அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்

கொஞ்சுவதிலும் குழைவதிலும்
குழந்தையை மிஞ்சிடும்
குமரியவள்

நனைந்த பஞ்சையும்
பார்வையாலே பற்றவைப்பவள்

புதுக்கவிதைகளுக்கெல்லாம்
ஒய்யார நடை கொடுப்பவள்

உதிரத்தில் ஒன்றாக
கலந்தாலும் வெள்ளை
அணுக்களாகவே இருப்பேன்
என அடம் பிடிப்பவள்

வார்த்தைகளுக்கு
இடைவெளி விடாது
குளிர் முத்தங்களை
தென்றலாய் வீசுபவள்

அமைதியான நதியில்
ஓடமாய் சலசலபவள்

இன்னும் இரண்டு அடிகள்
முன்னால் வைத்தால் தன்
முன்னிரண்டு மலர்களை
பரிசாக கேட்டிடுவானோ என்று
பின்னோக்கி நகர்கிறாள்
பெண்மை எனும் நாணம்
கொண்டு நாணம் கொண்டு..........!!!

எழுதியவர் : மேகலை (27-Feb-19, 4:27 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : aval abbadiththan
பார்வை : 420

மேலே