வாழும் தேவதைகளுக்கு வாழ்த்துகள்
பத்து திங்கள் எனை சுமந்து;
பட்ட வலி தனை பொறுத்து;
பட்டு பூச்சியினும் மென்மையாய்,
பத்திரமாய் ஈன்றெடுத்தாய்;
என் முகம் பார்த்தே எனை உணரும்,
என் உயிரான என் இறைவிக்கும்,
சின்ன சின்ன சண்டையிட்டாலும்,
சிரிச்சு பேச மறந்ததில்ல;
புளியமரத்து தேன் மிட்டாய்,
பகிராம நீயும் உண்டதில்ல;
அரவணைப்பில் அன்னையாய்,
அறிவுரையில் ஆசானாயிருக்கும் என் உடன்பிறப்புக்கும்,
மதிய உணவு வேளையிலே,
மண்ணை பார்த்து நிக்கயிலே,
தான் கொண்டு வந்த சோத்து சட்டி,
அவிழ்த்து நீயும் எனக்கு ஊட்டி,
பள்ளிக்கூடம் முதல் பருவமடைந்த காலம்வரை,
என்னோடு பயணிக்கும் என் அன்பு தோழிக்கும்,
தான் வளந்த வீட்டை விட்டு,
பாசம் காட்டும் பெற்றோரை விட்டு,
உன் உயிர்நாடியாய் நானும்,
என் உயிர் நாடியாய் நீயும்,
என் அன்பு மொத்தமும் குத்தகைக்கு எடுக்க
எனை தேடி வரவிருக்கும்,
எதிர்கால என் பாதிக்கும்,
சகிக்க முடியா சீண்டல்களை,
கேளாத கொச்சை வார்த்தைகளை,
அனுதினமும் சமாளித்து,
அடியெடுத்து முன்னேறி வரும்,
என் உடன் பிறவா சகோதரிகளுக்கும்,
என் இதயம் கனிந்த,
மகளிர் தின வாழ்த்துகள்!!!