கடவுளர்கள்

Shiva Shanthi
26 February 2017 at 20:05 ·

#கடவுளர்கள்..!

சிவபெருமான், கண்ணன், அம்மன்
இப்படியான வரிசைகளில்
இன்னும் நிறைய கடவுளர்கள்
என் இல்லத்தில்
மின்சாரத்தில் இயங்கி கொண்டும்
பெட்ரோலில் இயங்கி கொண்டும்...!

நினைத்த இடத்திற்கு சொகுசாய்
அழைத்துச் செல்லும் கடவுளாய்
இரு சக்கர வாகனம்
நான் தொட்டு
கும்பிட்டுக்கொண்டதுண்டு..!

மிக்சியும் வாஷிங் மிஷினும்
தினமுமான ஒத்தாசைகளில்
நான் ஆசையாய் கொஞ்சியதுண்டு
செல்லம், பட்டு என்றெல்லாம்
இந்த கடவுளர்களை..!

வாஷிங் மிஷின் கடவுள்
எப்போதாகிலும் அதிகமாய்
அருள் பாலிப்பார்..
கை செலவிற்கு
இருபதோ அல்லது ஐம்பதோ..!

அதிக பட்சமாய்
ஓர் நாள் முன்னூறு
கடவுளுக்கு நன்றி கூறி
கண்களில் ஒற்றிக் கொண்டேன்..!

உங்கள் இல்லத்திலும்
இப்படியான கடவுளர்கள் இருப்பார்கள்
கும்பிட்டுக்கொள்ளுங்கள்..!

-சொ.சாந்தி-

எழுதியவர் : சொ.சாந்தி (26-Feb-19, 12:24 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 669

மேலே