கண்ணா என்னை உன் யசோதையாய் ஆக்கிவிடுவாயா

நீலவண்ணனே கண்ணா
நீ சிறு குழந்தையாய்த்
தத்தி தத்தி நடந்து வந்து
என் மடியில் அமர்ந்திட
வேண்டுமடா பின்னே
மெல்ல எழுந்து எந்தன்
தோள்களில் சாய்ந்து
முத்து முத்தாய் முத்து
மாறி பொழிந்திடவேண்டும்
என் கன்னங்கள் இரண்டையும்
உன் எச்சில் துளியால்
நனைத்திட வேண்டும்
உன்னை நான் அப்படியே
கட்டியணைத்து உச்சி முகர்ந்து
முத்துக்கள் தந்திட வேண்டும்
கண்ணா தேனினும் இனிய பிரானே
இந்த ஒரு போது இப்படி எனக்காக
குழந்தையாய் மாறிட மாட்டாயா
என்னை உந்தன் தாயாய்
ஆயர்பாடி யசோதையாய்
மாற்றி , மூவுலகிலும் மாமாயனுக்கு
அல்லவோ தாய் நான் இப்போது
என்ற அந்த மகிழ்ச்சி ஒன்று
தருவாயா , ஈசனே உன்னை நான்
யுகமாய் யுகமாய் இந்த ஒரே ஒரு
வரத்திற்காக நீ எனக்கு ஜனனம்
தந்தாலும் மிக்க மகிழ்ந்திடுவேனே
வேறொன்றும் வேண்டேனே நான்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (26-Feb-19, 2:29 pm)
பார்வை : 63

மேலே