காதல் தம்பதிகள்
காதல் தம்பதிகள் 💔
இல்லறம் நல்லறமாக சென்றது
இரண்டே பேர்
இனிய வாழ்க்கை
காசு இல்லை என்றாலும் கவலையில்லை
பொருள் இல்லை என்றாலும் அளவில்லா அன்பு நிறைந்திருந்தது ஒரு வேளை சாப்பாடு தான்
திருப்தியாக சாப்பிட்டோம்.
காதல் மொழி பேசி
காலத்தை ஓட்டினோம்
இன் சொல் பகிர்ந்து
இனிமையாக இருந்தோம்
இருவரும் பேசிய
கவிதையின் பலன்
உயிராக
அவள் வயிற்றில்
புதிய ஜீவன் வருகைக்கு புண்ணகையுடன்
காத்திருந்தோம்.
மருத்துவர் சொன்ன தேதி முன்பே
இடுப்பு வலி வந்தது
இரவு நேரம்
உதவிக்கு சொந்தம் இல்லை பந்தமும் இல்லை
அக்கம் பக்கம் துணையுடன்
மருத்துவ மனையில்
அவள் அனுமதி.
அரசாங்க மருத்துவமனை
எனக்கு அனுமதி உள்ளே கிடையாது.
விடிய, விடிய கொட்டும் பணியில் நான் வெளியே
பிரசவ வலியில் அவள் உள்ளே
மருந்துக்கு கூட உறங்காமல்
கொட்ட கொட்ட வழித்திருந்தேன்.
பகல் இரவுக்கு விடை
கொடுத்தது.
சுரீர் என்று கதிரவன்
ஒளி வீச
புல் மீது முத்துக்களாக படுத்துறங்கிய பணி துளிகள்
மாயம் ஆனது
காலை மணி எட்டு கடந்தது.
என்ன ஆனது அவளுக்கு,
என்ன நிலையில் அவள்
உண்மை நிலவரம் என்ன
விடையில்லை
பதட்டத்தின் உச்சம்
நிதானம் இழக்கும் தருணம்
வந்தாள் வயதான பெண்மணி
என்னவள் பெயர் சொல்லி
அவள் கணவர் யார் என்றாள்
நான் தான் என்று அவளருகே ஓடினேன்.
பெண் குழந்தை பிறந்ததாக சொன்னாள்.
அனுமதியுடன் உள்ளே ஓடினேன்.
தேடினேன், கடைசியில் கண்டேன் என் கண்மனியை
காண கிடைக்காத காட்சி
அவள் சற்று முன்
பிறந்த எங்கள்
குழந்தைக்கு தாய்பால் கொடுத்து தன் தாய்மையை உணர்ந்தாள்.
ஆணந்த கண்ணீரில் நான்.
- பாலு.