கண் கெட்ட பின்னே

கண் கெட்ட பின்னே..✒

அவன் நன்றி மறந்தவன் தானே
படித்த பள்ளி கூடம் மறந்தான்
அந்த காரர் பேர்வழி கனக்கு வாத்தியை மறந்தான்
அருமை தமிழ் ஆசானை மறந்தான்
கூடி விளையாடிய சினேகிதனை மறந்தான்
வானுயர்ந்த அந்த மரத்தை மறந்தான்
பாடம் படித்த அந்த பள்ளிக்கூட அறையை மறந்தான் .

வாழ்க்கையில் முன்னேற
ஏணியாய் இருந்தவரை என்னி பார்க்க நேரமில்லை
கரம் கொடுத்து தூக்கி விட்டவரை
சென்று காண மனமில்லை.

உண்மையில் மறந்தானா
உண்மையில் நேரமில்லையா.

மனதை
ஆசை ஆட்டி படைத்தது
பேராசை வழி நடத்தியது
பகட்டு வாழ்க்கை அழைத்ததால்
வந்த வழி மறந்தான்
மாயையில் மிதந்தான்.

பணம் வந்தது
புகழ் வந்தது
நோய் வந்தது
பயம் வந்தது
பக்தியும் வந்தது.

என்ன இருந்து என்ன பயன்
பணகார வியாதி
வந்ததால்
வாய்க்கு ருசியாய்
உணவு இல்லை
மனம் இருந்தும் ஊர் சுற்ற முடியவில்லை
பணம் இருந்தும் பயன் இல்லை.

அடுக்கு மாடி
மருத்துவமனை
குளிர்சாதன சொகுசு அறை
எல்.ஈ.டி தொலைக்காட்சி
மட்டும் துனை
சம்பரதாயத்துக்கு சொந்தம், பந்தம்
இல்லாத நட்பை எங்கே தேடுவான்
தனிமை வாட்டியது
தவறை உணர்ந்தான்
கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (26-Feb-19, 11:02 am)
சேர்த்தது : balu
பார்வை : 80

மேலே