காதல்

அப்பப்பா என்னென்பேன் உன் அழகை ,
எந்தன் பேசும் பொற்சிலையே ,
கூடுவிட்டு கூடு பாயல் ஓர் யோகக்
கலை என்பார், உன்னழகில் மயங்கிய நான்,
உன்னில் புகுந்து நீயாய் என்னைப்பார்க்க ஆசை
கூடு விட்டு கூடு பாய்ந்து, நீ மட்டும் அவ்வேளை
என்னில் புகுந்து உன் உயிரை என்னுடலில்
காத்து நின்று நான் மீண்டும் நானாய் என்னுடலில்
உன்னைவிட்டு வந்து புகுந்திடும் வரையில்
அப்பப்பா , என்னென்பேனடி, என் அழகு பெட்டகமே
உந்தன் பேரழகை …….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Feb-19, 1:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 172

மேலே