உயிரில் உறைந்திடும் நிலவே

குளிராக நுழைந்து /
குருதியுடன் கலந்து/
இறுதி சுவாசம் வரை இணைந்து /
இதயறைதனிலே அமர்ந்து/

பனிப் போல் உருக்கி/
கனியைப் போல் உரித்து/
நினைவலையை விரித்து/
நிழலோடு நிழலை இணைத்து/

நெஞ்சத்திலே மஞ்சம் விரித்து/
நித்தம் இதழ் முத்தம் பதித்து/
நெருங்கியே மூச்சால் எரித்து /
நித்திரையைக் களைத்து/

உடலெங்கும் உணர்ச்சித் தீ மூட்டி/
உள்ளூணர்வைத் தாக்கி/
மோக முத்தெடுத்து/
காமத் தட்டினிலே வைத்து/

ஆசைப் பூ(ப்) பறித்து/
நேச மணி அடித்து /
அழகு சிலையாக வந்து /
காதல் பூசை செய்து/

கனவுக்குள் காட்சி கொடுத்து/
கண்ணுக்குள் கலையாய் நின்று /
உள்ளத்தில் உதயமாகிய நீயே தான்/
என் உயிரில் உறைந்திடும் நிலவடி பெண்ணே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (27-Feb-19, 1:37 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 75

மேலே