ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ!

கவிஞர் இரா. இரவி.

உடலால் வாழ்ந்தது 39 ஆண்டுகள்
பாடலால் நூற்றாண்டு கடந்து
வாழும் பாரதி!

செய்துவிட்டு மன்னிக்க வேண்டுவதை விட
செய்யாமல் இருப்பது சிறப்பு
தவறு.

ஒரு மாலை இருந்தால் புதுவண்டி
பல மாலைகள் இருந்தால்
இறுதிப்பயணம்!

ஆடிப்பட்டம்
தேடி விதைக்க
இல்லை தண்ணீர்!

வரதட்சணையாக வாங்கிய
வாகனத்தில் வாசகம்
மாமனாரின் அன்புப்பரிசு!

கூழானாலும் குளித்துக் குடி
குளித்து விட்டான் ஏழை
கூழ்?

உணவு இல்லை ஏழைக்கு
உணவே தொல்லை
பணக்காரனுக்கு!

காணாமல் போகிறார்
கேள்வி கேட்டவர்
மக்களாட்சி?

இலையை கிழிக்கிறது
விரல்கள் இன்றியே
காற்று!

துண்டு விழுகின்றது
வருடா வருடம்
நிதிநிலை அறிக்கையில்!

இருந்தால்
அதிசயமானது
கூட்டுக்குடும்பம்!

காக்கும் உடல்நலம்
வாழை இலையின்
பச்சையம்!

தண்ணீர் குறைய
தண்டும் குறைந்தது
தாமரை!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Mar-19, 6:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 203

மேலே