உலக மகளிர் தினமும் இன்றைய பெண்ணும்
இந்த நூற்றாண்டின் பெண்
அதோ போகிறாள் என் முன்னே
சுதந்திர பறவையாய் மனதில் எண்ணி
பார்ப்பதற்கு அவள் suthandhiramaai ,
நவயுகப் புதுப் பெண்ணாய் காட்சியளிக்கிறாள்
உண்மையில் அவள் எங்கும் கட்டுப்பட்டே இருக்கிறாள்
கல்வியிலும் பணிபுரியும் அலுவலகத்திலும்
இவள் ஆடவர்க்கு ஒரு போதும் குறைந்தவள் அல்லள்
ஆணின் அகந்தை ஒரு போதும் இதை ஏற்பதில்லை
இத்தனையேன் நேற்றுவரை வீட்டிலேயே
கைதிபோல் அடைப்பட்டு கிடந்த பெண்ணவள்
இன்று எங்கும் எதிலும் முன்னேறி இருக்கிறாள்
ஆடவருக்கு இணையாக ஒருபடி மேலாகவும்
இவள் விமானம் ஒட்டுகிறாள் இன்று
ஒலிம்பிக்கில் பளு தூங்குகிறாள் ஆணுக்கு
நிகராய் ஓடுகிறாள், குஸ்தி போடுகிறாள்
ஆனாலும் இவள் ,கட்டுண்டுதான் இருக்கிறாள்
சரிநிகர் என்று இவள் கூறினால் எங்கும் எதிர்ப்பே
அலுவலகத்தில், நாடகம், சினிமா அரங்கில்
பாடல், ஆடல் என்ற எல்லாத் துறையிலும் இவள்
முன்னேற்றத்தில் ஆடவருக்கு பொறாமை, அசூயை
பாலியல் துஷ்ப்ரயோகம் கொடுமைகள் வன்மம்
என்று சொல்லொணா துன்பங்கள் இவளை
ஆட்டிவைப்பவை , இதை அவள் தட்டிக்கேட்டால்
எல்லாம் இலக்கவேண்டிய நிலைமை...பாவம்
இதை மீறி ….மீ டூ தேடி முறையிட்டால்
அதைப்படித்து ரசிப்பவரே அதிகம் …..நியாயம்
யார் வழங்குவர் இவளுக்கு …….பாவம்
இன்றைய பெண் …...இவள் சுதந்திர பறவையாய்
காட்சி தந்தாலும் 'கட்டுண்ட' பறவையே
தாயாய்ப் பெண்ணைப் போற்றி புகழும் மாந்தர்
சக்தியாய் கோயில்தோறும் தொழும் இவர்கள்
நிஜ வாழ்க்கையில் பந்தாடுவதேன் அவள்
வாழ்க்கையில் …. பெண் வாழ்ந்திடவேண்டும்
நிம்மதியாய் தாயாய் அந்த கோயில் தெய்வமாய்
நாமெல்லாம் உய்யவே …..பெண்ணில்லையெனில்
நாமில்லையே