புலவாமாக் கொடூரக்கொலை

புலவாமாக் கொடூரக்கொலை



பாகிஸ்தானின் மனிதாபிமானம்

மறித்துவிட்டதா ? - அல்லா

இசுலாமியராய்ப் பிறந்தும் அவர்கள்

இருதய ஈரம் வறண்டுவிட்டதா ? - அல்லா

எம்மதமும் சம்மதமென

எதையும் ஏற்றுக்கொள்ளும்

எங்கள் இதயத்தையே

செங்கண்ணீர் வடிக்கச் செய்தனரே - அல்லா

வன்முறையில் வெடித்துச் சிதறியது

வீரர்களின் உடல்களாய் இருக்கலாம்

வீரம் கொண்ட எங்கள் ஆன்மாவை

வீழ்த்த முடியுமா உங்களால் ?

வெறியாட்டமா நடத்துகிறீர்கள் பாகிஸ்தானியரே !

வீறு கொண்டு எழுந்து

வந்த மறத்தமிழரை மறந்தீர்களா ?



பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 3:59 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
பார்வை : 26

மேலே