ஆளுநரின் ஒரு கையெழுத்தில் நிற்கிறது அவர்கள் தலையெழுத்து

அரசனைக் கொன்றவர் யாரோ! சிறைக்குச் சென்றவர் யாரோ!

அரசனைக் கொன்றவர்கள் அன்றே தீக்கு இரையாக, தனியே நின்று குடும்பம் காவலர்களுக்கு இரையானது.

ஏன்? எதற்கு? எனக் காரணம் தெரியும் முன்னே மனைவி ஒரு புறமும் கணவன் ஒரு புறமும் சிறையில் அடைக்க, வெளியே அவன் தாய் மட்டும் கதறுகிறாள் அவர்கள் நிரபராதிகள் என்று.

சிறையினுள் கருவில் இருக்கும் சிசுவைக் காக்கத் துடிக்கும் அவள், கருவுற்ற மனைவியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் அவன் எனக் குடும்பம் சிதைந்து போனது.

நரகம் எனும் சிறையில் இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் நடுவே பெற்றெடுத்தால் தேவதையை! அந்த வீரமங்கை.

பிறந்த குழந்தையின் முகம் பாராமல்! பிள்ளையைப் பெற்றெடுத்த மனைவியின் நலம் அறியாமல் தவிக்கிறது தந்தையின் மனம்.

சிறையில் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூட அவளுக்குத் தடை விதித்தனர்! தந்தையின் உண்ணாவிரதத்திற்கு பிறகே குழந்தைக்குப் பசியை போக்கினாள்.

வெளி உலகம் காணாத இரண்டு வயதுக் குழந்தையின் எதிர்காலத்திற்காகப் பல போராட்டங்களுக்குப் பிறகுத் தன் நண்பனின் தாயிடம் ஒப்படைத்தார்கள்.

நாட்கள் ஓடினாளும், போராட்டங்கள் பல நடத்தினாலும், விடுதலைக்கு வழி இல்லை.

ஆட்சிகள் மாறின! கட்சிகள் தோன்றின! இருந்தும் விடியலைக் காண முடியவில்லை.

நிரபராதிகள் என்று நிரூபித்தும்
28 ஆண்டுகள் போராடியும், ஆளுநரின் ஒரு கையெழுத்தில் நிற்கிறது அவர்கள் தலையெழுத்து.

இம்முறை அவர்கள் போராட்டத்தில் நாமும்.

#we need governor sign.
# நளினி# முருகன் # சாந்தன் # பேரறிவாளன் # ரவிச்சந்திரன் # ஜெயகுமார்.

எழுதியவர் : Kandhaknight (26-Feb-19, 2:59 pm)
சேர்த்தது : kandhaknight
பார்வை : 180

மேலே