நீயேதான்
பசியை மறந்தாயே
மனதில் என்னை நினைத்து நீயேதான்
மகிழ்ச்சி கொண்டாயே

கண்மணியே என்றுசொல்லி
கருத்தாய் வளர்த்தாயே
காலமெல்லாம் கண்ணிமைப்போல்
காவல்புரிந்தாயே

எந்தன் தெய்வம் இன்றும் என்றும்
இனி யார் தாயே (அன்னை)

பலநாள் பணிந்திடினும் என்றென்றும்
பதமலர் போற்றிடினும்
அன்னையுன் மனம் குளிர
நாள்தோறும் ஏதேதோ செய்திடினும்
அத்தனையும் உந்தனுக்கு
ஈடுஇணை யாகுமா
அன்னை நீயே வுய்யும் வழி
கூறியருளாயோ

எந்தன் உள்ளம் தன்னில் நீயே
என்றும் அருள்வாயம்மா (அன்னை)
---------------------------------

8, ஆடுகின்றானடி தில்லையிலே –மெட்டு
ஆனந்தம் கொண்டேன் உனைப்பாட – தினம்
ஆயிரம் பண்ணிசைத்தே போற்றிடவே
அன்னையே உந்தனை அனுதினம் நானே
அருந்தமிழ் மொழியில் அரும்பண் இசைத்தே (ஆ)
உலகினில் எனை நீ ஈன்றெடுத்தே
உள்ளன்புடனே காத்து நின்றாய்
ஒவ்வொரு நொடியும் எனைக்கண்டே
உயர் பேரின்பம் எய்தியே மகிழ்ந்து நின்றாய் (ஆ)
தன்னலம் கருதா பெருந்தகையே நீ
தரணியெலாம் போற்றும் பங்கொடியே
பாமலர் பூமலர் சூட்டி தினம் – உந்தன்
பதமலர் போற்றியே பாடிடவே (ஆ)
-----------------------------
9) கருணை மழையே மேரி மாதா- மெட்டு
கருணை மழையே அன்புத் தாயே
கண்கள் திறந்தருள்வாய்
கண்கள் கலங்கும் ஏழை மகளின்
பாடல் கேட்டருள்வாய் (இரண்டு முறை)

சரணம் உந்தன் பாத கமலம்
நம்பிவந்தேன் நான்.............
தஞ்சம் எனவே உந்தன் பாதம்
வேண்டித் தொழுவேன் நான்.............(இரண்டு முறை) (கருணை மழையே.......)

கருணை விழியால் காத்து நாளும்
அருளைத் தந்திடுவாய்.........
கனிந்த மனதில் உருகிப் பாடும்...........
பாடல் கேட்டருள்வாய்............(இரண்டு முறை) (கருணை)

அன்னை நீயே வந்தருள்வாய்...............
அனைத்து நீயே............ காத்தருள்வாய் ....................
வாழ்த்துக் கூறி........... வரமருள........................
விரைந்து நீயே.................... வந்தருவாய்...........
வந்தருள்வாய்.................... (கருணை மழையே.................)
------------------------------------
10) சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம் என்ற மெட்டில் அமைந்த பாடல்
பதமலர் தனை தினம் பணிந்தேனம்மா
எந்தன் தாய் நீயே வந்தருள்வாய் ............
குறை தீர்ப்பாய்,,,,,,,,,

கோடிக்கண் தேடிவரும் அனுதினமும்..............
உன்னைக் கொண்டாடி மகிழ்ந்திடவே
இப்புவியில்...............

பாற்குடம் எடுத்துவந்து உந்தன் இரு...............
மலர்ப் பதம் தனில் நானே ஊற்றிடுவேன்.........
பரவசம் கொண்டே நீ......... எனைக்காக்க.........
இந்த புவிதனில் அவதரித்த தாயம்மா...................

அன்னையே உன் புகழ் பாடிடுவேன் இங்கு
நானம்மா....................
அன்புடனே எனைக் காத்திடுவாய் தினம்
நீயம்மா................................

அன்னையே ...............சரணம்............. என்தாயே..............(இரண்டு முறை) (பத)
உள்ளத்தால் உந்தன் பதம் பற்றிநின்றே தினம்
ஊனுருகப் பல பண்ணிசைத்திடுவேன்.................. நான்
உயர் நலம் தந்திடும் தாய் நீயே எங்கள்
ஊழ்வினைத் தனை மாற்றி அருளம்மா...............
.அன்னையே உன் புகழ் பாடிடுவேன் இங்கு
நானம்மா....................
அன்புடனே எனைக் காத்திடுவாய் தினம்
நீயம்மா................................

அன்னையே ...............சரணம்............. என்தாயே..............(இரண்டு முறை) (பத)
------------------
11) மருத மரிக்கொழுந்து வாசம் என்ற பாடல் மெட்டில் பாடவும்)

ஹம்மிங்

பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு
சக்கரையில் பாகுவெச்சு பாகுவெச்சு
உப்பிடிச்சு மெளகிடிச்சு மெளகிடிச்சு
அன்னை உனக்கு பொங்கலிட பொங்கலிட
அம்மா நீயே எங்களையும் காத்தருள்வாய் தாயே..............

(பாடல்)

அம்மா எனைக்காக்க வா வா
உன் அருள் தன்னைத் தந்திடவே நீ...... வா....
உன்னை நான் பாட , நாள்தோறும் போற்ற
மதி தன்னில் கவிசேருது பாராய் - என்
மதி தன்னில் கவிசேருது பாராய்

அன்னையே உன்னைத் துதிப் பாடிடவே
மகிழ்ந்திடுவாய்
அன்புடனே காத்திடவே அருளுடனே வந்திடுவாய்
உன்னைநான் பணிந்திடவே உன்னருளைத்
தந்திடுவாய்
உண்மையான அன்பு கொண்ட எந்தன் தெய்வம்
நீயேயன்றோ

அன்னையே சரணம் அம்மா என்று நான் போற்றிடுவேன்
எங்கள் குறை தீர்த்திடுவாய்
இன்னல் பல போக்கிடுவாய்

முப்பொழுதும் காத்திடவே வாம்மா
தப்பதனைப் பொறுத்தருள்வாய் நீயே
எப்பொழுதும் உன் நினைவே தாயே
தப்பாமல் உனைப் பணிவேன் நானே

எனதன்புத் தாய் நீயே வந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் ..(.அம்மா எனைக் காக்க.........)

சரணகமலம் பாடிடவே சந்ததமும் காத்திடுவாய்
சங்கடம் பல போக்கி சஞ்சலமதைத் தீர்த்திடுவாய்
சப்தஸ்வர இசையமைத்து நாள்தோறும்
பண்ணிசைப்பேன்
சரிகமபதநி என்று உன்புகழை இசைத்திடுவேன்

சடுதியில் வந்திடுவாய் சந்ததமும் காத்திடுவாய்
சாதனை புரிந்திடவே சார்ந்தருள் புரிந்திடுவாய்

சோதனைகள் யாவும் போக்கும் தாயே........
சோர்வுகளைப் போக்கியருள் வாயே......
சர்வமங்கள நாயகியே நீயே................
சௌபாக்கியம் தந்தருள்வாய் தாயே......

உன் சரண் பாடி மகிழ்ந்திடுவேன்
நாள்தோறும் போற்றிடுவேன்
அம்மா.......... எனைக் காக்க வா..... வா.............
----------------------
12. ஓ...... மாதா..... மாதா......ஆ....... வந்தருள் விரைந்து நீ தா எந்தன் மாதா (ஓ)

தீன ஜனங்களைக் காப்பவள் என்றுன்னை
முழு மனதுடனே தினம் பணிந்தேனே
பணிந்ததும் பஜித்ததும் பலனிலதாமோ
விரைந்து காத்தருள் புரிந்திடுவாய் (ஓ)
-------------------------------

13. முருகா என்றதும் --- மெட்டு
அம்மா வா என்று தினமும் பணிந்தேன்
அருளோடென்றும் காத்தருள் புரிவாய்
அம்மா சரணம் அம்மா சரணம்

மறையெல்லாம் போற்றும் நாயகி நீயே
மறவா வரமருள் தந்திட வா வா
தாயே வா.... தயையே வா....(2)
சகலமும் எனக்கென்றும் நீயே அம்மா (அம்மா)
ஜென்ம பாவவினைத் தீரவே பாரினில்
தினம் உந்தன் பதமலர்ப் பற்றி நின்றேன்
அருளோடெம்மை காத்திட வருவாய்
அன்னையே நீயே கனிவுடன் எம்மை (அம்மா)
---------------------------
14. நாராயண மந்திரம் – மெட்டு
ஓம் நமோ மாதா அருள்...(3)
மாதா அவள் நாமம் அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்தே பந்தங்கள் தீர்க்க
இறையென வந்த சாதனம்

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பலனில்லை
உயிர்களை அழித்து ஹோமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை
தாயே வா... உன் தயயைத் தா.. என்று
நினைப்பவர் நலம்பெறுவார் (மாதா)
ஆதியும் அந்தமும் மாதா அவளே
அன்னையாம் அவளே சகலமும் ஆவாள்
பக்தியும் முக்தியும் மாதா அவளே
பகலும் இரவும் காத்திடும் தாயவள்
மாதா நமோ ஜெய மாதா நமோ(8 முறை)
-------------------------

15) கண்ணன் ஒரு கைக்குழந்தை மெட்டு

அன்பு மிகும் அன்னை உன்னை
ஆவலுடன் பாடவந்தேன்
செந்தமிழ் தேன் சொல் எடுத்து
அன்புடனே போற்றி நின்றேன்
அனுதினம் உன் அருளை பெற்றிடவே
வாழ்த்தி நின்றேன்
அன்னை நீயே வந்தருள் வாய்
அன்புடனே காத்தருள் வாய்

உந்தன் புகழ் பாடிடவே எந்தன் மனம் நாடுதம்மா
உயர் நலன்கள் பல தந்த அன்பு தெய்வம் நீயம்மா
ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்திழையே
உன்னைப் பணிவேன்
ஏற்றம் மிகு வாழ்வதனைப்
பெற்றுயர்ந்து புகழ் பெறுவேன் (அன்பு)

பைந்தமிழ் சரமெடுத்து பாமாலை சூட்டிடுவேன்
பைங்கொடியே உன்புகழைப்
பணிவுடனே இசைத்திடுவேன்
பாங்குடன் கேட்டு தினம் பரிவுடனே காத்திடுவாய்
பாசம் மிகும் எந்தன் தாயே
நேசமுடன் எமைக் காப்பாய் (அன்புமிகும்)
--------------------------
16. மலரே..... அன்பு மலரே......
வாசம் மிகுந்த பூ மலரே....
மனதை வருடும் தேன் மலரே.....(மலரே)

தாயென்னும் பெயர்க் கொண்ட
தனிப்பெரும் தெய்வம் நீ
தன்னலம் கருதாத முதன்மைப் பொருள் நீயே
தயையே உன் புகழ் பாடுவேன்
நாளுமே போற்றுவேன் பாமலர் சாற்றுவேன்
பந்தமிழ் சொல்லால் அனுதினம் உன்னை
தாயே நீ கேட்டருள்வாய்..(வாசம் மிகுந்த...)(மலரே)

நானென்ற அகந்தைப் போக்கியருள்வாய்
நான்மறைப் பொருளே நலம் பல செய்யும்
நாயகி நீயே...அன்றோ....

நம்பினேன் உன்பத மலர் தனை நாளும்
நங்கையே நீயே... காத்தருள் புரிவாய்
நல்வாழ்வு தருவாய் அம்மா....(வாசம்... (மலரே)
----------------------------------

17 நம்பினார் கெடுவதில்லை- மெட்டு
அன்னை வந்தாள் எந்தன் அன்னை வந்தாள்
எந்தன் கண்ணீரை மாய்த்திட அன்னை வந்தாள்
அன்னை வந்தாள்.............ஆ..................

தேடுகின்ற கண்களில் என் அன்னை வந்தாள்
தீபம் ஒன்று கையில் கொண்டென் அன்னை வந்தாள்
கேட்டவர்க்கு கேட்டபடி அன்னை வந்தாள்.......
கேள்வியிலே பதிலாக அன்னை வந்தாள்
தருமம் என்னும் தேரில் ஏறி அன்னை வந்தாள்
தாளாத துயர் தீர்க்க அன்னை வந்தாள்

அன்னை வந்தாள்....... எந்தன் அன்னை வந்தாள்........
அன்னை வந்தாள்,,,,,,,(அன்னை)

முடவர்களை நடக்க வைக்கும் அவள் மலர் கைகள்
மூடர்களை அறிய வைக்கும் அவள் மலர் நாமம்

குருடர்களை காணவைக்கும் அவள் மலர்க் கண்கள்
ஊமைகளைப் பேச வைக்கும் அவள் மலர்
மொழிகள்

அருளோடு தினம் காக்க விரையும் உள்ளம்
அன்போடு அரவணைக்கும் அவள் அருள் வெள்ளம்
அம்மா...........சரணம்.............
அம்மா...............சரணம்..............(அன்னை)

(ஹம்மிங்)
அம்மா.........................அம்மா....................அம்மா................

கருணைஎன்னும் கண்திறந்துப் பார்க்க வேண்டும்
காவல் என்னும் கைநீட்டிக் காக்கவேண்டும்
கனி மழலைப் பாடல் தன்னை கேட்க வேண்டும்
கனிவோடு நீ என்னுடன் வாழ வேண்டும்

கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் அம்மா.........
கருணையே அருள் செய்ய வருவாயம்மா........

அம்மா................சரணம்...............
அம்மா.................. சரணம்............... (அன்னை)
-------------------
18. மாலைப் பொழுதின் மயக்கத்திலே – மெட்டு)
தாயே உந்தன் மலரடிப் பணிந்தேன்
அருள்புரிவாய் அம்மா....
தயைப் புரிந்தென்றும் கருணையோடெம்மைக் காத்தருள்வாய் நீயே.......
காத்தருள்வாய் தாயே...(தாயே)

கருத்தினில் நின்றே கடமையாற்ற
வரமருள்வாய் நீயே...
காலம் முழுதும் என்னுடன் இருந்தே
காத்தருள்வாய் நீயே.......
காத்தருள்வாய் தாயே...(தாயே)

கண்கண்ட தெய்வம்..... காவல் தெய்வம்....
என்றும் நீயம்மா.....-தினம்
கனிவுடன் காத்தே மனம் குளிர்ந்திடுவாய்
மங்கள வடிவினளே...

மனதினில் உன்னை அனுதினம் பணிந்தே
மகிழ்வுகொள்வேன் நானே....
மாறா அன்பைப் பொழிந்தே என்றும்
பாசம் வைத்தாய் நீயே.....(2) (தாயே...)
-------------------------

19) தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி ---
-மெட்டு
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் தாயே
திருவிளக்கின் ஒளியினிலே நிறைந்திருப்பாய் நீயே

வாடுகின்ற உள்ளத்திற்கு நல்மருந்தாகி
வருத்தம் தனைப் போக்கி என்றும்
அருள்புரிவாய் தாயே

அன்னையே நீயே என்னை அன்புடன் காப்பாய்(இரண்டு முறை)

அன்புடனே நாளும் எம்மைப் பேணி வளர்த்தாய்
எமக்கு ஆறுதலை நல்கி இன்பம்
என்றுமே சேர்த்தாய்

எந்தன் தெய்வம் உன்னையன்றி
வேறில்லைத் தாயே
என்றும் இன்முகத்துடன் அருள்செய்ய வந்தருள்வாயே

அன்னையே நீயே என்னை அன்புடன் காப்பாய்(இரண்டு முறை)

பலகவிதைகள் பாடிஉன்னை நாளும் பூஜிப்பேன்
எழில் பைந்தமிழில் சரம் எடுத்து
பாக்கள் இசைப்பேன்

பணிவுடன் உன் பதமலரில் தூவி மகிழ்வேன்
அந்தப் பாடல் கேட்டு உள்ளம் தனில்
குளிர்ந்து அருள்வாய்

அன்னையே நீயே என்னை அன்புடன் காப்பாய்(இரண்டு முறை)
------------------------------------------
20. மணியோசைக் கேட்டு எழுந்து- மெட்டு
எந்தன் பாடல் கேட்டு எழுந்து
அன்னை நீயே தேடிவருவாய்...
உனை நாளும் பாடி மகிழ்வேன்...
மனதாற வாழித்தி துதிப்பேன்
எந்தன் அன்னையே... என்னையே....
தினம் காத்து நீயும் அருள்வாய்.....(எந்தன்)

காலம் முழுதும் உன்னைப் போற்றி
கானம் பாடி இசத்திடுவேன் நான்
கருணைமனம் கொண்டு நீயே...
காவல் செய்யம்மா.....
காலடியைப் பணிந்த எனக்கு
காலம் எல்லாம் துணை இருந்தே......
காத்தருள்வாய்....... கருணையோடு நீ......(எந்தன்)

வேணுகான ஓசைக் கேட்டு
வீணை ராக இசையும் கேட்டு
தாள லயமயப் பண்ணிலே....தாய் மகிழ்ந்திட வா...
தாமரை மலர் பாதம் தன்னில்
பூமழை தினம் பொழிந்திடுவேன்...
பாமகளே உன்...... பாதம் போற்ற்யே.....(எந்தன்)
---------------------------
21. கண்ணில் தெரியும் காட்சியிலெல்லாம்
அன்னை இருக்கின்றாள் – அவள்
கருணை நிறைந்தவள் இரக்கம் மிகுந்தவள்
மனதில் இருக்கின்றாள்.

எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்
முன்னே நிற்கின்றாள் – அவள்
எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்
எழுத்தாய் நிற்கின்றாள் (2) (கண்)

கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்
காலாய் வருகின்றாள் – அவள்
கைகளில்லாத ஊனருக்கெல்லாம்
கைகள் தருகின்றாள்....(2) (கண்)

வாழத்தெரியா மனிதருக்கெல்லாம்
வாழ்வைத் தருகின்றாள் – அவள்
வாய்பேசாத ஊமைகளுக்கெல்லாம்
வார்த்தையாய் வருகின்றாள் (2) (கண்)
---------------------

22) தாள்திறவாய் மெட்டு
(திருவருட் செல்வர் என்ற படப் பாடல் மெட்டு )
ஹம்மிங்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் யாவுமே போற்றிப் பணிவது
மாதா உந்தனின் மலரடி தனையே................

பாடல்

தாள் பணிவாய் ................மனமே..... தாள் பணிவாய்
தினம் தலை வணங்கி அன்னையின்
தாள் பணிவாய்
தாயவள் அருள்பெறவே தாள் பணிவாய்


மன இருள் நீங்கி நாமும் நலம் பெறவே......
மாசு மறுவற்ற நிலை பெறவே..............
மணம்மிகு மலரடி பணிந்து நின்றால் - பல
மகிமைகள் யாவும் கூடுமன்றோ
தாயவள் அருள் பெறவே .......( தாள்)

( மத்யம காலம் ஸ்பீடாகப் பாடவும்)

பாதம் பணிந்தே பண்ணிசைத் தினிதே
பாடல் பாடிடுவாய்..........
பாவம் போகிட பேரின்பம் துய்த்திட
மனமே விழித் திடுவாய் ......

மங்களம் பரவிட மனநிறைவெய்திட
மாண்புடன் இசைத்திடுவாய்
ஒருமுறை, இருமுறை, பலமுறை தினமும்
அன்னையின் புகழ் தன்னை ............

நினைவில் இருத்திடுவாய் ..................
நீ நிதமும் பணிந்திடுவாய்.............

மனமே...............வணங்கிடுவாய்...........
அன்னையை ......... நீ...........................
ஜய மாதா ஓம் ஜய மாதா
-------------------------
23/ ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரி – மெட்டு)
தாயவள் மலரடி... தினம் போற்றித் பணிவோம்
தன்னலக் கருதா தியாக தீபமவள்...
தருவென உலகினை நிழல் தந்து காப்பாள்
தத்துவப் பொருளான வித்தகத் தெய்வம்..

ஓம் ஸ்ரீ மாதா.... ஜெய்ஸ்ரீ மாதா
ஜெய் ஜெய் மாதா அருள்வாய்
அன்பால் எனை அரவணைதாயே
அருளின் வடிவே அம்மா.
அம்மா........ அம்மா.......
எத்தனை யுகங்கள் மாறிய போதும்
என்றென்றும் உன்னைப் பணிந்திடுவேனே..
அம்மா......... அம்மா.........
---------------------------

24. முத்தைத் திரு பத்தித் திருநகை – திருப்புகழ் மெட்டு
நித்தம் உந்தன் பதம் போற்றினேன்
சித்தம் தனில் குளிர்ந்தே அருள்
புத்தம் புதுப் பாடல் கேட்டருள்வாய்

பக்திக்கொண்டேன் உன்மேல் தினம்
முக்திப் பெற நினைத்த என்னை
சித்திப் பெற செய்தருள்வாய் என் தாயே

தஞ்சம் என வந்தேன் உனை எண்ணி
நெஞ்சம் தனில் மகிழ்வுடனே
கொஞ்சும் தமிழ்ப் பாவால் உனை பாடியே நான்

திக்குத் தசுமாரி மனம் தக்கத் தகதகவென
வெட்கித் தினம் அலைபாய்ந்தே ஓயுதம்மா

பந்தச் சுழல் தனில் தவித்து வெந்தே நிதம் நிதம்
அழிகின்ற எந்தன் மனமதை நீயே தடுத்தருள்வாய்
வெற்றிக் கனி நல்கி உன்மேல்பற்றுக் கொளச் செய்தே இப்புவி சிற்றின்ப நிலை நீக்கியே வீடருள்வய்..
--------------------------------


25) வருகவே வருகவே இறைவா.. என்ற பழைய திரைப்படப் பாடல் மெட்டில் பாடவும்)

வருகவே வருகவே அம்மா ......விரைந்தே,,,,,(வ)

கருணையின் திருமுகம் வருகவே
காவியத் தலைவி வருகவே
பெரும்புகழ் நிறை இறை வருகவே
பேரின்பம் நல்கிட வருகவே
அம்மா...... விரைந்தே.......(வ)

தாயே உன்னிரு தாள் பணிந்திட்டேன்
தன்னருள் தந்திட வருகவே
மாயை போக்கியே மகிமை கூட்டியே
மலர்விழி திறந்தருள் புரிகவே

கானம் பாடி உன் புகழைப் போற்றும் என்
கருத்தினில் நின்றருள் புரிகவே
காலம் முழுதும் உன் காவியம் தனை
கவிதை புரிய அருள் தருகவே

மகிமை மிகுந்திடும் தெய்வமே
மறவா நிலையினைத் தந்தருள்
மலர்ப்பதம் தனை நாடினேன்
மாதா நீயே தினம் காத்தருள்

அம்மா.... விரைந்தே....... வருகவே வருகவே........
-------------------------------
26. வசந்த முல்லை போலே வந்து – மெட்டு
வசந்த மண்டபம் தன்னில் உன்னை
இசந்து கொலுவேற்றினேன் நான்
வாழ்வெல்லாம் உன்னை நானே வாழ்த்திப் போற்றிப் பாடியே..(வ)
இசையினில் இன்பமுடன் இன்கவி பல இயற்றி......
ஆ……. ஆ........ (இசை)
ஈடிலா உன்புகழை இனிமை கூட்டி வாழ்த்துவேன் (வ)
சிந்தையில் நீயிருந்தே செம்மையுறச் செய்வாயே...
வந்தனை

rpe;ijapy; ePapUe;nj brk;ika[wr; bra;thna
te;jid Vw;bwd;Wk;; thH;jpLtha;

re;jjk; nghw;wp epw;Fk; ve;jidf; fhj;jUs;
te;jUd; md;id eP md;g[lnd

Ke;ij tpidj; jPh;j;nj Kd;gpUe;nj fhj;nj
K:t[[ynfw;Wk; jhna K:totr; rf;jpna(t)
=================
27) நீயின்றி யாருமில்லை
நீயின்றி யாருமில்லை வழிகாட்டு அம்மா
நெஞ்சுருக வேண்டுகிறேன் அருள் கேட்டு
நம்பிக்கை கொண்டுவந்தேன் மலர் கொண்டு
நாயகி நீயும் நல்ல வழிகாட்டு (நீ)

அருளே அருளே விரைந்தே வந்திடம்மா
தினமும் எம்மை நீயே காத்திடம்மா (நீ)

திடமுடன் உனைப் போற்றிப் பாடிடுவேன்......
தீந்தமிழ் சொல் கொண்டே போற்றிடுவேன்
கனிவுடன் நீகேட்டே அருள் செய்யம்மா என்றும்
கருத்தினில் நீ நின்றே காத்திடம்மா.........

காசிவிசாலாட்சி தாயும் நீதானம்மா.......
காஞ்சி காமாட்சி அன்னை நீதானம்மா......
அங்கையர் கண்ணி மீனாள் நீதானம்மா ......
அபிராமி அன்னையுமான தாயே அம்மா......

வருவாய்......... வருவாய்...........வருவாய்.........
முத்தமிழ் தேனால் உந்தனைப் போற்றி
நித்தமும் பாடிடுவேன்.............
தித்திக்கும் இன்னிசைக் கேட்டருள் நீயே.........
திருவருள் செய்திடம்மா.............

பக்திக் கொண்டே உன் மலர் பாதம்
பணிவுடன் போற்றிடுவேன்.......
பற்பல பனுவல் பாடியே உந்தன்
புகழினை வாழ்த்திடுவேன்........

வேண்டும் வரம் நல்கும் தாய் நீயே வருக............
வேள்விகள் உனக்கம்மா ஏற்றருள் புரிக..............
விரைவாய் மனம் கனிந்து
அருள் மழைப் பொழிவாய்
நிறைவாய் நல்லருளை நாளும் நல்குவாய்........

அம்மா சரணம்..................அருளே சரணம்......................
திருவே சரணம்.................. திருவடி சரணம் ............

=============
28 (கங்கைக் கரைத் தோட்டம் மெட்டில் பாடவும்)

பாமலர் சூட்டி பதமலர் போற்றி
அன்னை உனைப் பணிந்தேன் ஒ.. (அன்னை)

பண்புடன் போற்றி பணிவுடன் வாழ்த்தி
அன்னை உனைப் பணிந்தேன் ஒ...(என் அன்னை)

அன்பு அன்னை உன்னை நானே
அடைக்க்கலம் வேண்டி வந்தேன்

அருளைத் தந்து அன்புடனே
அனுதினமும் காத்திடுவாய்

இன்முகமாய் பூத்தே இன்னல் பல போக்கும்
எழில் மிகும் தெய்வம் நீயே ஒ.....(எழில்)

கண்கண்ட தெய்வம் உன்னை
காலமெல்லாம் போற்றிடுவேன்

காவலாய் நீயிருந்தே
காலமெல்லாம் காத்தருள்வாய்

கருணை மனம் கொண்ட
கலை எழில் தெய்வமே
கனிவுடன் காத்தருள்வாய் ஒ.....(கனி)

அன்னை உன்னைக் கண்ட கண்கள்
பிரிதொன்றைப் பார்ப்பதில்லை
அன்னை உனக்குத் தந்த உள்ளம்
என்றும் உந்தன் சொந்தமே

பொன்னடியைப் போற்றிடுவேன்
பூமலர்கள் சாற்றி
அம்மா அருள் செய்ய வா ஒ....(அம்மா)

அம்மா............. அம்மா............... அம்மா.....(பாமலர்)
=================
29 (திருப் புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் மெட்டில் பாடவும்)

உன் புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
உன் திருவடியைத் தொழுது எழ
செம்மை பிறக்கும்
அம்மா............செம்மை பிறக்கும்.(உன்)

நீக் கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது..........அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா
தலைசிறந்தது
அம்மா........... அம்மா......... ஆ...........அம்மா........(நீ)

நீசிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் என் மனது
பெருமைக் கொண்டது (உன் புகழைப்)

சந்தனத்தில் அபிஷேகம் உந்தனுக்கே......
அம்மா
சரண கமலம் போற்றி வாழ்த்து பாடியே
அம்மா.........அம்மா........... ஆ............ அம்மா.

பாலுடனே தேன் கலந்து நான் அன்னை உனக்கே
பைந் தமிழால் அபிஷேகம்
செய்து மகிழ்வேன் (உன் புகழைப்)
============
30 சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..- மெட்டு

சொல்ல சொல்ல இனிக்குதம்மா அம்மா......
உள்ளமெல்லாம் உன்புகழை...........(சொல்ல)

பிள்ளை பிராயம் முதல்
பிரியமுடன் வளர்த்தனையே
உள்ளமெல்லாம் உன்புகழை...........(சொல்ல)

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் புகழ் பாடும் .............
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் கூறும் ..........

யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்தித்தபோதும்

உன் உள்ளன்பு மட்டும் என்றும்
மாறிடாதம்மா...........
அம்மா மாறிடாதம்மா .........
அம்மா..................... (சொல்ல )
----------------------
31 அமைதியான நதியினிலே ஓடும் மெட்டு
அன்னையவள் பதமலரை நாடி என்றும்
அருளாசி பெற்றிடவே வாரீர்...............

அன்புடனே நமைக் காத்தே அரவணைத்தே
போற்றிடுவாள்..............
அனுதினமும் அருளுடனே நம்மை.................(அன்னை)

என்றுமே பற்பல நலன்களைத் தந்திட்டே..........
ஏற்றமிகு வாழ்வுதனை நம்பெறவே செய்திடுவாள்..........(இரண்டு முறை)..........(அன்னை)

பைந்தமிழ் சரமெடுத்து பாமாலை சூட்டிதினம்
பாதமலர் பணிந்திடுவோம் பற்பல நலம்பெறுவோம் .........(இரண்டு முறை)...............(அன்னை).........

சரணங்கள் பாடி என்றும்...............ஒ...................

சரணங்கள் பாடி என்றும் ...........சகல நலம் பெறுவோம் .............
சடுதியில் வந்து நம்மை சந்ததமும் காத்திடுவாள் ..............(இரண்டு முறை) (அன்னை)
---------------------------

33/ நினைத்தால் போதும் பாடுவேன் - மெட்டு
நினைத்தால் போதும் பாடுவேன்
அருளை நாளும் வேண்டுவேன்
அழகாய் உன்னைப் போற்றுவேன்
அம்மா எம்மைக் காத்தருள்
அம்மா எம்மைக் காத்தருள்

பாத கமலங்கள் நாள்தோறும் போற்றி
பண்பாய் உன்னையே துதிப்பாடி வாழ்த்தி
நாளும் அழைத்தேனே விரைந்தருள் செய்வாய்
தாயே தருணமே எனைக்காக்க இதுவே.....
வா..................................(நினைத்தைல்)


வாழ்த்தி துதிப் பாடி வந்தனை செய்வேன்
விரைந்து ஓடோடி வந்தருள் தாயே
வேண்டும் வரம் நல்கும் கண்கண்ட தெய்வம்
வேறு யாதொன்று உனையன்றி தாயே
வா.........................(நினைந்தால்)
--------------------------
34/ உள்ளத்தில் நல்ல உள்ளம் - மெட்டு
உள்ளத்தில் அன்புடனே பணிவாய் போற்றி நின்றால்
பற்பல நன்மை தரும் தாயே
பணிவுடன் போற்றிடுவேன்......


செந்தமிழ் பாவாலே உந்தனைப் போற்றிநிருக்கும்
என்தனைக் காத்தருள்வாய் ......அம்மா
என்றென்றும் அருள் புரிவாய் அம்மா
என்றென்றும் அருள் புரிவாய் (உள்ளத்தில்)

தாள்மலர் போற்றிடுவேன்....
தாமரை மலர்க் கொண்டு.....
தாயே நீ மகிழ்ந்திடுவாய்...... உன்னை........
தலைவணங்கி போற்றிடுவேன்.......என்றும்
தலைவணங்கி போற்றிடுவேன்... (உள்ளத்தில்)

மணம்மிகு மலர் தன்னால்
மகிமைகள் மிகுந்திடும் உன் .....
மாண்பினைப் போற்றிநிற்க்கும்... உந்தன்
மகள் என்னைக் காத்திடம்மா என்றும்
மகள் என்னைக் காத்திடம்மா ... (உள்ளத்தில்)
-------------------------
அமுதே பொழியும் நிலவே – மெட்டு
அழகுத் தம்ழால் உனை
அனுதினம் போற்றி மகிழ்ந்திடுவேன் –நான் (அனு).

எழிலாய் எங்கும் திகழ்ந்தருள் செய்யும்
என் அன்னை நீயிங்கு வாராய்
திருவே உருவே தினம் என்னைக் காக்க
தீமை போக்க வருவாய் தாயே..(2) (அழகு)
பலவாய் உன்புகழ் போற்றிடும் என்னை
பரிவுடன் அணைத்திட வாராய்.....
புதுமைப் பொலிவுடன் பாக்கள் இசைத்தே(2)
புகழ்ந்தே மனதி அனுதினம் துதுப்பேன்(2) (அழகு)
-----------------------

36. நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேந்= மெட்டு


தமிழ்ப் பண்ணாலே சுவயூட்டும் இசைப்பாடி உன்னை
தினம் பூமாறிப் பொழிந்தேனே மனமாற வாழ்த்தி
என் அன்பான தாயே உன் புகழ்தன்னை நானே
என்றென்றென்றும் துதிப்பாடி வந்தனை செய்வேன்

கலை நயத்தோடு கவிதைகள் பல நானே இயற்றி,
கனிமொழியே உன் காவியம் தனைப்பாடி மகிழ்வேன்
கண்கண்ட கருணாமய ஜெகஜ்ஜோதி நீயே....
கனிவோடு எனைக்காக்க கருத்தோடு வாராய்(2)
நீ -கனிவோடு எனைக்காக்க கருத்தோடு வாராய்

பொன்மயமான எழில்மேவும் திருச்செல்வி நீயே
பூமனம் கொண்டு எனைக்காத்த என் அன்புத் தாயே
பல பாமாலை உனக்கேதான் தினந்தோறும் அம்மா
பதமலரடிப் பணிவோடு போற்றும் எனைக் காப்பாய்
-------------------------------
37. அழைகாதே....... நினைக்காதே... –மெட்டு

ஆ...... ஆ..... ஆ......
மறவேனே...... உனை நானே---------
மாசில்லா மணியே... என் தாயே....
பேசும் மொழிகேட்டு அருளாயோ...(ம)

வீசும் நறுமண மலர்தன்னால் நானே....
ஆ...... ஆ..... (வீசும்)
பசுமை மிகுந்திடும் பாடல்கள் தன்னால்
பணிகின்றேன் என்னாளும் உன்னையே தாயே....

பாமாலர் சூடியே... பூமழைப் பொழிவேன்..
ஆ..... ஆ..... (பாமலர்)
ஈடில்லாக் கருணை மழைமுகில் நீயே....
ஈரைந்து திங்கள் எனை அன்போடு சுமந்தாய்(மற)

-------------------

38. கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்...
கணையிருள் அகன்றது காலையம் பொழுதாய்..
அலைகடல் ஓய்நது போன்றுளது அன்றோ...
அம்மா...... பள்ளி எழுந்தருளாயே...
------------------------
39) நான் தில்லி நகர் –மெட்டு –(தமிழ் சீரியல்)
அன்பு தெய்வம் என் அன்னை நீயே.
உன்னை நாளும் போற்றிப் பரவிடுவேன்
(என் அன்பு )

என்னைக் கண்ணெனக் காத்திட்டப் பெருந்தகையே
உன் பாதம் போற்றிடுவேன்
என் சுவாசம் யாவும் என்றும் நீயே
என் வாழ்வும் வழியும் நீயே..............

நான் ஏற்றம் பெற்றிட புகழ் சாற்றி நின்றிடப்
போற்றிப் புரந்தனையே..........
உன்னைப் பைதமிழ் சரத்தால்
போற்றி நிற்ப்பேன்.................(என் அன்பு)

பல பண்ணால் உன் புகழ் பாடி நிற்கும்
உன் சேயேனை தினம் காப்பாய்
தூய உள்ளம் கொண்டனை அன்புத் தாயே
துயர் யாவும் போக்கிடுவாய்........
தினம் செந்தமிழ்த் தேனால்
உன் பதம் போற்றிடும் எந்தனைக்காத்திடுவாய்
என் மதினில் நிறைத்திடும் இறை நீயே................
(என் அன்பு)
-------------------------
39/ தில்லை அம்பல நடராஜா மெட்டு
ஹம்மிங்

அன்பின் உருவமே ...................
அருளே தந்தெனைக் காத்தனை.....................
சரணம் பாடி உன் பாதம் போற்றினேன்.............
என் தாய் நீயே கனிவோடதை..............
ஏற்றருள் ........................................


அன்பின் உருவே என் அம்மா .......
அருளின் வடிவே என் தாயே
இன்னல் தீர்த் தருளவா............... வா வா
இதய தெய்வமே.............( இரண்டு முறை) ...(அன்பின்)

என்றும் இன்பம் விளங்கவே.................
அருள்செய்வாய் நீயே......................
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா.................(அன்பின்)

பலவித நாடும் கலையேடும்............
பணிவுடன் உனையே துதிப் பாடும்.......
கலைமனம் கொண்ட காவியத் தலைவி நீயே............
என் தாயே...................... வருவாயே...................
காத்தருளவா................... (அன்பின்)
--------------------------
40. கண்ணா கருமை நிறக் கண்ணா- மெட்டு
அம்மா...... அன்புமிகும் அம்மா.......
உன்னைப் போற்றாத நாளில்லையே.....
எந்தன் மனக்கோவிலில் உன்னை தினம் பாடியே
உந்தன் மலர்ப்பாதம் தனை போற்றினேன்....(அம்மா)

பொன்னான மனம் கொண்ட தாய் நீயன்றோ...
என்னைக் கண்ணாகக் காத்திட்ட பெருந்தகையே
அன்னை உன் புகழ் தன்னை நாளும் நானே
தமிழ்ப் பண்ணாலே போற்றினேன் கேட்டருள்வாய்(அ)


நீங்காத நாலம் நல்கும் தாயே அம்மா – என்றும்
நிறைவான பேரின்பம் தினம் நல்குவாய்
நானென்ற அகந்தை தனைப் போக்க்டுவாய் –உன்னை
நாவாறப் வாழ்த்தவே மகிழ்ந்திடுவாய்..(அம்மா)
----------------------
41. ஜெகம் புகழும் புண்யகதை – மெட்டு
ஜெகம் புகழும் புண்யகதை அன்னையின் கதையே
உங்கள் செவிக்குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே..... (ஜெகம்)

இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே...
இந்தக் கதைக்கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லா அவள் புகழ் தன்னிலே,..(ஜெ)

ஆதி முதல் இன்றுவர அவள் தன்னுள்...
அன்புடனே அவள் வயிற்றில் நமைச்சுமந்தே
காத்திட்டாள்
அருளுடனே நலம் சேர்த்தே ஆவலுடன் வளர்த்திட்டாள்
அல்லும் பகலும் அயறாது உழைத்தே.
ஆ.........


நால்வகை வேதமும் போற்றிடும் தாயவளை
நாடி நலம் பெறவே நாம் முனைவோம் நாளும்
நாவாற வாழ்த்தி பாமாலை சூட்டியே...
நாளும் அன்னையவள் பதமலர்ப் பணிவோம்...


தாரணி போற்றிடும் தனிப்பெரும் தெய்வமே...
தன்னலம் கருதாத அன்னையே நீயே..
தாமரை மலரடியில் பூமழைப் பொழிவேன்...
தாயே எம்மை நீயே என்றும் காத்தருள்


வீணையை மீட்டியே நாளும் அன்னையின்
ஈடில்லா வீர தீரச் செயலைப் போற்றுவோம்
காதலில் கசிந்துருகி காலம் முழுவதிலும்
கானங்கள் பாடி நாளும் மகிழ்வோம்..


ஆனந்தம் அடந்திடுவோம் நளும் நாமே

அடக்கலமாய் அவள் பதம் சரணடைந்தால்
அரும்புகழ் பெருமைமிகும் தாயவளால்
அளவில்லா நன்மை அடைவோம்....(ஜெகம்)

மணம்மிகு மலரடி மகிழ்வுடன் போற்றியே
மாண்புடை அன்னையை வாழ்த்திப் பாடுவோம்
மங்கா நிலவென எங்கும் பிரகாசமாய்
மதுரமாய் ஒளிவீசி சிறப்படைவோம்

கண்ணென விளங்கிடும் தாயவள் கருணையை
எண்ணியே இதயம் தன்னில் நாளும் போற்றுவோம்
காலம் முழுவதும் காலடி தொழுவோம்
கனிவுடன் காக்கும் தாயை வாழ்த்துவோம்


அங்கிங்கெனாதபடி எங்குமாய் நிறிந்திருக்கும்
ஈடு இணையில்லா அவள் கருணை ஒன்றே....
நாளும் அதனை வேண்டி நாமும் நாவாறப் போற்றி
என்றும் நலமே பெறுவோம் வாழ்வில்


கைத்தொழ அன்னையைக் கைமேல் பலன் கிட்டும்
ஐயமே இல்லாமல் உணர்ந்திடலாம்
கண்ணும் கருத்துமாய் கருதியே அன்னையின்
பதமலரப் நாளும் பற்றி நிற்போம்

ஈடில்லா அன்னையவள் என்றுமே அருளுவாள்
இங்கும் அங்குமாய் எங்கும் திகழ்ந்தே
இனிதே காத்திடுவாள் இன்முகம் பூத்திடுவாள்
துணையாய் வந்தருளி துயரம் மாய்ப்பாள்


ஆலயம் போன்றே எம்முள் திகழ்வாள்
அன்னையாம் அவளே அணைத்துக் காப்பாள்
அனுதினம் அவள்மலர் அடியினைத் தொழுதால்
அனைத்து நலம் பெற்று நாமும் நாளும் உயர்வோம்(ஜெ)


கண்கண்ட தெய்வமவள் கருணைக் கடல் அவளே
அன்பாய் அன்றும் இன்றும் என்றும் பேணுவாள்
பண்புகள் பல கொண்டே பாசமுடன் காப்பாள்
பாரினில் அன்னையன்றி யாரே உயர்ந்தவர்

இரவு பகலின்றி எதுவும் பாராமல்
ஈடுபாடு கொண்டு அன்பு பேணுவாள்
ஈடு இணையற்ற உத்தமி அவள் தன்னை
உயர்வெனக் கொண்டு வாழ்வில் பயனடைவோம்.

இன்றுபோல் என்றென்றும் செழிப்புடன் வாழ்ந்திட
சேவடி தொழுதெழுதே உயர்வடைவோம்
தஞ்சம் என நாமும் தாள்மலர் தனை எண்ணி
நெஞ்சுருக வேண்டியே பணிந்து நிற்போம் (ஜெ)



கருணையால் காத்திடவே அன்னையவள் விழைவாள்
அன்புடன் அரவணைத்தே ஆசி பல புகழ்வாள்
ஆயிரம் நன்மைகள் செய்தே அடுதினமும் நமக்காக
அல்லும் பகலும் உழைப்பாள்
ஆ.... ஆ…….. ஆ,………..

பாசம் மேவிட ஆசை பொங்கிட தாயவள் வருவாள்
வந்தே தஞ்சம் அருள்வாள் நெஞ்சம் குளிர்வாள்
நெஞ்சுருகி நாமும் கொஞ்சும் தமிழால்
விஞ்சும் அவள் புகழ் எங்கும் இசைப்போம்
அங்கும் இங்கும் எங்கும் நிறையும்
அன்னையைப் பணிந்திடுவோம்

பாதமலர் தனைப் பற்றி நின்றாலே
அகன்றிடுமே தொல்லை
பாங்காய் நாளும் காத்திடும் அன்னைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணின் மணியாம் நம்மைக் காத்த
கருணை தெய்வம் தன்னை
கானம் பாடி மகிழ்விப்போம்
காலம் காலம் யாவும்...
ஆ......ஆ.... ஆ......

(ஸ்லோகம்)

பூ உல்கினில் புனிதையால் அவதரித்த
பூமனம் கொண்ட...
பாவையவள் பதமலரினை
பாமாலை சூட்டி......
புகழாறம் பாடி நாமே....
பணிந்தே வணங்கி நின்றால்.......
நீங்கா நல்ம் பெறுவோம்.....
நிறைவாழ்வு பெற்றுயர்வோம்.
---------------------------------
42. மனமே முருகனின் மயில்வாகனம் – மெட்டு
மனமே அன்னையின் புகழ்பாடு நீ....
உன் வாழ்வினில் நீ உயர தினம் நாடியே (மன)
திருவாய் அவதரித்த உன்னை
கருவாய் தன் மடிசுமந்தே வளர்த்திட்டாள்...(மனமே)

---------------------------

43 முத்தமிழில் பாடுகின்றேன்
முத்தமிழில் பாடுகின்றேன்
முப்பொழுதும் போற்றுகின்றேன்

தித்திக்கும் உந்தன் புகழை
தேனாக இசைக்கின்றேன்

பாடல் பல புனைகின்றேன்
பண்புடனே போற்றுகின்றேன்
பைந்தமிழால் உந்தன் புகழை
பாரில் நானே இசைக்கின்றேன்

பாவம் தனைப் போக்கி
தீமைதனைத் தடுத்து
திடமுடன் காக்க வந்திடும்மா
திவ்யமயமான தீனரட்சகியே
தீங்கு நேராமல் காத்திடம்மா (முத்)

சேவடியைத் தொழுது எழ
செம்மையுறச் செய்திடுவாய்
செந்தமிழால் செண்பகமே
சிந்தையுடன் போற்றிடுவேன்

எந்தன் அன்னையே உந்தன் மலர்ப்பாதம்
இன்றும் என்றென்றும் வாழ்த்திடுவேன்
எந்த நாளுமே இனிமை நாளாக
எந்தன் அன்னையுனை வாழ்த்திடுவேன் (மு)
--------------------

44. குளிர்காற்று வீசுமோ – மெட்டு
ஆ....... ஆ...... ஆ..........

என் அருமைத் தாய் நீயே உனை எண்ணிப் போற்றுவேன்...
கவிதைகள் பாடிப் பாடி நாள்தோறும் வாழ்த்துவேன் (2)
ஆ..... ஆ...... ஆ.....
பூமாலைச் சூடியே.... பாமாலைப் பாடியே
பங்கொடி உனை நானே நாள்தோறும் போற்றுவேன்
தங்க மலர்ப்பதமும், சிங்கார ரூபமும்
எண்ணியே நானுள்ளில் பேரின்பம் எய்துவேன்
ஆ...... ஆ...... ஆ.......

சங்கீத இசைமழை எங்கெங்கும் ஒலித்திட..
பொங்கியே பேரின்பம் பெருக்கெடுத்து ஓடுமே....
ஒய்யாரமாகவே..... ஓங்காரம் பாடியே...
ஒவ்வொரு நாளுமே உன்னையே போற்றுமே
ஆ...... ஆ........ ஆ.......
-------------------

46. தங்கப் பதுமை ஒன்று சதிராடுது –மெட்டு

எங்கும் நிறைந்திருக்கும் என்தாய் நீயே.. உன்னை
இன்னிசை ஸ்வரம் தனிலே பாட வந்தேன்(எங்)

மனதில் நிறைந்திருக்கும் தாய் நீயன்றோ-உன்னை
மகிழ வைக்கும் உந்தன் சேய் நானன்றோ....
மகிமை பலபுரிவாய் நீயேயன்றோ... நாளும்
மலரால் தொழுவேன் என்றும் நானேயன்றோ...(எங்கும்)

கருணைவடிவான எழில்ரூபமே..... நீ...
கருதும் அன்பர் மனக் கனிரசமே....
பணிவாய் உனைப் போற்றும் புவியாவுமே... பலப்
புகழை நாளும் நல்கும் பேரின்பமே....(எங்)


முத்தமிழ்ப் பாவால் நித்தமும் போற்றிடும்
பக்தையைக் காத்திடவா.....
தித்திக்கும் தேனே எத்திக்கும் நானே
உன் புகழ் போற்றிடுவேன்...
தத்தை மொழியென மெத்தவே உன்னையே
கத்திடும் மொழி கேட்டே...
காலம் யாவிலும் காத்து போற்றிடு
கருணையுடன் நீயே
தை... தத்தை.... என ஆடியே உன்பதம் நாடிடுவேன் நானே....
தத்தை... என எனைக் கண் பாராய்.....
கொஞ்சும் தமிழ்ப் பாவால் உனைப் போற்றியே...
கெஞ்சும் எனைக் காவாய் ... அன்னையே (எங்கும்)
காலம் முழுவதும் எனைக் காத்திடம்மா...நீ...
கனிவாய் என்னுடனே வாழ்ந்திடம்மா....
சீலம் நிறையும் உந்தன் புகழ்பாடுவேன்.... –இந்த
ஞாலம் தனக்கு நீயே... அருள்செய்யம்மா...(எங்கும்)


47. இசைத்தமிழ் நீ செய்த அருள் சாதனை – உன்
இணையடி போற்றிடும் என் உயர் சாதனை அம்மா(இசை)

வளம் மிகும் பூஞ்சோசல் மர்க் கொண்டு.....
அம்மா.... ஆ...... ஆ,,,(2)
எழில் பாமாலை சூட்டி உனைப் போற்றிடுவேன்...
கனிவுடன் ஏற்றென்னைக் காத்தருள்வாய்
அம்மா...... வந்தருள்வாய்
அருள் தந்தருள்வாய்... (இசை)


சிந்தைத் தனில் நானே உந்தனையே –நாளும்
சிறப்புடன் போற்றிடுவேன் உன் சீர்தனையே
செங்கனி வாய்மலர்ந்தே ஜெயம் நல்கும்
சீர்மிகும் என் தாயே காத்திடம்மா(இசை)

தாய் உந்தன் சேய் நானே வந்திட்டேன் உந்தன்
தயை தனை நானே நாடி நின்றேன்
பார்ப்புகழ் தெய்வம் உனைப் பணிந்திடுவேன் – உன்
பதமலர் தனை நாளும் போற்றிடுவேன் (இசை)
------------------------------------
48. வனக்கம் பலமுறை சொன்னேன்
அன்னையே உன்முன் அனுதினம் நானே.....
பல பண்ணால் உன் புகழ்தன்னைப் பாடி....
எந்தன் நெஞ்சாறா மகிழ்வேனே நானே....(வ)


தூய மனதாலே உந்தனைத் தொழுதே... என்
துயர் யாவும் ஒழிப்பேனே வாழ்வில்
பிறவிக் கடல் கடக்க......
உதவும் கரை நீயே
பேரின்பம் நல்கிடும் தாயே....(வ)

தஞ்சம் உனைநாடி நாள்தோறும் கெஞ்சும்
நெஞ்சில் நிறைகின்ற என் அம்மா
கொஞ்சும் தமிழ்ப்பாவால் செஞ்சொல் மொழியெடுத்து
கெஞ்சும் எனைப்பாரம்மா......(வண)

---------------------------------
49. ஆயிரம் நிலவே வா- மெட்டு
ஆயிரம் பாட்டிசைத்து – ஓராயிரம் பாட்டிசைத்து
எழில்மேவும் இசைதன்னில்
அருள்மேவும் உன் புகழிசைப்பேன் (ஆயிரம்)
அன்பு அன்னை உன்புகழை அகமகிழ்ந்துப் போற்றிடுவேன்
ஆனந்தம் கொண்டிடுவேன் அன்னை உந்தன் பாடலிலே..
இன்பத் தமிழால் இசையினில்
ஈன்ற உந்தன் புகழிசைப்பேன்
எந்தன் மனதில் என்றும் நிறையும்
என் அன்னைக் கேட்டருள்வாய்..(ஆயிரம்)

நல்லாளே நின்புகழை நாள்தோறும் பாட்டிசைப்பேன்
நாளெல்லாம் போற்றிநிற்கும் மகளென்னைக் கண்பாராய்
இன்னமுதம் நீ... இணையில்லா...
என் அன்னை நீயன்றோ.....
இன்றும் என்றுமே அன்பு கொண்டென்னை
அருளோடு காத்திடுவாய்..(ஆயிரம்)
50 மன்னவன் வந்தானடி - மெட்டு

ஹம்மிங்
கலைஎழில் அழகோடு புவிதனில் மேவிடும்
அன்னையே வாழ்க வாழ்க


நினைவினில் நீங்காமல் நாளுமே போற்றுவேன்
நின் நாமம் வாழ்க வாழ்க

பாமாலை சூட்டியே பதமலர் போற்றுவேன்
பாவையே வாழ்க வாழ்க

சீர் புகழ் மேவிடும் உந்தனின் பெருமையை
போற்றுவேன் வாழ்க வாழ்க

வாழ்வாங்கு வாழ்ந்திடும் வடிவழகு தெய்வமே
வந்தித்தேன் வாழ்க வாழ்க

தினம் நால்வகை வேதமும் நாள்தோறும் பணிந்திடும்
அன்னையே வாழ்க வாழ்க............

பாடல்

அன்னையே வருவாயம்மா........என்றும்
அடிமலர் போற்றிடும்....எங்களைக் காத்திடவே....
(அன்னையே.....)

தூயவளே....நாயகியே.....
நான் பணிவேன்.....நாள்முழுதும்....(அன்னையே....)

செந்தமிழ் சொல் எடுத்து இசைத் தொடுத்தே வண்ண
சந்தங்கள் பல கொண்ட கவி இசைப்பேன்....
மூன்று தமிழ்ப்பாவால் போற்றிடுவேன்....
இனி முப்பொழுதும் தப்பாமல் பொர்ப்பதமே நாடிடுவேன்....(அன்னையே,,,)

தூயவள் உந்தனின் தாள்மலர் பணிந்திட்டேன்
தாயேன்னைக் காத்திட வந்தருள் செய்திடம்மா...
(அன்னையே......)

பாமலர் கேட்டிட பாவையே வந்தருள்
பதமலர் போற்றினேன் ஏற்றருள் புரிந்திடவே....
(அன்னையே....)

தித்திக்கும் இன்னிசை நித்தமும் சூட்டுவேன்...
மெத்தவே உந்தனை..போற்றியே...பாடுவேன்...
பக்திப் பரவசம் கொண்டே நாளுமே...
எத்திக்கும் உன் புகழ் இசைத்தே...மகிழ்ந்திடுவேன்...
(அன்னையே....)

ஸா...ரீ..கா...மா...பா...தா,,,நீ...
சரிகமபதனி .....ஸ்வரமோடு,,,ஜதியோடு....
பாவ...ராக...தாள....லயமிசைப்பேன்....
(அன்னையே....)

காதற் பெருகிட....கனிமொழி..உன்மேல்....
மாதவம் செய்தேன்....மாண்புடன் போற்றிட..நான்...
(அன்னையே...)

விரைவினில் நீ....நீ.....நீ.......
திருவருள் தா......தா......தா.....
செந்தமிழ்ப் பா.... பா......பா....
தாயம்மா.... மா....மா...மா...
வந்தமைக் கா....கா...கா....

நீ..தா....பா.....மா.....கா.....
நீதாபாமாகா ......

ஸா.. ஸ்ருதிலய ஸ்வரம் நீயே....
ரீ..... ரிதமுடன் போற்றிடுவேன்....
கா..... கானங்கள் இசைத்திடுவேன்....
மா... மகிமைகள் பெற்றவளே...
பா... பாமலர் சூட்டிடுவேன்....
தா... தாயே...ஏற்றருள்வாய்....
நீ.. நீங்காமல் நிறைத்திடுவாய்.

நாளும் தமிழ்ப் பாவால்...புகழ் மேவும்....இசத்தொடுத்தே....
வாழ்த்தி....உனைப் போற்றி......
அனுதினம் உன் அடிமலர் பணிந்திடுவேன்....

(அன்னையே....வருவாய் அம்மா.....)
------------------------------

52. திருத்தணி முருகா தென்னவர் தலைவா –மெட்டு
தாம் தி தாம் ... தை. த்ததை... (5 முறை)
ஆ...........ஆ........ ஆ...........
சரணடைந்தேனே.... உன் மலர்ப் பாதம்....
தாயே.... நீயே..... காத்தருளம்மா..... (சர)

தஞ்சம் எனவே நெஞ்சுருகியே நான்
தாயே உன்னையே அனுதினம் நாடினேன்....
வருவாய் நீயே...... எந்தன் அம்மா.....
ஆ......... ஆ......... ஆ...........
அன்பு உருவே அருள்மழைப் பொழிவாய்(2) (ச)

எந்த நேரம் உந்தன் எண்ணம் கொண்டவள் நானே....
வந்த இந்த பிறவியைப் போக்கி அருள்வாய் நீயே.....
சொந்த பந்தம் யாவும் எனக்கு நீயே
சிந்தை மேவும் அன்புத் தாய்நீ என்னைக் காப்பாய்
மலையும் நீயே.... வானும் நீயே.....
நிலனும் நீயே..... கடலும் நீயே.....
பஞ்ச பூதம் ஒன்றுகூடும் உன்னில்
வந்த பேர்க்கு வாழ்வு நல்குக் தாயே
சந்தன குங்குமம் செந்தூர நெற்றியில்
ஓமென்று உன்னையே அனுதினம் போற்றுவோம்

ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
விளங்கிடும் தாய் நீயே......
வினைகள் தீர்த்திடம்மா.....
வருவாய்......வந்தருள்வாய்......
வந்திடம்மா..... என் அன்பு தெய்வம்........
ஆ........... ஆ........ ஆ.........
-----------------------------


53. பூமாலையில் ஓர் மல்லிகை மெட்டு

ஹம்மிங்.
ஆ.........................ஆ...................ஆ......................
பூமாலையை தினம் சாற்றியே......... உன்
புகழ்மொழி போற்றியே.....பாடினேன்.............

எந்தன் அன்னை உன்னை........வாழ்த்தியே.......
எழில் பாவினால் போற்றினேன்........(பூ)

செந்தமிழ்ப் பாவினில் உந்தனைப் பாடி................
ஆ.................ஆ.................ஆ...................
செந்தேன் மலரால் உந்தனைப் போற்றி............

மகிழ்ந்தேன்................நானே......................
மனத்தால் ....................தினமும்...................
மாதா உந்தன் புகழைப் போற்றி..............(பூ)


பரிமள எழிலே...............பவவினை தவிர்ப்பாய்..........

ஆ................. ஆ.........................ஆ......................

பாமலர் இசைத்தேன்...............பூவை நீ மகிழ்வாய்....................

பலநாள் உனையே..............பலவாய் .................பணிவேன்............
பாசம் கொண்ட என் தாய்................... உன்னை......(பூ)
------------------

54. நாளை இந்த வேளை காண ஓடிவா நிலா மெட்டு

ஹம்மிங்

பாமாலையால் ....... நாள்தோறுமே......
நான்போற்றினேன்....நீ ...ஏற்றருள்.....


பாடல்

தாயே உந்தன் பாதம் போற்றி நாளும் பாடுவேன்
அன்பு அன்னை உந்தன் புகழ்
போற்றி பாடுவேன்....
எங்களை தினம் காத்தருள் எந்தன் அன்னையே...
நீ எங்களை தினம் காத்தருள் எந்தன் அன்னையே...(தாயே..)

முல்லை மலர்போல்... முத்தமிழ்...
செந்தேனில்...உந்தனின்....
செம்மை ..மேவும்...திருப்புகள்...
தன்னைப் ..போற்றுவேன்....
கண்ணில் நிறையும் தாயம்மா....
என் கருத்தில் நீயம்மா...
அங்கும்..இங்கும்..எங்குமாய்....
நிறைவாய் ..நீயம்மா.....(இரண்டு முறை) (தாயே)

வண்ண மலரால் அன்பு அன்னை....
உந்தன்.. பாதமே....
என்றும் ...துதிக்கும் உன் மகள்....
என்னைக்...கண்பாராய்....
வந்தருள்...இங்கு நீ...எந்தன்..தெய்வமே.....
சிந்தையில்....நீயம்மா....இன்றும்...என்றுமே...
(தாயே...)
-------------------
55. அமுதும் தேனும் எதற்கு – மெட்டு

சரணம் பாடி மகிழ்வேன் .... –உன்
தாமரை மலர்ப்பாதம் நாளும் போற்றியே – நான் (ச)

வருவாய் வந்தருள் செய்திடவா- தினம்
காப்பாய் எமை நீ கனிவுடனே (சரணம்)
கார்மேக மழைமுகிலாய்த் திகழ்வாய் நீ – என்றும்
பூமாறிப் பொழிந்தருள் செய்வாய் நீயே....-தமிழ்ப்
பாமாலை இசைத்தேன் நான் உனைப் போற்றியே....
அம்மா... மகிழ்வாய் வந்தருள்வாய்... (சரணம்)
-------------------------
56. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- மெட்டு

பாமாலையால் உந்தன் புகழ்பாடுவேன்
பாவை உன் பதமலர் தினம் போற்றியே – நான்
பற்பல பண்ணிசைத்து தினம் போற்றவே- நான்
நான் பணிவோடு வந்தேனே உனைப்பாடவே
என் நாவினில் நீங்காமல் நலம் செய்யம்மா......(பா)

அழகான கவிதன்னில் எழில்மேவிடும்
அன்பான தாயே உன் புகழ் போற்றுவேன்....
அரணாக எனைக்காக்கும் தெய்வம் நீயே
அருளே வடிவான என் தாய் நீயே..
என் வாழ்வும் வழியாவும் நீயேயன்றோ(பாமா)

சரணங்கள் தினம் போற்றும் எம்மைக் காப்பாய்
சஞ்சலம் போக்கியே அருள் செய்யம்மா...
சகல நலம் நல்கும் தெய்வம் நீயே...
சார்ந்தே உனை நாடி வந்தேனம்மா...
சௌபாக்யம் அனைவர்க்கும் தருவாயம்மா..(பாமா)
-------------------------
57. திருப்பதி மலைவாழும் வெங்கடேசா- மெட்டு
திருமலர் அடி போற்றி வேண்டிவந்தேன்
சிறப்புடன் உன் புகழை பாடி நிதம் (திரு)

நினைத்ததை நடத்தி வைக்கும் தாயம்மா..
நான்மறை போற்றிடும் தெய்வம் அம்மா...
உலகினில் மெய்யான தெய்வம் நீயே.. (மூவுலகினில்)
உன்னை உணர்ந்தவர் எய்திடுவார் பேரின்பமே


அன்பென்னும் அகல்விளக்கை ஏற்றிடுவேன் – அதில்
ஆசை என்னும் நெய்யை ஊற்றிடுவேன்..
என்மனம் உருகிடவே பாடிடுவேன்..... எந்தன்
இதய மலர்தனிலே பூஜிப்பேன்...(திரு)...
-------------------------
58. மார்கழித் திங்கள் அல்லவா மெட்டு

ஹம்மிங்

காலைப் பொழுதில்...........
கவிமலர்த் தூவி..........
கருத்தாய்ப் பணிந்தே.....
கானம் இசைத்திடுவேன்.....................

சீர்மேவும் உன் புகழ் ......................
போற்றிப் பரவிடுவேன்..................
சிந்தை தனிலே.................
சிறப்பாய் மகிழ்ந்திடுவேன்.......................

சரணம் பாடி..................................
சந்ததம் தொழுவேன்................

பாடல்

தாயே நீ வந்தருள்வாய்.... உன்...
தயையே நீ தந்தருள்வாய்.................உன்னைத்
தஞ்சமென சரணடைந்தேன்...............(2)

ஒருமுறை உன்திரு கடைக்கண் மலர்ந்தே...
காத்தருள் புரிந்திடம்மா.....

அம்மா...........வருவாய்..........................
அருளே...................தந்தருள்வாய்....(தாயே..)

இதயம் உருகிடப் பாடி நின்றேன்...
இமையாய் என்தனைக் காத்த உன்னை....

இன்றும் என்றும் இசைப் பாடிடவே....
எந்தன் உள்ளம் தன்னில் போற்றிடுவேன்....

கவினுறு எழிலே காத்திடம்மா...
கவிமழைக் கேட்டே... குளிர்ந்திடம்மா..

கலைஎழில் அழகே... கனிவுடன் காத்திட....
வருவாய்.... தாயே........
விரைவாய் வந்திடம்மா....(தாயே....)

59. (ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்ற மெட்டில் பாடவும்)

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில்
தெரிகிறது
என் அன்னை என்னை நாளும் நாளும்
காத்தருள் புரிவதாலே (ஒளிமயமான)

குக்குமச் செல்வி மங்கள மகளே
குலமகள் என் தாயே

உன்னைப் போற்றிப் பாடும் எங்களைக் காத்தே
நாளுமே அருள்புரிவாய்
பாமலர் சூடி பூமலர் தூவி
பதமலர் போற்றிடுவேன்

வாழ்க மகள் என் தினம் தினம் நீ என்னை
வாழ்த்தி அருள்புரிவாய் (ஒளிமயமான)

சரணங்கள் பாடி சரணடைந்திடுவேன்
உன் மலர் பதங்களையே
என்றும் சாந்த தயாபரி சகல நலம் தரும்
சௌந்தர்ய ரூபிணியே

சகலமும் நீயே சஞ்சலம் போக்கி
சங்கடம் தவிர்த்திடுவாய்

சர்வ மங்களமும் நாளுமே நல்கி
சந்ததம் காத்தருள்வாய் (ஒளிமயமான)

60 (மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன- என்ற மெட்டில் பாடவும்)

கலைகளில் வீற்றிருக்கும் கவின் எழிலே - உன்னை கனிவுடன் போற்றிடவே நான் முயன்றேன்-ஆயக் (கலைகளில்)

மலர்விழியும் ...................
இருக்கண் ...........மலர்விழியும் ..............
பூமுகம் தனில் உள்ள மலர்விழியும் -எழில்
புன்னகைத் தவழும் கனி வாய்ப்பவளமும்
கொண்டே......(கலை)

எங்கெங்கும் நிறைந்திருக்கும் என் அன்னையே.....
-உன்னை
எண்ணிடவே உள்ளம் மகிழ்கின்றதே
மாமுகில் மேகமும் மழைப் பொழிந்தே.......(2 )
-உன்
மலரடி தனை வருடிப் பாய்கின்றதே

அன்னையே.....................உன்னையே.............
எண்ணிடும் , என்னைக்காக்க (கலை)

ஈரேழு லோகமும் பண்போடு உன்னைப்போற்றி.....
பூமாரிப் பொழிந்தே வாழ்த்தும் .....
நால்வேதம் நாள்தோறும் நயந்தே உந்தன்
நளின மலர் பதமே நாடும்

ஸ்ருதியோடு லயபாவம் தனைக்கொண்ட இன்னிசையும்.....
ஸ்வரமாக உன்னை வாழ்த்தும் ...........

தென்றலாய் ...........தேன்மதுரமாய்.................
மீட்டிடும் பண்ணதைக் கேட்டருள் ....( ஆயக் கலைகளில் வீற்றிருக்கும் கவின் எழிலே..........)
------------------------------------------------------------
தொடரும்.......


(குறிப்பு)

பாரில் உள்ளோர் அனைவரும் அவரவர்
அன்னையை பணிந்து அத் தாயின்
அருமை பெருமையை உணர்ந்து
பல நன்மைகளைப் பெற்றுய்ய வேண்டும் என்பதே என் பணிவான ஆசை.

அன்னையர்க்கு இது சிறிதளவேனும்
மகிழ்வைத் தருமேயாயின் நான் பிறவிப் பயனை
நிச்சயம் எய்துவேன் என்பதில் எள்ளளவும்
ஐயம் இல்லை.

அன்புடன்
ஸ்ரீ விஜயலட்சுமி
கோயம்புத்துர் -22

எழுதியவர் : ஸ்ரீ விஜயலட்சுமி (23-Feb-19, 11:19 am)
பார்வை : 499

மேலே