ஒரு கசாப்புக் கடையில் காலையில்
காலை நேரத்தில் ஒரு கசாப்புக் கடையில்
கசாப்புக் கடை
ஆட்டை வெட்டி
சதையை தொங்க விட்டிருந்தான்
கொம்புடன் கிடாத் தலையும் அமர்ந்திருந்தது
அழகாக வாடிக்கையாளனுக்காக ...
வெட்டி வெட்டிக் கொடுத்து
எல்லாம் விலை போனது !
சென்றேன் அங்கே
மரத்திண்டில் ஒரு பூவை வைத்தேன்
வியாபாரம் முடிஞ்சப்பறம்
பூசை போடுதீயளோ என்றான் இளக்காரமாக
இல்லை இல்லை
உனது கடை கசப்பு
இப்பொழுது அது கசாப்பூ என்றேன்
அய்யய்யோ கசாப்புக் கடையை
பூக்கடையா மாத்தப் பாக்கிகளோ ?
வெட்டுது வேற கட்டுது வேற
சைவமா ....பிரீயா இட்டிலி அனுப்பி வெக்கிறேன்
அசைவமா ---பிரீயா ஆட்டுக்கறியே அனுப்பி வெக்கிறேன்
என் பொழப்பக் கெடுத்திடீதாக சாமி ..என்று பதறினான் கசாப்பியன் !
விளக்கம் :
காவியம் எழுதியவன் காவியன்
நாடகம் எழுதியவன் ஷேக்ஸ்பியன்
கசாப்பு வெட்டுபவன் கசாப்பியன் !