மரதாபிமானம்

முறுக்கு மீசை
மிடுக்கு உடம்பு
மரம் வெட்ட
கோடரியுடன்
உச்சிக்கு சென்றான் ...
மெல்ல மெல்ல
கொத்தி கொத்தி
கொலைசெய்து கொண்டிருந்தான் ..
சட்டென நிலை தடுமாறி
சறுக்கி கீழே வந்தவனை
மரத்தின் வலதுகை தாங்கிப்பிடித்து
கிளைகளால் தலை கோதிவிட்டது.....

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (28-Feb-19, 10:55 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 213

மேலே