கவிஞரே நீர் தானா

ஆண்மை, தாய்மை இரண்டும் கொண்ட
விந்தையான மனிதர் நீர் தானா?

புதிய உலகை நாளை பிரசவிக்க
பிறந்தவரும் நீர் தானா?

அழிந்து வரும் பண்பாட்டை
கட்டிக் காப்பவரும் நீர் தானா?

கலங்கி வரும் கண்ணீரை கவிதைக் கைகளால் துடைப்பவரும் நீர் தானா?

பாரதியின் பின்னால் வெற்றி நடை
போட்டவரும் நீர் தானா?

மாண்புமிகு மதவாதிகளின் மத வெறியை
ஒழித்தவரும் நீர் தானா?

காலம் காலமாய் நாம் அணிந்த கறுப்புச் சட்டையை கழட்டியவரும் நீர் தானா?

பழைய சொற்களோடு பதுங்காது புதிய சொற்களோடு போராட வந்தவரும் நீர்
தானா?

காலம் அழிக்க முடியாத கவிதைகளை இந்த கலியுகத்தில் படைத்தவரும் நீர் தானா?

கவிஞரே! நிச்சயம் எதிர்காலம் போற்றும்
விந்தையான மனிதர் நீர் தான்.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (4-Mar-19, 12:37 pm)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
பார்வை : 154

மேலே