அட என்னாச்சு, உலகம் மாறியாச்சு
மனிதன் படைச்சு வச்ச காசு,
அதை சம்பாதிக்க மனிதன் ஆயிடுறான் தூசு.
அட டேய்! அங்க ஓசியில கொடுக்குறாங்க சூசு.
சுய மரியாதை மானமெல்லாம் விட்டுப்புட்டு ஓடியாச்சு.
அட என்னாச்சு!
மனிதனின் பேராசை முத்திப் போச்சு!
அட என்னாச்சு!
நீதியை விலை பேசியாச்சு!
அட என்னாச்சு!
அணு ஆயுதங்களால் மமதை ஏறிப்போச்சு!
அட என்னாச்சு!
மனிதர்கள் சாயம் வெளுத்தாச்சு!
உலக வெப்பமயமாதல் குறித்து உலகமெல்லாம் ஒரே பேச்சு.
குழந்தைகள் பெறுவதில்லை என்று ஆங்காங்கே கூட்டம் போட்டாச்சு.
காமத்தின் மிகுதியில் உலகம் முழுவதும் அனல்காற்று வீசலாச்சு.
மாநகர பயணமென்றால் நின்று போச்சு என் மூச்சு.
அட என்னாச்சு!
உலகம் கெட்டாச்சு!
அட என்னாச்சு!
கடவுள் நரகம் போயாச்சு!
அட என்னாச்சு!
ஏழைகளின் ஆசை மண்ணோட மன்ணாச்சு!
அட என்னாச்சு?
என் நெஞ்சம் புண்ணாச்சு!
எழைகளின் ஆடைகளெல்லாம் ஒரே கிழிசலாச்சு!
அந்த கிழிசல்களே பணக்கார வீட்டு ஆண், பெண்களின் பகுதி நேர ஆடையாச்சு!
ஒழுக்க நெறியெல்லாம் கெட்டு போயாச்சு!
அடுத்தவர் காலை வாரிவிடுவதே வாழ்க்கை அரசியலாச்சு!
அட என்னாச்சு?
எல்லாம் வீணாச்சு!
அட என்னாச்சு?
உலகம் என்ற குடும்பம் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு!
அட என்னாச்சு?
நான் கிளம்பியாச்சு.