கடல் கடந்த கடவுள்

பூட்டி வைத்த கோவிலுக்குள்ளே
கடவுள்

கடல் கடந்துப் போனது அந்த
கடவுளுக்கே வெளிச்சம்

குருடனும் அறிவானே அசலையும்
போலியையும்

பூஜித்தவன் ஊமையாகியும்
போனானோ?

உண்டியல் வயிறு மட்டும்
நிறம்பிக் கொண்டிருந்தால்

பாவம் அவன் மட்டும்
என்னசெய்வான்?

எழுதியவர் : நா.சேகர் (11-Mar-19, 10:52 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 512

மேலே