கடவுள் யார்

நம் இந்து கலாச்சாரப்படி
நாம் வணங்கி துதிப்பது
பல கடவுளர்கள் அவர்களில்
சிலர் பெண் தெய்வங்களும் கூட
ஆனால் ஒன்று யோசித்து பார்த்தால்
கடவுள் ஒன்றே , என்பது இதன் பின்
இருக்கும் தத்துவம் என்பதும் புலனாகும்
ஹரிஹரன், வேங்கடசுப்ரமணியன் , சிவராமன்
லக்ஷ்மிநாராயணன், சிவபார்வதி என்றெல்லாம்
கடவுளர்களை சேர்த்து பெயர்சொல்லி துதிப்பது
ஏன் என்று யோசித்துப்பாருங்கள் புலப்படும்
அதில் இதன் தத்துவம்- கடவுள்பெயர் பல
உருவங்களும் பல பல என்பது நாம் நமக்கு
தோன்றும் உருவை மனதில் ஏற்றி கடவுள்
என்று த்யானிக்கவே, ஆயின் கடவுள் ஒருவனே
அவன் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன்
என்பதே அவன்பெண் அல்ல ஆண் அல்ல அலி
அல்ல அவன் ஓர் பெரும் சக்தி ஆக்க,காக்க
அளிக்கும் சக்தி எங்கும் வியாபித்திருக்கும்
புருஷோத்தமன், விஷ்ணு, அவன்/அது/அவள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Mar-19, 9:47 am)
Tanglish : kadavul yaar
பார்வை : 357

மேலே