திருடர்கள் எச்சரிக்கை

           திருடர்கள் எச்சரிக்கை

இன்று முதல்
காக்கைகளும்
கழுகுகளும்
வட்டமிடும் - உன்
வாக்கை பெற்று
உனக்கு
வாய்க்கரிசி போட....

பதுங்கி வரும்
பாம்புகள் - உன்
உரிமையெனும்
பால் குடித்து
படமெடுக்கும்
பசி தீர்ந்த
பின்பு.....

நீ
புசிப்பதற்கு
புல்லென்று
பல் இளிக்கும்
பாவிகள்
வெற்றிக்கு பின்
நாகொண்டு
வினவினால்
அவன்
விரல்கொண்டு
விழா எடுப்பான் - உன்
நாவிற்கு......

கஜாவிற்கு
வராத
எஜமானர்கள்
உனக்கு
விசா கொண்டு
வருவார்கள்
வாக்குச்சாவடி
செல்ல.....

நெஞ்சம் முழுதும்
நஞ்சு கொண்ட
வஞ்சக கூட்டம் - அதில்
மிஞ்சியது
உண்டென்றால்
விட்டு விடாதீர்
ஜனநாயகத்தின்
உயிர் காக்க...... 🙏🙏🙏

எழுதியவர் : உலையூர் தயா (11-Mar-19, 12:51 am)
பார்வை : 676

மேலே